Published:Updated:

700 கோடி ரூபாய்? ஏமாற்றும் ஆலைகள்... ஏங்கும் விவசாயிகள்!

காசி. வேம்பையன் படங்கள்: எஸ். தேவராஜன், கா. முரளி

700 கோடி ரூபாய்? ஏமாற்றும் ஆலைகள்... ஏங்கும் விவசாயிகள்!

காசி. வேம்பையன் படங்கள்: எஸ். தேவராஜன், கா. முரளி

Published:Updated:

பிரச்னை

'சாமி வரம் கொடுத்தாலும்... பூசாரி வரம் கொடுக்காது’ என்பார்கள். இந்தப் பழமொழி, காலகாலமாக கரும்பு விவசாயிகளுக்கு வெகுப் பொருத்தமாக இருக்கிறது. நெல்லிக்குப்பம், முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், சொல்வதைக் கேட்டால், இதன் காரணம் உங்களுக்குப் புரியும்!

''நடப்பு ஆண்டு (2013 அக்டோபர் -2014 செப்டம்பர் வரையிலான காலகட்டம்) கரும்புக்கான மத்திய அரசின் பரிந்துரை விலை அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு டன் கரும்புக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2,550 ரூபாய் என தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இதன்படி பணத்தைக் கொடுக்கின்றன. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகளில்

20 ஆலைகள், கடந்த ஆண்டு விலையான 2,250 ரூபாயைத்தான் வழங்குகின்றன.

700 கோடி ரூபாய்? ஏமாற்றும் ஆலைகள்... ஏங்கும் விவசாயிகள்!

4 தனியார் ஆலைகள், 2,100 ரூபாயை மட்டுமே கொடுக்கின்றன. பெரம்பலூரில் இருக்கும் தனலட்சுமி-சீனிவாசன் சர்க்கரை ஆலை மட்டும்தான் முழு விலையைக் கொடுக்கிறது.

இதைப்பற்றி பல்வேறு சங்கங்களில் இருந்தும் புகார் மனுக்கள் அனுப்பப்படவே, 'விலை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அனைத்து

700 கோடி ரூபாய்? ஏமாற்றும் ஆலைகள்... ஏங்கும் விவசாயிகள்!

மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பினார் அன்றைய சர்க்கரைத்துறை இயக்குநர் சி.வி. சங்கர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இதைச் சொன்னதும், 'ஜூன் மாதத்துக்குள் மீதி பணத்தை வழங்காவிட்டால், சம்பந்தபட்ட ஆலைகளுக்கு சீல் வைப்பதோடு, சொத்துக்களும் ஜப்தி செய்யப்படும்’ எனக் கடுமையாக எச்சரித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், தனியார் ஆலைகள், இந்த ஏப்ரல் வரையிலுமே 700 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இதனால், கூட்டுறவுச் சங்கத்தில் கிடைக்கும் வட்டியில்லா கடன் சலுகையை எங்களால் பயன்படுத்த முடியாமல் போகிறது'' என்று வேதனைப்படுகிறார் கோதண்டராமன்!

''நஷ்டத்தில் இயங்கக்கூடிய ஆலைகள்கூட முழுமையான பணப்பட்டுவாடா செய்து விட் டன. ஆனால், லாபத்தில் இயங்கும் ஆலைகள் எங்களை ஏமாற்றப் பார்க்கின்றன'' என்று நொந்து கொள்கிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் 'சுவாமிமலை’ சுந்தர விமலநாதன்.

சர்க்கரைத்துறையின் இயக்குநர் பொறுப்புக்கு புதிதாக வந்திருக்கும் மகேசுகாசிராஜன் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றபோது, ''உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம். விரைவில் பணம் கிடைக்கச் செய்வோம்'’ என்று உறுதியான குரலில் சொன்னார்.

பார்ப்போம், என்ன நடக்கிற தென்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism