Published:Updated:

எண்டோசல்ஃபானுக்குத் தடை... பி.டி.ரகங்களுக்கு பூட்டு... வேளாண் மன்றச் சட்டம் வராது...

சிலிர்த்தெழுந்த 'சிவப்பு'சட்டைகள், நெகிழ வைத்த ஜெயலலிதா !

பிரீமியம் ஸ்டோரி

விவாதம்

 ஆறுச்சாமி

சட்டமன்றத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த கேள்விகள் என்பது எப்போதாவதுதான் எழுப்படும். ஆனால், இந்த முறை வேளாண் துறையின் மானியக் கோரிக்கை ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற்றபோது, விவசாயிகளின் பிரச்னைகள், அதிர்வேட்டு போல வெடித்தன. அனைத்துக்கும் அரசுத் தரப்பிலிருந்து சாதகமான அறிவிப்புகள் வெளியாகி, அனைவரையும் குளிர வைத்திருக்கிறது!

'எண்டோசல்ஃபான் விஷ மருந்துக்குத் தடை, வேளாண் மன்றச் சட்டம் நடைமுறைக்கு வராது, பி.டி. ரகங்களை அரசு பரவலாக்காது' என்றெல்லாம் உத்தரவாதம் தந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

எண்டோசல்ஃபானுக்குத் தடை... பி.டி.ரகங்களுக்கு பூட்டு... வேளாண் மன்றச் சட்டம் வராது...
##~##

இந்த விஷயத்தில் அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய உறுதிமொழியைப் பெற்றுத் தந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள்... சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி) மற்றும் சிவகங்ககை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர்தான். இருவரையும் சந்தித்தோம்.

''பக்கத்து மாநிலமான கேரளாவில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியின் பாதிப்பை உணர்ந்து தடை விதித்திருக்கிறார்கள். ஆனால், இங்கு அது தடை செய்யப்படவில்லை. அதேபோல, பி.டி. கத்திரியை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஆனால், வேளாண் பல்கலைக்கழகத்தில் அதுபற்றிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பிரச்னைகளை உணர்ந்துதான் சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்பினேன்.

அதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 'தமிழ்நாட்டில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியை இருப்பு வைக்கவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. பி.டி. கத்திரியை சோதனை செய்யக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ எனச்  சொன்னார்'' என மகிழ்ச்சியோடு குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், ''வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விஷயங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர நடப்பதே இல்லை. அங்கு ஆண்டுதோறும் புதுப்புது ரகங்கள் வெளியிடப்படுகின்றன.

ஆனால், அவையெªல்லாம் விவசாயிகளைச் சென்று சேர்வதேயில்லை. விவசாயிகளைக் காக்க வேண்டிய பல்கலைக்கழகம், மான்சான்டோ போன்ற நிறுவனங்களுக்குத்தான் வேலை செய்கிறது. இப்படி இருந்தால், விவசாயம் எப்படி செழிக்கும்?'' என்று கொந்தளிப்போடு கேட்டவர், ''தொடர்ந்து இதுகுறித்த விஷயங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கப் போகிறேன்'' என்றார் உறுதியாக!

எண்டோசல்ஃபானுக்குத் தடை... பி.டி.ரகங்களுக்கு பூட்டு... வேளாண் மன்றச் சட்டம் வராது...

குணசேகரன் பேசும்போது, ''மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க மாட்டோம், என்று முதல்வர் அறிவித்த பிறகும், தனியார் நிறுவனங்கள் மரபணு மாற்றுப் பருத்தி விதைகளை விற்பனை செய்கிறார்கள் என்பதை அரசுக்கு சுட்டிக் காட்டினேன். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேளாண் மன்றச் சட்டத்தின் விபரீதங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால், அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

எண்டோசல்ஃபானுக்குத் தடை... பி.டி.ரகங்களுக்கு பூட்டு... வேளாண் மன்றச் சட்டம் வராது...

உடனே துறை அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை செய்துவிட்டு, 'வேளாண் மன்றச் சட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும், இதற்கான அறிவிக்கை வெளியிட்ட பின்னர் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அறிவிக்கை வெளியிடப்படவில்லை. அதனால், இச் சட்டம் செயல்பாட்டில் இல்லை.

நாங்களும் அறிவிக்கை வெளியிடப் போவதில்லை. சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி கொடுத்துள்ளார்'' என்ற குணசேகரன்,

''இயற்கை வழி விவசாயம் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். தொடர்ந்தும் அதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' என்று நம்பிக்கையூட்டினார்.

படங்கள்: வீ. நாகமணி,
சொ. பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு