முன்னறிவிப்பு

'தென்மேற்குப் பருவமழை, ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்கு மேல் துவங்கும்' எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில்... தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையில் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், அவற்றுக்கான தடுப்பு முறைகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம்.

பூச்சி, நோய்க்கு சூடோமோனஸ்!

நெல் நாற்றங்காலில் இலைப்பேன், இலைச்சுருட்டுப்புழு, கூட்டுப்புழு, தத்துப்பூச்சி ஆகிய பூச்சிகள் தாக்குவதற்கும், இலைப்புள்ளி நோய் தாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், இப்பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலைத் தடுக்க முடியும். 20 சென்ட் அளவுள்ள நாற்றங்காலில், பன்னிரண்டரை கிலோ வேப்பம் பிண்ணாக்கை அடியுரமாக, இடவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் சூடோமோனஸைக் கலந்து, அக்கரைசலில் ஒரு கிலோ விதைநெல்லை 12 மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும். நடவுக்காக நாற்றுகள் தயாரானதும், அவற்றைப் பறிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு (48 மணி நேரம்) முன்பு... 30 கிலோ தொழுவுரத்துடன் ஒன்றரை கிலோ சூடோமோனஸைக் கலந்து, நாற்றங்கால் முழுவதும் தூவவேண்டும்.

நாற்றுக்களை சூடோமோனஸ் கரைசலில் நனைத்தும் நடவு செய்ய வேண்டும். 20 சென்ட் அளவு நாற்றங்காலில் உற்பத்தியான நாற்றுகளை, பறித்து, 25 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் ஓர் அங்குல உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி... அதில், இரண்டரை கிலோ சூடோமோனஸைக் கரைத்து, அதில் நாற்றுக்களை அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். பூச்சித்தாக்குதல் தென்பட்டால், வயலில் விளக்குப்பொறிகளை வைக்கலாம். 5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பருவமழை மேலும் தாமதமாவதால் வறட்சி தொடர வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ மற்றும் பல வகையான பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இடங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறி வைக்கலாம். 5% வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். 40 லிட்டர் தண்ணீரில்

1 கிலோ மீன் எண்ணெய் சோப் கரைத்துத் தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.