Published:Updated:

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை...

பசுமைக் குழு படம்: தி. விஜய்

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை...

பசுமைக் குழு படம்: தி. விஜய்

Published:Updated:

முன்னறிவிப்பு

தமிழ்நாட்டில் முக்கியமான மானாவாரிப் பட்டமான ஆடிப்பட்டத்தில் (ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) விதைக்கப்படும் பயிர்களுக்கு, அறுவடையின்போது என்ன விலை கிடைக்கும் என்பதற்கான கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.

மக்காச்சோளம் 1,400 ரூபாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் மக்காச்சோளம் நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு வரும். கடந்த 20 ஆண்டுகளில் உடுமலைப்பேட்டை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட விலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் வர்த்தகர்கள் ஆய்வுகளின்படியும் நவம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 1,400 ரூபாய்க்கு விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோளம் 19 ரூபாய்!

இப்பட்டத்தில் விதைக்கப்படும் சோளம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அறுவடைக்கு வரும். கடந்த 10 ஆண்டுகளில் திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், வர்த்தகர்களின் கணிப்புப்படியும் அறுவடை செய்யும் காலத்தில் ஒரு கிலோ சோளத்துக்கு 18 ரூபாய் முதல் 19 ரூபாய் வரையில் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை...

எள் 8,700 ரூபாய்!

இப்பட்டத்தில் விதைக்கப்படும் எள், அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் அறுவடைக்கு வரும். கடந்த 14 ஆண்டுகளாக சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் அறுவடை காலத்தில் ஒரு குவிண்டால் எள்,

8 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரத்து 700 ரூபாய் வரையில் விலை போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிலக்கடலை 4,300 ரூபாய்!

தமிழ்நாட்டில் ஆடிப்பட்டத்தில் 65 சதவிகிதம் அளவுக்கு மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் அறுவடைக்கு வரும். கடந்த 14 ஆண்டுகளாக சேவூர் மற்றும் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அறுவடைக் காலத்தில், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் ஒரு குவிண்டால், 4 ஆயிரத்து 200 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 300 ரூபாய் வரையும், திண்டிவனம் பகுதிகளில் ஒரு குவிண்டால், 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 600 ரூபாய் வரையும் விற்பனையாக வாய்ப்புள்ளது.

சின்ன வெங்காயம் 25 ரூபாய்!

இப்பட்டத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயம், அறுவடைக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில், ஒரு கிலோ 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism