Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

விதை உற்பத்தி!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 12-ம் தேதி 'மீனிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்’, 17-ம் தேதி 'பசுந்தீவனப் பயிர்கள் சாகுபடி’, 19-ம் தேதி 'நாற்றங்கால் தயாரிப்பு’, 24-ம் தேதி 'சீர்மிகு தென்னை சாகுபடி’, 26-ம் தேதி 'நெல்லில் தரமான விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04367-261444

 தேனீ!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 12-ம் தேதி 'தேனீ வளர்ப்புத் தொழில் நுட்பங்கள்’, 19-ம் தேதி 'மண்வள மேலாண்மை,’ 20-ம் தேதி 'இயற்கை விவசாயம்,’ 27-ம் தேதி 'காளான் வளர்ப்புத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

தண்டோரா

ஆவாரை சாகுபடி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 24-ம் தேதி 'எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்’, 25-ம் தேதி 'வெள்ளாடு வளர்ப்பு’, 27-ம் தேதி 'ஆவாரை சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

மக்காச்சோளம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 13-ம் தேதி 'தீவனப் பயிர்களில் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’, 17-ம் தேதி 'மக்காச்சோள சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 18-ம் தேதி மசாலா பொடி தயாரித்தல் 25-ம் தேதி மண்புழு உர உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

முயல்!

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 19-ம் தேதி 'நாட்டுக் கோழி வளர்ப்பு’ 26-ம் தேதி 'முயல் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

வெள்ளாடு!

மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 19-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

தண்டோரா

அசோலா!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 12-ம் தேதி 'வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் நோய் பராமரிப்பு முறைகள்’, 24-ம் தேதி 'அசோலா உற்பத்தி முறைகள் மற்றும் கால்நடைத் தீவன உணவளிக்கும் முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

தீவன மேலாண்மை!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூன் 18-ம் தேதி பருவ காலங்களில் கால்நடைப் பராமரிப்பு முறைகள்; 19-ம் தேதி கால்நடைத் தீவன மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141.

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism