Published:Updated:

உழவர் தினவிழா...

பசுமைக் குழு படங்கள்: வீ. சிவக்குமார், கா. முரளி

உழவர் தினவிழா...

பசுமைக் குழு படங்கள்: வீ. சிவக்குமார், கா. முரளி

Published:Updated:

நிகழ்ச்சி

 இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களில்,  உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளை நினைவுகூரும் வகையில், விவசாய அமைப்புகளின் சார்பில், இந்த ஆண்டும் ஜூலை 5-ம் தேதியன்று உழவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

உழவர்-உழைப்பாளர் கட்சி: கே. செல்லமுத்து தலைமையில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலையில் நடந்த கூட்டத்தில் விவசாயத் தியாகிகளின் குடும்பத்தினர் மேடையேற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.  ''சிறு- பெரு விவசாயிகள் பாகுபாடின்றி 100% மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, ஆவண செய்யவேண்டும்'' என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத் தார் கட்சித்தலைவர் செல்லமுத்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்: நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில் பேசிய சங்கத் தலைவர் என்.எஸ். பழனிச்சாமி, ''நீலகிரி மாவட்டத்தில், வனஉரிமை அங்கீ காரச் சட்டம்-2006 முழுமையாக அமல் படுத்தப்பட வேண்டும்'' என்பது உள்பட பல்வேறு விஷயங்களை  வலியுறுத்தினார்.

உழவர் தினவிழா...

விவசாய சங்கம் (கட்சி சார்பற்றது): ஈரோடு ஏ.இ.டி பள்ளி வளாகத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு இதன் தலைவர் வழுக்குப்பாறை பாலு, பொதுச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை யேற்றனர். ''பெட்ரோலியப் பொருட்களை குழாய் மூலம் விளைநிலங்கள் வழியே கொண்டு செல்வதற்கு ஆதரவாக உள்ள சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய உழவர்-உழைப்பாளர் கட்சி: 'வேட்டவலம்' மணிகண்டன் தலைமையில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில், 'கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எரிசாராயம், மின்சாரம் மற்றும் எத்தனால் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்க வேண் டும்; கலைக்கப்பட்ட விவசாய உயர்நிலைக்குழுவை மறுபடியும் ஏற்படுத்தவேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

உழவர் தினவிழா...

தமிழக விவசாயிகள் சங்கம்: டாக்டர் சிவசாமி தலைமையில் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், ''வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள ரப்பர் குண்டு துப்பாக்கியைப் பயன்படுத்த, அனுமதி வேண்டும்; ஏதாவது காரணத்தால் பயிர்ச் சேதம் ஏற்பட்டால், 15 நாட்களுக்குள் 50 ஆயிரம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் சங்கம்: தருமபுரி சின்னசாமி தலைமையிலான இந்தச் சங்கத்தினர், திண்டுக்கல்லில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் 'கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை, மா, கொய்யா போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism