Published:Updated:

மாசு அகற்றும் மாவிலைத் தோரணம் !

மாசு அகற்றும் மாவிலைத் தோரணம் !

மாசு அகற்றும் மாவிலைத் தோரணம் !

மாசு அகற்றும் மாவிலைத் தோரணம் !

Published:Updated:

மண்புழு மன்னாரு

மாத்தி யோசி

'மூங்கில் பூ பூத்தா, விவசாயம் செழிக்காது’னு ஒரு நம்பிக்கை, நம்ம விவசாயிங்ககிட்ட இருக்கு. '40 வருஷத் துக்கு ஒருமுறைதான் மூங்கில் பூக்கும். இந்தப் பூ, மூங்கில் நெல்லா மாறும். இப்படி மூங்கில் விளைஞ்சா, எலிகளுக்குக் கொண்டாட்டம். இந்த மூங்கில் நெல்லுல இருக்கற அரிசியைச் சாப்பிடுறதுக்காக எலிங்க அதிகப்படியா வரும். இந்த அரிசியைச் சாப்பிட்டா, எலிங்களோட இனப்பெருக்கம் அதிகரிக்கும்'னு விஞ்ஞானிங்க சொல்றாங்க. இப்படி எலிங்க அதிகமாயிட்டா... அக்கம்பக்கமிருக்கிற பயிர்களைச் சேதப்படுத்தும். இதனாலதான், மூங்கில் பூத்தா... விவசாயம் செழிக்காதுனு சொல்லியிருக்காங்க. இந்த மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் சோறு வடிச்சி சாப்பிடுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்ம ஊர்ல நாலு பேரு கூடுற எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், மாவிலைத் தோரணத்துடன், வாழை மரத்தைக் கட்டறது வழக்கம். இதுக்கு கிராமம், நகரம்னு பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் கிடையாது. ஏதோ சம்பிரதாயம்னு சிலர் நினைக்கலாம். இன்னும் சிலர் இதை எதுக்காக செய்யறோம்னு தெரியாம செய்துக்கிட்டு இருக்கோம். மாவிலை அருமையான கிருமிநாசினி. வாசல்ல தோரணமா கட்டும்போது அந்த இடத்துல கிருமிங்க உள்ள நுழையாது. விழா நேரத்துல, நோய்த்தொற்று உள்ளவங்ககிட்ட இருந்து, மத்தவங்களுக்கு பரவாம தடுக்கும்.

மாசு அகற்றும் மாவிலைத் தோரணம் !

அடுத்து, வாழை மரம். வீட்டுல ஏதாவது விழா நடக்கும்போது, தேள், பூரான், பாம்புனு ஏதாவது தீண்டி வைச்சிடும். இப்போ மாதிரி, அந்தக் காலத்துல மருத்துவமனை வசதி கிடையாது. அதனால, முதலுதவியா வாழை மரப் பட்டையில இருந்து, சாறு பிழிஞ்சிக் குடிக்கக் கொடுப்பாங்க. அதுக்குப் பிறகுதான், மருத்துவர்கிட்ட காட்டுவாங்க. அதனாலத்தான், வாழை மரம் கட்டுறதை இன்னிவரையிலும் கடைப்பிடிச்சிட்டு இருக்கோம். இனி, மாவிலைத் தோரணத்தையும், வாழை மரத்தையும் பார்க்கும்போது, முதலுதவிப் பெட்டியாதானே பார்க்கத் தோணும்!

மாம்பழ சீசன் தொடங்கியாச்சி. பளபளனு... கொழுகொழுனு இருக்கிற மாம்பழத்தைப் பார்த்தா உடனே சாப்பிடத்தோணும். ஆனா, அதை கல் வைச்சிப் பழுக்க வெச்சிருப்பாங்களோங்கற பயத்தோடவே சாப்பிட வேண்டியிருக்கும். கல் வெச்சி பழுக்க வெச்ச பழத்தைச் சாப்பிட்டா, புற்றுநோய் தொடங்கி, ஏராளமான நோய் வரும்னு டாக்டருங்க எச்சரிக்கை செய்றாங்க. கல் வைக்காமலே, மாம்பழத்தை சீக்கிரமா பழுக்க வைக்க முடியும். இந்த நுட்பம் தெரியாம, மாம்பழத்தை விஷமாக்கிட்டு இருக்காங்க. எந்த ஒரு பழத்தையும் பழுக்க வைக்க, எத்திலீன் வாயு வேணும். இதை செயற்கையா செய்ய வேண்டியதில்ல. இயற்கையாவே இந்த வாயுவை உற்பத்தி செய்ய முடியும். ஆப்பிள் பழத்துல எத்திலீன் வாயு அதிகம் இருக்கு. மாம்பழத்தோட, ஆப்பிள் பழத்தையும் சேர்த்து வெச்சா, மா சீக்கிரமா பழுக்கும். ஏற்கெனவே, பழுத்த மாம்பழத்தை, செங்காயோட வைச்சாலும், சீக்கிரமா பழுக்கும்.

மரவள்ளிக் கிழங்குச் செடியோட தழை, அருமையான பசுந்தீவனம். ஆனா, அதை முறையா பக்குவப்படுத்திக் கொடுக்கணும். மரவள்ளித் தோட்டம் வெச்சுருக்கிறவங்க... ஆடு, மாடுங்க செடியைக் கடிச்சிடக் கூடாதுனு உஷாரா இருப்பாங்க. காரணம், மரவள்ளித் தழையில 'சயனைடு’னு சொல்ற நச்சு இருக்கு. சயனைடு சாப்பிட்டா, எப்படி உடனே உயிர் போகுமோ, அதுமாதிரி, மரவள்ளித் தழையைச் சாப்பிட்ட கால்நடைங்களும் இறந்துபோகும். இதைத் தடுக்க, மரவள்ளித் தழையை நிழலில் 24 மணி நேரம் காய வைச்சிக் கொடுக்கலாம். அப்போ, நச்சுத்தன்மை குறைஞ்சிடும்.

மரவள்ளித் தழையை, கால்நடைங்களுக்குக் கொடுக்கிறதால தீவனச் செலவும் குறையும். மரவள்ளியில மகசூலும் அதிகரிக்கும். அதாவது, மரவள்ளித் தழையைக் கழிக்கும்போது, எல்லா சத்துக்களும் கிழங்குக்குப் போய் சேரும். இதனால, தழை உடைக்காத வயலைக் காட்டிலும், தழை உடைச்ச வயல்ல, கூடுதல் மகசூல் கிடைக்கும்.

ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனமா, தீவனப் புல் கொடுக்கறவங்க கவனத்துக்கு... சீக்கிரமா புல் விளையும்னு, யூரியாவை அள்ளிஅள்ளிப் போடாதீங்க. யூரியா போட்டா... தீவனப் பயிர் வேகமா வளரும். ஆனா, நீங்க போட்ட யூரியா, மண்ணை மட்டுமில்லீங்க.... அதை சாப்பிடற கால்நடைங்களுக்கும் நைட்ரேட் நச்சு பாதிப்பை ஏற்படுத்தும். கால்நடையால நடக்க முடியாது. சினையா இருந்தா, கருச்சிதைவு உண்டாகும். நடுங்கிக்கிட்டே இருக்கும். இந்த அறிகுறிங்க இருந்தா... நீங்க கொடுக்கிற தீவனத்துல நைட்ரேட் நச்சு இருக்குனு அர்த்தம்.

இயற்கை விவசாயம் செய்றவங்க கவனத்துக்கு... 'நம்ம கிட்டத்தான் நிறைய சாணம் இருக்கே'னு அதை நேரடியா பாசன நீரோட அளவுக்கு அதிகமா கலந்துவிடாதீங்க. இதனாலும், நைட்ரேட் நச்சுத் தன்மை வருமாம். அதனால, எதையும் அளவா பயன்படுத்துங்க. 'அளவுக்கு மிஞ்சினா, அமிர்தமும் நஞ்சாகிடும்ங்கிறது எவ்வளவு உண்மை பாருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism