Published:Updated:

மண்புழு மன்னாரு

கலப்படத்தை, நீங்களே கண்டுபிடிக்கலாம்! ஓவியம்: ஹரன் படம்: வீ. சிவக்குமார்

மண்புழு மன்னாரு

கலப்படத்தை, நீங்களே கண்டுபிடிக்கலாம்! ஓவியம்: ஹரன் படம்: வீ. சிவக்குமார்

Published:Updated:

மாத்தி யோசி

நாம கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யுற விவசாய விளைபொருள்கள்ல, கலப்படம் பண்ணி காசு பார்க்கிற வேலை நிறையவே நடக்குதுங்க.

கலப்படப் பொருளை சாப்பிட்டா, பணம் மட்டுமில்லீங்க, உடம்புக்கும் உபத்திரவம் உண்டாகும். என்னதான் நாம உற்பத்தி செய்யுற விவசாயியா இருந்தாலும், சமயங்கள்ல அவசரமா தேவைப்படற பொருளை கடையில வாங்கத்தான் வேண்டியிருக்கும். அதனால, கலப்படப் பொருளை எப்படி கண்டுபிடிக்கிறதுனு தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லதுதானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்கரையில சுண்ணாம்புத் தூள் சேர்த்து விற்கிறது உண்டு. இதைக் கண்டுபிடிக்க, ஒரு கிளாஸ் தண்ணியில, ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு கலக்குங்க. கலப்படமா இருந்தா, அடியில சுண்ணாம்பு படிஞ்சிருக்கும். நல்ல சர்க்கரையா இருந்தா, எல்லாம் கரைஞ்சிடும்.

தேங்காய் எண்ணெயில, வேற எண்ணெயைக் கலந்துவிடறாங்க. இதைச் சுலபமா கண்டுபிடிக்கலாம். அந்த எண்ணெயை ஒரு மணிநேரம் ஃபிரிட்ஜ்ல வைங்க. தேங்காய் எண்ணெயா இருந்தா, உறைஞ்சுடும். உறையாம இருந்தா... கலப்படம்னு உஷராயிடுங்க.

மண்புழு மன்னாரு

கலப்படத்துல, தேன் கலப்படம்தான் பிரபலமா இருக்கு. கண்ணாடி டம்ளர்ல நிறைய தண்ணீர் எடுத்துக்குங்க. அதுல ஒரு சொட்டுத் தேனை விடுங்க. அது கரையாம கலங்காம, அப்படியே அடியில படிஞ்சா சுத்தமான தேன். கலப்படம் இல்லாத தேன், எவ்வளவு நாள் இருந்தாலும், எறும்பு மொய்க்காது. ஒரு சிறிய துண்டு செய்தித் தாளை எடுத்து, அதுல, ரெண்டு சொட்டு தேனைவிட்டா, அது பேப்பரோட, பின்புறம் ஊறி கசியாம இருக்கும். நீங்க சுத்தமான தேனை பொட்டலம் கட்டிகூட எடுத்துக்கிட்டுப் போகலாம். போலியா இருந்தா, கசிஞ்சி, பேப்பருக்கு வெளியில வந்துடும். அடுத்த சோதனை, நல்ல மண்ல ஓரிரு சொட்டுத் தேனை விடுங்க. ஒரு நிமிஷம் கழிச்சி, கீழ குனிஞ்சி, தேனை வாயால ஊதுங்க. தேன் மட்டும் உருண்டோடினா, அது சுத்தமான தேன். மண்ல இறங்கிடுச்சுனா, அது கலப்படம்தான்.

நாட்டுக் கோழி முட்டைக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இதைத் தெரிஞ்சிக்கிட்டு, பிராய்லர் கோழி முட்டையை, தேயிலைத் தண்ணியில நனைச்சு, பழுப்பு நிறமாக்கி, நாட்டுக் கோழி முட்டைனு விற்பனை பண்றதும் நடக்குது. அந்த முட்டையைத் தண்ணியில போட்டு வெச்சா, டீ சாயம் வெளுத்துடும்.

மண்புழு மன்னாரு

பால் கலப்படத்தைக் கண்டுப்பிடிக்கிறதைப் பார்க்கலாம். பால்ல தண்ணியைக் கலப்படம் செய்யுறது காலம், காலமா நடக்குது. இப்படி தண்ணிப் பாலைக் குடிச்சா, கை, கால் மூட்டு வலியில இருந்து, சிறுநீரகப் பிரச்சனை வரையிலும் வரும். ஏன்னா, தண்ணியில ஏரளமான தீமைசெய்யுற கிருமிங்க இருக்கும். அந்த கிருமிங்க பால்ல கலந்தவுடனே, பல மடங்கு பெருகி வளரும். இதைக் குடிச்சா உடம்புக்கு தொந்தரவு கொடுக்கும்.. ஒரு துளி பாலை எடுத்து, வழவழப்பான செங்குத்தான தளத்தில் வழியவிடுங்க. சுத்தமான பால், வெள்ளை கோடிட்ட மாதிரி வழியும். கலப்படப் பால், எந்த அடையாளமும் ஏற்படுத்தாம வழிஞ்சிடும்.

'டிகிரி காபி’ கடைனு நெடுஞ்சாலை முழுக்க கடை முளைச்சிருக்கு. 'டிகிரி காபி'னு ஏன் பேரு வந்துச்சி தெரியுமா? ரொம்ப வருஷத்துக்கு முன்ன கும்பகோணத்துல இருந்த ஒரு ஓட்டல்ல தரமான பாலை மட்டும்தான் வாங்குவாங்களாம். அதுக்காக, 'லேக்டோ மீட்டர்’னு சொல்ற பால் மானியை வெச்சுருப்பாங்களாம். பால் வந்தவுடனே, அந்த பால் மானியை வெச்சி, டிகிரி பார்ப்பாங்க. தண்ணி கலக்காமா இருந்தா, டிகிரி அதிகமா இருக்கும். தண்ணி கலந்திருந்தா டிகிரி குறைஞ்சுடும். இப்ப இருக்கற கடைகள்ல இப்படியெல்லாம் பரிசோதனை செய்றாங்களானு பார்த்து, நம்பிக்கையோட டிகிரி காப்பி சாப்பிடுங்க!

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்புலகூட கலப்படம் நடக்குது. இந்தக் கலப்படக் கதை தனி. அதாவது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு வாங்கிட்டு வந்து, ரெண்டு மூணு, மாசத்துல பூச்சி புடிக்கணும். இல்லைனா, அதுல நிறைய ரசாயனம் கலந்திருக்கும் உஷார். நல்ல உணவுப் பொருள்னா, அது குறிப்பிட்ட காலத்துல கெட்டுப் போயிடணும். ரொம்ப நாளைக்கு இருந்தா, அதுல சத்து இருக்காது. உடம்புக்கும் கெடுதலைத்தான் உருவாக்கும்.

குழந்தைங்க ஆசையா சாப்பிடற ஐஸ்க்ரீம்ல கூட கலப்படம் வந்தாச்சுங்க. நல்லா வெள்ளை யாயிருக்கணும்னு வாஷிங் பவுடர் கலக்கறாங்க. ஐஸ் க்ரீம்ல சில துளி எலுமிச்சைச் சாறு விட்டா, குழிழ், குமிழா வரும். இந்த அறிகுறி இருந்தா... அது, கலப்படம்தான். அதைச் சாப்பிட வேணாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism