Published:Updated:

''ஒரு டன் கரும்புக்கு 3,500''

கோரிக்கை வைக்கும் விவசாயிகள்... மனது வைக்குமா மத்திய அரசு? காசி. வேம்பையன்

''ஒரு டன் கரும்புக்கு 3,500''

கோரிக்கை வைக்கும் விவசாயிகள்... மனது வைக்குமா மத்திய அரசு? காசி. வேம்பையன்

Published:Updated:

பிரச்னை

எந்த பிரச்னை தீர்ந்தாலும்... கரும்புக்கான விலை பிரச்னை மட்டும் தீரவே தீராமல் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த பருவத்துக்கான (2015-16) கரும்பு விலை நிர்ணய முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம், மத்திய வேளாண் துறையின் கீழ் செயல்படும் 'மத்திய விவசாய விளைபொருள்கள் விலை நிர்ணய ஆணைய’த்தின் சார்பில்... ஜூன் 16 மற்றும் 17 தேதிகளில் டெல்லி க்ருஷி பவனில் நடந்தது.

ஆணையத் தலைவர் டாக்டர் அசோக் விஷன்தாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் விவசாயத்துறை, சர்க்கரை ஆணைய அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து, பங்கேற்ற அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் நாம் பேசியபோது, ''வேலையாட்கள் கூலி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, கரும்பு வெட்டுக்கூலி உயர்வு, அதிகப்படியான வாகன வாடகை... எனப் பல பிரச்னைகளைச் சமாளித்து, கரும்பு உற்பத்தி செய்கிறார்கள் விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு டன் கரும்புக்கு  3,500''

இதற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலை போதுமானதாக இல்லை. 2014-15 கரும்புப் பருவத்தில், ஒரு டன்னுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே நிர்ணயித்து கரும்பு விவசாயிகளை வஞ்சித்துள்ளது, மத்திய அரசு. எனவே, விவசாயிகளின் இடர்பாடுகளைப் புரிந்து கொண்டு, அடுத்த பருவத்திலாவது (2015-16) ஒரு டன்னுக்கு 3,500 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசின் முடிவு என்ன என்பது 3 மாதங்களுக்குள் தெளிவுபடுத்தப்படும் என்று ஆணையத்தின் தலைவர் உறுதி அளித்துள்ளார்'' என்று சொன்னார்.

'புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை காட்டும்’ என நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் தெரிவித்தார், பிரதமர் மோடி. அதை செயலில் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். அது, இனிப்பான கரும்பிலிருந்து தொடங்கினால், விவசாயிகள் நிச்சயமாக மகிழ்வார்கள். மாறாக, 'இரண்டு ஆண்டுகளுக்கு கசப்பு மருந்து குடிக்க வேண்டும்' என்று வெவ்வேறு விஷயங்களுக்கு தான் சொன்னதை, கரும்பு விவசாயி களிடமும் சொன்னால்... நிலைமை பரிதாபம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism