Published:Updated:

இயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்!

பா. வேலுமணி படங்கள்: ஆர். நிவாஷ்

இயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்!

பா. வேலுமணி படங்கள்: ஆர். நிவாஷ்

Published:Updated:

மதிப்புக் கூட்டல்

காஞ்சிபுரம்-இட்லி, திருநெல்வேலி-அல்வா, திருவையாறு-அசோகா அல்வா, மணப்பாறை-முறுக்கு... என ஒவ்வோர் ஊருக்கும், ஒவ்வோர் உணவுப் பொருள் பிரபலமாக இருக்கும். இந்த வரிசையில், தானும் இடம்பிடித்து நிற்கிறது ஸ்ரீவில்லிப்புத்தூர்-பால்கோவா! தற்போது உலகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த பால்கோவா, தமிழக அரசின் முத்திரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ராஜகோபுரத்துக்கு இணையாக ஊருக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

சரி, இந்த ஊருக்கும் பால்கோவாவுக்கும் என்ன தொடர்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஊரின் பெருமைபேசும் ஸ்ரீஆண்டாளின் திருமணத்தின்போது வழங்கப்பட்ட சீதனப்பொருட்களில், திரட்டுப்பாலும் ஒன்று. பால், தேவைக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதை வீணாக்காமல், மதிப்புக்கூட்டி நம்முன்னோர் தயாரித்த தின்பண்டம்தான் சுவையான இந்தத் திரட்டுப்பால். இது, பிற்காலத்தில் பால்கோவா என்றே அறியப்பட்டு, பரவலாக இப்படியே அழைக்கப்படுகிறது.

''இதைத் தயாரிப்பது எளிதுதான். என்றாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் தனிச்சுவை, வேறு பகுதிகளில் தயாரிக்கும் பால்கோவாவுக்கு இருப்பதில்லை. காரணம், இங்குள்ள மாடுகள் கொடுக்கும் பாலின் கூடுதல் சுவைதான்'' என்று பெருமையோடு செல்கிறார்கள்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி பால் விவசாயிகள்!

இயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்!

அதெப்படி, இப்பகுதி மாடுகளின் பாலில் மட்டும் தனிச்சுவை?

இதற்கு பதில் சொல்லும் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த 'இயற்கை வேளாண்மை ஆலோசகர்' அரசு, ''மலைகள், மலைகளை ஒட்டியுள்ள மண்ணில், புற்கள், செடிகள் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இயற்கையாவே இருக்கு. இந்தப் பகுதியில் இருக்கிறவங்க, மாடுகளுக்கு பெரும்பாலும் புல்லை அறுத்துக் கொடுக்கிறதில்லை. நேரடியா மலை அடிவாரத்துல மேய விடுவாங்க. அதனால, இயற்கையான சத்துக்கள் முழுமையா மாடுகளுக்குக் கிடைக்குது. யானைப் புல், அரியாலி புல், அருகம்புல், சீமைப் புல், காட்டுப் புல், நேப்பியர் புல், லெமன் கிராஸ், சொங்கு சோள நாத்து, சாரணத்தி, கண்ணுப்பிள்ளைச் செடி, பயறு வகைச் செடிகளோடு பல வகையான மூலிகைச் செடிகளும் இந்தப்பகுதிகள்ல மானாவாரியாவே வளருது. இதையெல்லாம் மாடுகள் சாப்பிடச் சாப்பிட, எடை கூடுறதோட, பாலோட அளவும் அதிகரிக்குது. இந்தப் புற்கள்ல சத்துக்களும் அதிகமா இருக்கு. அதனாலதான் பாலோட சுவை அதிகமா இருக்கு. இப்படிப்பட்ட பால்ல தயாரிக்கிற கோவாவும் சுவையா இருக்கு'' என்கிறார்.

இயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்!

இதை ஆமோதிக்கும் வத்திராயிருப்பு, அரசு கால்நடை மருத்துவர் டாக்டர். கருப்பசாமி, ''இங்குள்ள மாடுகளுக்கு கோமாரி நோய், மடிநோய் போன்ற நோய்கள் வருவது மிகஅரிதாகத்தான் இருக்கிறது. காரணம், இயற்கையாக விளையும் தீவனப்பயிர்களையும், மலையிலிருந்து மூலிகைச் செடிகளோடு கலந்து வரும் நீரையும் இந்த மாடுகள் உட்கொள்வதுதான். இங்குள்ளஆரோக்கியமான மாடுகளில் இருந்து கிடைக்கும் பால், மற்ற பகுதிகளிலுள்ள மாடுகளின் பாலைவிட அடர்த்தியாக இருக்கிறது. தவிர, புரதம், கொழுப்பு, லேக்டோஸ், விட்டமின் ஏ, விட்ட மின் பி, சுண்ணாம்புச்சத்து ஆகியவையும் அதிகமாக இருக்கிறது'' என்று சொல்கிறார்.

இயற்கையான புல்... இனிக்கும் பால்... ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism