Published:Updated:

இணையத்திலும் இனி, தேங்காய் விற்கலாம்!

ஞா. சுதாகர் படங்கள்: ரா. சதானந்த்

இணையத்திலும் இனி, தேங்காய் விற்கலாம்!

ஞா. சுதாகர் படங்கள்: ரா. சதானந்த்

Published:Updated:

சந்தை

 தேங்காய் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில், www.coconutindia.com என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார், பெங்களூரில் வசித்து வரும் விஜயகுமார். தேங்காய், கொப்பரை, மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய்ப் பொருட்கள், வாங்குபவர், விற்பவர்களின் தொலைபேசி, செல்போன் எண்கள்... என தேங்காய்க்கான முழுமையான தரவுத்தளமாக, தேங்காய் விவசாயிகள், தேங்காய் சார்ந்து இயங்கும் நுகர்வோர்களுக்குப் பயன்தரும் இணையதளமாக இது இயங்குகிறது. தென்னை சார்ந்த பொருட்களை விற்கவும் இது பாலம் அமைத்துக் கொடுக்கிறது.

இந்த முயற்சி குறித்து விஜயகுமாரிடம் பேசியபோது, ''என்னுடைய சொந்த ஊர், கோயம்புத்தூர். நான் தற்போது பெங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரிகிறேன். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு விவசாயியிடம் 3 ரூபாய் முதல் 5 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படும் தேங்காய், சந்தையில் 10 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. அதுவே, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இணையத்திலும் இனி, தேங்காய் விற்கலாம்!
இணையத்திலும் இனி, தேங்காய் விற்கலாம்!

இதன் மூலம் லாபமடைவது இடைத்தரகர்கள் மட்டும்தான். இவர்களை ஒழித்துவிட்டால், நியாயமான விலைக்கு, நுகர்வோர்களால் பொருட்களை வாங்க முடியும். விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும். அந்த வகையில், வாங்குபவருக்கும், விற்பவருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த இணையதளத்தை ஆரம்பித்தேன்!

தென்னை, பெருவாரியான பகுதிகளில் பயிரிடப்படும் பயிர் என்பதால், அனைவருக்கும் பயன்படும் என்றுதான் தேங்காயைத் தேர்வு செய்தேன். ஆரம்பத்தில், மாதத்துக்கு 10, 20 பேர்தான் இணையதளத்தைப் பார்த்தார்கள். தற்போது, தினமும் 300 பேர் வரை பயன்படுத்துகிறார்கள். விற்பனையாளர்கள் பதிவு செய்துகொள்ள மட்டும் கட்டணம் உண்டு. தகவல்கள் தெரிந்து கொள்பவர்களுக்கு கட்டணம் கிடையாது'' என்ற விஜயகுமார்,

''தகவல்கள் முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இதை தமிழுக்கு மாற்றும்படி பலரும் கோரியுள்ளனர். விரைவில் தமிழிலும் இந்த இணையதளம் செயல்படும்'' என்று சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism