பயிற்சி

'நம்மாழ்வாரின் இனியெல்லாம் இயற்கையே!' என்ற தலைப்பில், இயற்கை விவசாயிகளின் அனுபவப் பகிர்வு, ஜூன் 15 அன்று, கரூரில் நடைபெற்றது. இந்த ஒருநாள் நிகழ்வை பசுமை விகடனுடன் இணைந்து கரூர், வள்ளுவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்!

வரவேற்புரையாற்றிய 'முன்னோடி இயற்கை விவசாயி' மனோகரன், ''இயற்கை வேளாண் கல்லுரி அமைக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஆசைப்பட்டார். அது, கரூர் மாவட்டத்தில் அமையவேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்கு அனைவரும் கைகொடுப்போம்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

வள்ளுவர் அறக்கட்டளை தலைவர் க. செங்குட்டுவன், தன்னுடைய தலைமை உரையில், ''நம்மாழ்வார் இந்த கரூர் மண்ணில்தான் விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற அனுபவ விவசாயிகள் இங்கு வந்து, அவர் சொல்லித் தந்த தொழில்நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மைவிட்டு நம்மாழ்வார் மறைந்தாலும், அவர் கற்றுத்தந்த இயற்கை வேளாண் தொழில்நுட்பம் வாழையடி வாழையாகப் போய் சேர வேண்டும். அதன் தொடக்கம்தான் இந்தக் கருத்தரங்கு. அவர் வழி நடப்பவர்கள் எல்லோரும் இணைந்து, இதை செயல்படுத்த வேண்டும்'' என்று அழகாக விதை போட்டார்!

அடுத்து பேசிய 'முன்னோடி இயற்கை விவசாயி', ப. தங்கராஜ், ''அடி காட்டிலே... நடு மாட்டிலே... நுனி வீட்டிலே..! என்கிற விடுகதையை மையமாக வைத்தே இயற்கை விவசாயத்தைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர், நம்மாழ்வார். நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைக்கொண்டு இடுபொருட்கள், பூச்சிவிரட்டிகள், பயிர் ஊக்கிகள் உள்ளிட்ட பயிர்ப் பாதுகாப்புக் கலவைகளைத் தயாரித்து, நாம் தற்சார்பு விவசாயிகளாகத் திகழும் வித்தையைக் கற்றுத் தந்தவர். பஞ்சகவ்யா என்கிற அற்புதத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து, நஞ்சில்லா வேளாண் மைக்கு வித்திட்டவர். தன்னைத்தானே பரிசோதனை செய்துகொண்டு, வெற்றி பெற்றதை மற்றவர்களுக்குச் சொன்னவர். அவர் கற்றுத்தந்த இந்த வாழ்க்கைக் கல்வியை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம். இதற்கு முன்ஏர் பிடிக்க, கரூர் இயற்கை ஆர்வலர்கள் தயார்'' என்று ஓங்கி ஒலித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, 'முன்னோடி இயற்கை விவசாயி' கேத்தனூர் பழனிச்சாமி, நாட்டு ரக காய்கறி விதைகளை வழங்கினார். இங்கே இயற்கை விவசாயிகள் எடுத்து வைத்த அற்புதமான அனுபவப் பகிர்வுகள்... அடுத்தடுத்த இதழ்களில் இடம்பிடிக்கும்!