Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

தண்டோரா

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஆசிரியர்

தேனீ வளர்ப்பு!

மதுரை, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 10-ம் தேதி பழ வகைகளைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்; 14-ம் தேதி மாடித் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பு 17-ம் தேதி தேனீ வளர்ப்பு;  24-ம் தேதி மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம், (உத்தக்கடை அருகில்)
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625104
தொலைபேசி: 0452-2422955

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளண் அறிவியல் மையத்தில் ஜூலை 15-ம் தேதி தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம்; 18-ம் தேதி மாடித் தோட்டம்; 24-ம் தேதி ஆடு வளர்ப்பு; 28-ம் தேதி காளான் வளர்ப்பு; 29-ம் தேதி இயற்கைப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,  
272, பெருமாள் நகர், புதுவல்லியம்பாளையம் ரோடு, கலிங்கியம் (அஞ்சல்), கோபிச்செட்டிபாளையம்.
தொலைபேசி: 04285-241626

தண்டோரா

நாட்டுக் கோழி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 10-ம் தேதி சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்; 22-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி-630206
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04577-264288

வெள்ளாடு!

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 17-ம் தேதி 'வெள்ளாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.
தொலைபேசி: 0427-2410408

பண்ணை இயந்திரங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 16-ம் தேதி பல்வேறு நிலங்களுக்கேற்ற ஒருங்கிணைந்தப் பண்ணையம்; 18-ம் தேதி நெல்லில் பயிர் பாதுகாப்பு முறைகள்; 23-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள்; 31-ம் தேதி வேளாண்மையில் பண்ணை இயந்திரங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்)
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி: 044-27452371

மூலிகைக் கண்காட்சி!

புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில், ஜூலை 20-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 'மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான மூலிகைக் கண்காட்சி’ நடைபெற உள்ளது. கண்காட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படும்.

ஏற்பாடு: பி.கே.எஸ். டிரஸ்ட் மற்றும் சித்த வைத்தியர்கள் சங்கம், புதுச்சேரி.

தொடர்புக்கு,
செல்போன்: 99444-25516, 88706-18821

மீத்தேன் எதிர்ப்பு மாநாடு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.இ.டி திருமண மஹாலில் ஜூலை 12-ம் தேதி 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு மற்றும் காவிரிப் படுகைப் பாதுகாப்பு மக்கள் எழுச்சி மாநாடு’ நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மாநாட்டில் அரசியல் இயக்கத் தலைவர்கள், முன்னோடி விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றுகிறார்கள்.

ஏற்பாடு: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.
தொடர்புக்கு,
செல்போன்: 98420-07371, 94433-37401

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism