குற்றச்சாட்டு

'ஆதரவு விலைக்கு ஆபத்து’ என்ற தலைப்பில், 25.6.2014 தேதியிட்ட இதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில்... 'இந்தியாவில், விளைபொருட்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவு விலையை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா சொல்கிறது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது’ என்று பன்னாட்டு உணவு கொள்கை பகுப்பாய்வாளர் தேவேந்திர சர்மா பேசியதுதான் அச்செய்தியில் இடம்பெற்றிருந்தது. தற்போது, 'நெல், கோதுமைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையையைத் தவிர, ஊக்கத் தொகை எதையும் மாநில அரசுகள் கொடுக்கக்கூடாது’ என குறிபார்த்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை தானும் கையில் எடுத்துவிட்டது, நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் 'சுவாமிமலை' சுந்தர விமலநாதன், ''கர்நாடகாவில் 250 ரூபாய், ஆந்திராவில் 130 ரூபாய் என ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், பொது ரகத்துக்கு 50 ரூபாயும் என மிகவும் குறைவான தொகைதான் வழங்கப்படுகிறது. இதை இன்னும் அதிகரிக்க

வேண்டும் எனக் குரல் கொடுத்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியைக் கூட்டுகிறது. இது அமலுக்கு வந்தால்... நெல் விவசாயிகளின் நிலை பரிதாபகரமாகிவிடும். வெளிச் சந்தையிலும் நெல்லின் விலை வீழ்ச்சி அடையும்.

எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையின்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில்... 'வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க, எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை அமுல்படுத்துவோம்’ என்று கூறியிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், எல்லோரையும் போலவே விவசாய விரோதப் போக்குதான் வெளிப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலாவது மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டது. இதையும் 60 ரூபாயாகக் குறைத்துவிட்டது மோடி அரசு'' எனக் கொந்தளித்தார்.