Published:Updated:

குறைவான செலவு... அதிக மகசூல்...

ஜீரோ பட்ஜெட் கரும்பு... தருகிறதே தெம்பு! ஆர். குமரேசன் படங்கள்: க. தனசேகரன், கா. முரளி

குறைவான செலவு... அதிக மகசூல்...

ஜீரோ பட்ஜெட் கரும்பு... தருகிறதே தெம்பு! ஆர். குமரேசன் படங்கள்: க. தனசேகரன், கா. முரளி

Published:Updated:

கூட்டம்

'ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்’ என்ற தலைப்பில், மே 11 அன்று, நாமக்கல், சனு இன்டர்நேஷனல் ஹோட்டலில், தமிழக முன்னோடி 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகளின் அனுபவப் பகிர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே தொடர்ந்து இடம்பிடிக்கின்றன. இந்த வரிசையில், கரும்பு சாகுபடி பற்றி நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகேயுள்ள கொல்லங்குடி, நடேசன் பகிர்ந்தவை இதோ...

பாசனத்தை மீட்டுக்கொடுத்த இரட்டையர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஈரோட்டில் 2007-ம் வருஷம், பசுமை விகடன் ஏற்பாடு செய்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். அங்கே சுபாஷ் பாலேக்கர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் எனக்குள் புதுத் தெளிவைக் கொடுத்தன. பயிற்சி முடிந்து வந்ததுமே 'ஜீரோ பட்ஜெட்’ முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டேன். என்னைப் பார்த்து எங்கள் பகுதியில் பல விவசாயிகள் மாறி வருகிறார்கள். எங்கள் பகுதியில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், கிடைக்கும் தண்ணீர்தான் பிரச்னையாக இருந்தது ஒரு காலத்தில். ஆம், தோல்கழிவு நீர், சாயப் பட்டறைக் கழிவு நீர், சாக்கடை நீர் என அனைத்தும் கலந்துதான் வரும்.

குறைவான செலவு... அதிக மகசூல்...

நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு பெருமுயற்சி எடுத்தார். இதற்கு பசுமை விகடனும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. விவசாயம் அற்றுப்போகும் நிலையில் இருந்த 25 ஆயிரம் ஏக்கரில், இப்போது செழிப்பாக விவசாயம் நடக்கிறது.

வாழை, கரும்பு, மரவள்ளி என்று ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்கிறேன். எனக்கு நல்ல மகசூலும் வருமானமும் கிடைக்கின்றன. நாட்டு மாட்டின் கழிவுகளை மட்டுமே இடுபொருட்களாக வைத்து விவ சாயம் செய்வதால், செலவுகளும் குறை கின்றன. என் கரும்புத் தோட்டத்தை ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையில பராமரித்து வருகிறேன்.

பூச்சிகளை விரட்டும் 'ரெயின் கன்’!

குறைவான செலவு... அதிக மகசூல்...

கரும்பு நடுவதற்குத் தேர்ந்தெடுத்த வயலில், தக்கைப்பூண்டு விதைத்து, அதை பூக்கும் தருவாயில், மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். பிறகு, பார் பிடித்து, தண்ணீர் கட்டி, விதைக் கரணையை ஈரநடவு செய்ய வேண்டும். தொடர்ந்து வாரம் இருமுறை பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் ஜீவாமிர்தக் கரைசலைக் கொடுத்து வந்தாலே போதும்.

சோகைகளைக் கழிக்கும்போது அவற்றை வயலிலேயே மூடாக்காகப் போட்டு விட வேண்டும். இதன் மூலம் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் மண்புழுக்களும் அதிக மாக உற்பத்தியாகும். மண்புழுக்கள், மண்ணை உழவு செய்து காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதால், வேர்கள் நன்றாகப் பரவி கரும்பு செழிப்பாக வளரும்.

கரும்புக்கு 'ரெயின் கன்’ பயன்படுத்தினால் பூச்சிகள் வருவதில்லை. செயற்கை மழை போல பயிர்கள் மீது தண்ணீரைத் தெளிக்கும்போது, பயிரில் பச்சையத்தை சுரண்டித் தின்ன அமர்ந்திருக்கும் பூச்சிகள் தெறித்து ஓடிவிடும் அல்லது இறந்துவிடும். குறிப்பாக, கரும்பை அதிகம் தாக்கும் குருத்துப்புழு, இடைக்கணுப்புழு ஆகியவற்றி லிருந்து பயிரைக் காத்துவிட முடியும்.

இயற்கை விவசாயத்தில் பெரும்பாலும் நோய்களும் வருவதில்லை. இம்முறையில், அதிக பருமனான தூர்கள் கிடைக்கின்றன. பிழிதிறனும் அதிகமாக உள்ளது. ரசாயன முறையில் விளைவதைவிட ஜீரோ பட்ஜெட் முறையில் அதிக மகசூல் கிடைக்கிறது. ஜீரோ பட்ஜெட் முறையில், கரும்பு சாகுபடி செய்து நான் ஜெயிக்க காரணம்... மூடாக்கு மற்றும் ரெயின் கன் இவை இரண்டும்தான். வாய்க்கால் பாசனத்தில் தண்ணீர் ஏறிப் பாய்வதில்லை.

குறைவான செலவு... அதிக மகசூல்...

ஆனால், ரெயின் கன் பாசனத்தில் வயல் முழுவதும் நனைந்துவிடும். வயல் சூழலே குளுமையாக மாறிவிடும். ரெயின் கன் அமைக்க ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகியது. சொட்டுநீர் அமைப்பதைவிட இதற்கு செலவு குறைவு தான். ஜீவா மிர்தக் கரைசலை வடிகட்டி ரெயின் கன் மூலமாகவும் கொடுக்க முடியும்'' என்று நடேசன் சொல்லச் சொல்ல... ஆவலோடு குறிப்பெடுத்துக் கொண்டனர் விவசாயிகள்.

இந்த நிகழ்வில் பேசப்பட்ட நெல், சம் பங்கி ஆகியவற்றின் சாகுபடி பற்றிய தகவல் கள் அடுத்த இதழில்...

தொடர்புக்கு,
நடேசன்,
செல்போன்: 94422-40197

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism