Published:Updated:

''கார்ப்ரேட்டுக்கும் வேலை செய்யும் கைப்பாவை நாங்கள்''

த. ஜெயகுமார்

''கார்ப்ரேட்டுக்கும் வேலை செய்யும் கைப்பாவை நாங்கள்''

த. ஜெயகுமார்

Published:Updated:

கூட்டம்

-இப்படி சொல்லி, இந்தியாவிலிருக் கும் வேளாண் பல்கலைக்கழகங்களின் வேதனையை வெளிச்சம் போட்டிருக்கிறார்... தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி.

ஜூன் 7 அன்று, வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் மாநில விதைத் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கே. ராமசாமி, ''தொழில்துறைக்கும், நகர்ப்புற வளர்ச்சிக்கும், செயற்கைக்கோள் ஏவுவதற்கும் ஒதுக்கப்படும் நிதியைவிட, விவசாயத்துக்குக் குறைவாகத்தான் ஒதுக்குகிறார்கள். விளைபொருட்களுக்கு, விலை நிர்ணயிக்க முடியாத நிலையில்தான், 67 ஆண்டுகளாக விவசாயிகள் வாடுகிறார்கள். இதை வெளியே சொல்வதற்குக்கூட யாரும் தயாராக இல்லை. கார்ப்ரேட்டுகளுக்கும் வேலை செய்ய வேண்டும்... கடைக்கோடி விவசாயிக்கும் வேலை செய்ய வேண்டும் என்கிற கைப்பாவை நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்'' என்று ஆதங்கம் பொங்கிய துணைவேந்தர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கார்ப்ரேட்டுக்கும் வேலை செய்யும் கைப்பாவை நாங்கள்''

''கரும்பின் மொலாஸஸ் மூலமாக எடுக்கப்படும் எரிசாராயத்தை, விரைவுப் பேருந்துகளுக்குப் பயன்படுத்தலாம். 1 லிட்டர் டீசல் 52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், எரிசாரயத்துக்கான தயாரிப்புச் செலவு லிட்டருக்கு 8.33 பைசாதான். அரசு இதை 25 ரூபாய்க்கு வாங்கினால்கூட, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். ஏனோ, இதெல்லாம் அரசாங்கத்தின் காதுகளில் விழுவதேயில்லை'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார்.

யோக ஷேமா ட்ரஸ்ட், டி.இ.டி.இ ட்ரஸ்ட், கிரியேட், டெல்டா மாவட்ட இயற்கை விவசாய சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வின் ஒரு கட்டமாக, வேளாண் பல்கலைக்கழகம்- தண்டலம் கிராம விவசாய குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் யோக ஷேமா ட்ரஸ்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதைப் பற்றி நம்மிடம் விளக்கிய பல்கலைக்கழகப் பதிவாளர் ரவீந்திரன், ''விவசாயக் குழுக்களுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்ப உதவிகளுக்கும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயார் செய்வதற்கும் தேவையான ஆலோசனை, பயிற்சிகளை வேளாண் துறைகளோடு இணைந்து வழங்க இருக்கிறோம். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதற்கான உதவிகளும், ஏற்பாடுகளும் செய்து தரப்படும். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுக்களாக இணைந்து பல்கலைக்கழகத்தை அணுகினால், இத்தகைய ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism