Published:Updated:

தேங்காய் ஓடு கிண்ணம்... களிமண் குவளை...

ரெ.சு. வெங்கடேஷ், படங்கள்: தி. குமரகுருபரன்

தேங்காய் ஓடு கிண்ணம்... களிமண் குவளை...

ரெ.சு. வெங்கடேஷ், படங்கள்: தி. குமரகுருபரன்

Published:Updated:

சென்னை, அண்ணா நகர் டவர் பார்க்கில் ஜூலை 5ம் தேதி இயற்கை உணவுத் திருவிழா மற்றும் சுற்றுசூழலுக் குப் பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு உப யோகப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் இருக்கும் இயற்கை அங்காடிகள் பலவும் பங்கேற்ற இந்நிகழ்வை... மேளதாளம் மற்றும் தப்பாட்டம் ஆகியவையும் கலகலப் பாக்கின.

தேங்காய் ஓடு கிண்ணம்... களிமண் குவளை...

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், பாரம்பரிய உணவுகள், மூலிகைச் சாறுகள், சூப் வகைகள் விற்பனை செய்யப் பட்டன. வழக்கமான பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கிண்ணங்கள், குவளைகளைப் பயன்படுத்தாமல், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் குவளைகளில் உணவுகளைப் பரிமாறினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதுகாப்பான உணவுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, நிகழ்ச்சி குறித்து பேசும்போது, ''இயற்கை உணவு முறையின் பக்கம் மக்களின் பார்வைத் திரும்பத் தொடங்கி யிருக்கிறது. கூடவே, தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னணியில் உள்ள அரசியலையும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும், சுற்றுசூழலுக்கு பாதிப்பற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தும் விதமாகவே இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறோம்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism