போராட்டம்

'போராட்டக் களமென்றாலே... கொங்கு மண்டல விவசாயிகள்தான் கொதித்தெழுவார்கள். சோழ மண்டல விவசாயிகள் சோர்ந்து கிடப்பார்கள்’ என்கிற பொதுவான ஒரு கருத்து உண்டு. இதைத் தகர்த்தெறியும்விதமாக, ஜூலை 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசை அதிர வைத்துள்ளனர், காவிரி உரிமை மீட்புக்குழுவினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அன்றைய தினம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் முழுநாள் வேலை நிறுத்தப் போராட்டமும் கூடுதலாகச் சேர்ந்துகொள்ள... மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன; சரக்கு லாரிகள் ஓடவில்லை; வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர், கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் போராட்ட அனல் வீசியது. தஞ்சாவூரில் உள்ள கலால் வரி அலுவலகத்தை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அலுவலகக் கதவுகளை இழுத்து மூடி, பூட்டு போட முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் பரபரப்பான சூழல் உருவாகி, மருத்துவக் கல்லூரி சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தமிழக விவசாயிகள் சங்கம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக உழவர் முன்னணி, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, ம.தி.மு.க, தமிழர் தேசிய முன்னணி, விடுதலைத் தமிழ்ப் புலிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தோர் ஆர்வத்துடன் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர். காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க நிர்வாகிகள் பலரும் மறைமுக ஆதரவைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

இனி, ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு!