கூட்டம்

ஜீரோ பட்ஜெட்...

தமிழக விவசாயத்தைப் புரட்டிப் போட்ட அசத்தல் தொழில்நுட்பம் இது. 'கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் வடமாநில விவசாயிகள் 'ஜீரோ பட்ஜெட்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், இயற்கை வேளாண்மையில் கோலோச்சி வருகிறார்கள்’ என்ற செய்தியால் ஈர்க்கப்பட்ட விகடன் குழு, 'அப்படி என்ன தொழில்நுட்பம்?’ என்பதை அறிந்து கொள்வதற்காக 2006-ம் ஆண்டு அந்தப் பகுதிகளுக்குச் சென்றது. அங்கு சந்தித்த விவசாயிகளின் அனுபவங்களைக் கேட்க கேட்க, ஆனந்த அதிர்ச்சி அடைந்த குழு, 'இந்தத் தொழில்நுட்பம் தமிழக விவசாயிகளுக்கும் பயன்பட வேண்டும்’ என்ற அடிப்படையில், இதை 'ஆனந்த விகடன்’ இதழில் கட்டுரையாக வெளியிட்டது. அக்கட்டுரைக்கு தமிழக விவசாயிகள் கொடுத்த வரவேற்பு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. தொடர்ந்து, 2007-ம் ஆண்டு, 'பசுமை விகடன்’ இதழ் வெளிவரத் தொடங்கியதும், 'ஜீரோ பட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கரை முதன்முறையாக தமிழக விவசாயிகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தியது, 'பசுமை விகடன்’.

ஒரு யுகப்புரட்சியின் முதல் புள்ளியாக... திண்டுக்கல் வேலு மஹாலில் 2007-ம் ஆண்டு, செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இவ்வகுப்புக்கு, ஆர்வமுடன் அலைமோதி, அசரடித்துவிட்டனர் விவசாயிகள். இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியின் நிறைவில், நம்மிடம் பேசிய விவசாயிகள், ''இனி, விவசாயம் செய்து கரை சேர முடியாது... எப்படி சமாளிக்கப் போகிறோமோ? என்று கவலைப்பட்ட காலம் உண்டு. இந்த இரண்டு நாட்களாக பாலேக்கரிடம் பெற்ற பயற்சி, நம்பிக்கை தந்துள்ளது. இனி, வாழ்நாள் முழுக்க அச்சமில்லை'' எனத் தெரிவித்தார்கள். திண்டுக்கல்லைத் தொடர்ந்து, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 2007-ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 மற்றும் 2008-ம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் பயிற்சியாக... சுபாஷ் பாலேக்கர், தனது தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுத்தார். அதையடுத்து, பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல பாகங்களிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார் பாலேக்கர்.

பாலேக்கரை தமிழகத்துக்கு பசுமை விகடன் அழைத்து வந்து, ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்... 'தமிழக விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?’ என்பதை அறிந்து கொள்வதற்காக நமது குழு தமிழகத்தில் பயணித்தபோது, எதிர்பார்ப்புக்கும் மேலாகவே விவசாயிகளிடம் பரவி இருப்பதைப் பார்க்க முடிந்தது. கூடவே, பாலேக்கர் கற்றுக்கொடுத்த நுட்பங்களை தங்கள் சூழலுக்கு ஏற்றவாறு விவசாயிகள் மாற்றியும் பயன்படுத்திக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. பாலேக்கர் போட்டுக்கொடுத்த பாதையில், சாதனைப் பயணத்தை விவசாயிகள் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

விவசாயிகளிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக, முன்னோடி 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகளின் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம். 'இதற்கான முதல் கூட்டம் நாமக்கல்லில்தான் நடக்க வேண்டும்’ என அன்புடன் கேட்டுக் கொண்டனர், 'நாமக்கல் மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்க’ தலைவர் வி. சத்தியமூர்த்தி, செயலாளர் தில்லை சிவகுமார்.

அதன்படியே முடிவாக, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சத்தியமூர்த்தி சிறப்பாகச் செய்து கொடுக்க... மே 11-ம் தேதி, நாமக்கல், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில், 'ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்’ என்ற தலைப்பில் அனுபவப் பகிர்வு நடைபெற்றது. வாழை, தென்னை சாகுபடி குறித்து, உடுமலைப்பேட்டை பாலகிருஷ்ணன்; நெல் சாகுபடி பற்றி ஆலங்குடி பெருமாள்; கரும்பு சாகுபடி பற்றி திருச்செங்கோடு நடேசன்; சம்பங்கி சாகுபடி பற்றி திண்டுக்கல் மருதமுத்து ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 600 விவசாயிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்... சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கியின் மண்டல மேலாளர் பூவராகன் பங்கேற்றார். வாழை, தென்னை, நெல், கரும்பு, சம்பங்கி ஆகிய பயிர்களில் சாதனை படைக்கும் ஜீரோ பட்ஜெட் முன்னோடி விவசாயிகள் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் படமாகத் திரையிடப்பட்டன. 'ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பத்தில் வாழை சாகுபடி செய்யும் பாலகிருஷ்ணன், ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகளை செயல்முறை விளக்கத்தோடு திரையில் விளக்கிவிட்டு... வாழை சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாகப் பேசத் தொடங்கியதும், 'வாழை சாகுபடியில் இத்தனை நுட்பங்களா..?’ என ஆச்சரியத்தில் விழிகளை விரித்தனர், விவசாயிகள்.

அந்த நுட்பங்களும், மற்ற மூன்று வெற்றி விவசாயிகளின் அனுபவங்களும்... அடுத்த இதழில்...

- தொடரும்