பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு !

காளான் வளர்ப்புக்கு முக்கிய இடுபொருளாக வைக்கோலைப் பயன்படுத்துறாங்க. காளான் அறுவடைக்குப் பிறகு, பையில இருக்குற வைக்கோலைத் தூர எறியறதுதான் பெரும்பாலும் வழக்கமா இருக்கு. காளானுக்குப் பயன்படுத்தின வைக்கோல்ல பயிருக்குத் தேவையான சத்துங்க நிறைய இருக்கு. அதை வயல்ல போட்டா... பயிருங்க ஜோரா வளரும்.

கிளரிசீடியா அருமையானக் கால்நடை தீவனம்கிறது பெரும்பாலானவங்களுக்குத் தெரியும். மரத்துல இருந்து தழையை அறுவடை செஞ்ச உடனே, கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தா... தழையில இருக்கற நச்சு, வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அந்த நச்சு முறியணும்னா... எட்டு மணி நேரம் நிழல்ல உலரணும். அதுக்கு பிறகு ஆடு, மாடுகளுக்குக் கொடுத்தா பாதிப்பு ஏற்படாது.

அகத்தி மர இலைங்க, அற்புதமான கால்நடைத் தீவனம். அதிகமான புரதச்சத்து இதுல இருக்குது. வேலி ஓரத்துலயும், வாய்க்கால் பக்கத்துலயும் இதை வளர்க்கலாம். இந்த இலையை அறுவடை செஞ்ச உடனே, ஆடு, மாடுங்களுக்கு போடக்கூடாது. இந்த இலைகள்ல 'டானின்’ங்கிற நச்சுப் பொருள் இருக்குது. அறுவடை செஞ்ச இலைகள குறைஞ்சபட்சம் எட்டு மணி நேரம் நிழல்ல போட்டு வெச்சிருந்தா... நச்சு குறைஞ்சுடும். ஆடு, மாடுங்களும் குஷியா சாப்பிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு