Published:Updated:

குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி!

பா. ஜெயவேல்

குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி!

பா. ஜெயவேல்

Published:Updated:

மேலாண்மை

 வழக்கமாக, குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகள், வரி வசூல் ஆகியவற்றைத்தான், உள்ளாட்சி அமைப்புகள் செய்துவருகின்றன. இவற்றைச் செய்வதற்கே பல பேரூராட்சி நிர்வாகங்கள் திணறும் சூழலில்... மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை உரத் தயாரிப்பு என சிறு வேளாண் பண்ணையாக மாறி, நகரின் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி. குப்பைச் சேகரிப்பு, தரம் பிரிப்பு மற்றும் குப்பை மேலாண்மைக்காக, ஐ.எஸ்.ஓ தரச்சான்றும் பெற்றிருக்கிறது, இப்பேரூராட்சி.

செயல் அலுவலர் மா. கேசவனைச் சந்தித்தபோது, ''குப்பை மேலாண்மைப் பணிகளை 'ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறோம். இங்கு 2 ஆயிரத்து 800 வீடுகள் இருக்கின்றன. குப்பைகளை அகற்றுவதற்காக 7 மூன்று சக்கர கை வண்டிகளும், தலா ஒரு டிராக்டர், பவர் டில்லர், டாடா ஏஸ் வாகனங்களும் உள்ளன. 300 வீடுகளுக்கு ஒருவர் வீதம் வீடுகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்து... உரக் கிடங்குக்குக் கொண்டு வந்து, மட்கும் குப்பை, மட்காதக் குப்பை என தரம்பிரித்து, தனித்தனியாக எடை போடுவார்கள். ஒரு நாளைக்கு 3 டன் அளவுக்கு குப்பைகள் கொண்டு வரப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி!

குப்பைச் சேகரிக்கும் சுயஉதவிக் குழு பெண்களை, 'பசுமை நண்பர்கள்’ என்று அழைக்கிறோம். இந்தப் பசுமை நண்பர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக... மட்கும் குப்பைகள், மட்காதக் குப்பைகளை வீடு களிலேயே தரம்பிரித்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற் பட்டுள்ளது. எங்கள் மேலாண்மைப் பணிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றும் கிடைத்துள்ளது'' என்று குஷியோடு சொன்ன கேசவன், திடக்கழிவு மேலாண்மை திட்ட இயக்குநர் பரிசுத்தத்தை அறிமுகம் செய்தார்.

இயற்கை உரம்!

நகரைச் சுத்தமாக்கும் தங்க களின் பணி பற்றி பேசிய பரிசுத்தம், ''குப்பைகளை நேரடியாக தொட்டியில் போட்டு மட்க வைக்கும்போது துர்நாற்றம் அதிகமாக இருக்கும். அதனால், 'வின்ரோ’ எனும் முறையைக் கையாளு கிறோம். அதாவது, குப்பை மீது தினமும் தண்ணீர் தெளித்து, 15 நாளுக்கு ஒரு முறை திருப்பிவிட்டு, அதில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்போம். இப்படி 90 நாட்கள் வரை தண்ணீர் தெளித்து வந்தால், குப்பைகள் நன்றாக மட்கிவிடும். காயவைத்து, சலித்து இயற்கை உரத்தைப் பிரித்து எடுக்கிறோம். இதைச் சிறிய பாக்கெட்டுகளாகவும், 20 கிலோ மூட்டைகளாகவும் விற்பனைக்கு அனுப்புகிறோம்.

மண்புழு உரம்!

குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி!

மண்புழு உரம் தயாரிப்பதற்காக 6 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி உயரமுள்ள தொட்டிகளுடன் ஒரு குடோன் உள்ளது. இந்தத் தொட்டிகளில் ஒரு மாதம் வரை மட்க வைக்கப்பட்ட குப்பைகளை இட்டு, சாணம் சேர்த்து தண்ணீர் தெளித்து, மண் புழுக்களை வளர்க்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் மண்புழு உரத்தைச் சேகரித்து, நிழலில் காய வைத்து ஒரு கிலோ அளவில் பேக் செய்து விற்பனை செய்கிறோம். மார்க் கெட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளைத் தான் பெரும்பாலும், மண்புழு உரத் தயாரிப்புக்குப் பயன்படுத்துகிறோம்.

பயோ-கேஸ்!

உணவுக்கழிவுகளில் இருந்து 'பயோ-கேஸ்’ தயாரிக்கிறோம். அச்சிறுப்பாக்கம் சிறிய ஊர் என்பதால் உணவுக்கழிவுகள் குறைந்த அளவே கிடைக்கிறது. குப்பை மேலாண்மை பணியில் இருக்கும் ஆட்களுக்கான சமை யலுக்கே, இந்த பயோ-கேஸ் சரியாக இருக் கிறது. பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம், பாட்டில்கள் போன்றவற்றைப் பிரித்து மாதம் ஒரு முறை விற்பனை செய்கிறோம். பிளாஸ் டிக் கேரி பைகளை இயந்திரம் மூலம் அரைத்து தார் சாலை அமைப்பவர்களுக்கு விற்கிறோம். அவர்கள், 10 சதவிகித அளவுக்கு இந்தக் கழிவை தாரில் சேர்த்துப் பயன் படுத்துகிறார்கள்.

மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை மேலாண்மை செய்யும் வகையில், 'சுகாதார நில புதைக் குழி’ திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம். பெரிய அளவு பள்ளம் வெட்டி, அதில் ஓரடி அளவுக்கு களிமண் பரப்பி, பிளாஸ்டிக் மூலம் ஓரடுக்கு உருவாக்கி குப்பைகளைக் கொட்டி மூடிவிட்டால், கழிவுகள் கசிந்து பூமிக்குள் செல்லாது'' என்று அழகாக விவரித்தார்.  

நிறைவாகப் பேசிய செயல்அலுவலர் கேசவன், ''இந்தப் பேரூராட்சியில் இயற்கைச் சூழல் நிலவுவதால், சுற்று வட்டார கிராமங் களில் உள்ளவர்கள்கூட இங்கு குடிபெயர விரும்புகிறார்கள். நாங்கள் தயாரிக்கும் இயற்கை உரத்தை ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் வாரச்சந்தையில் கடை போட்டு விற்கிறோம். மண்புழு உரம் மற்றும் இயற்கை உரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், நேரடியாக பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தும் வாங்கிச் செல்கிறார்கள். இயற்கை உரம் கிலோ 5 ரூபாய் என்றும் மண்புழு உரம் கிலோ 10 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறோம்.

வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு முன்மாதிரியாக... பேரூராட்சி அலுவலகத்தைச் சுற்றி மாதிரி வீட்டுத் தோட்டம் உருவாக்கியிருக்கிறோம். அலுவலகத்தின் மேல்தளத்தில் மாதிரி மாடித் தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். கழிவுகளைப் பயன்படுத்தியே இச்செடிகளை வளர்க்கிறோம். கீரைகள், மூலிகைகள், காய்கறிகள்... என நூற்றுக்கணக்கான தாவரங்களை வளர்க்கிறோம். வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு செய்முறை விளக்கமும் வழங்குகிறோம். இத்திட்டத்தின் மூலமாக பேரூராட்சியின் மொத்த செலவில்

10% அளவுக்கு ஈடுகட்ட முடிகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் இதை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என் றார் பெருமையோடு!

நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய விஷயம்தானே!

 தொடர்புக்கு,  
பரிசுத்தம், தொலைபேசி: 044-42318467
கேசவன், செல்போன்: 94436-43526

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism