நீதி

தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம்... முல்லை-பெரியாறு அணை! குறிப்பாக, வறண்ட பூமியான ராமநாதபுரம் பகுதி செழிக்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, கர்னல் பென்னிகுவிக் நிர்மாணித்த அணை இது. அணையின் மொத்த நீர்மட்டம் 153 அடி. ஒரு கட்டத்தில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி, இது 136 அடியாகக் குறைக்கப்பட, மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டன இந்த மாவட்டங்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீர்மட்டம் 142 அடியாக தற்போது உயர்த்தப்பட... பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர் விவசாயிகள்.

1979-ம் ஆண்டு, 'அணையில் விரிசல் இருக்கிறது. அதை சரி செய்த பிறகு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்’ என கேரள அரசு சொன்னதை நம்பி... 13 மதகுகளையும் மேலே உயர்த்த சம்மதித்தது, தமிழக அரசு. மதகுகள் உயர்த்தப்பட்ட பிறகு, அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைந்தது. இதனால், கடைக்கோடி பாசனப் பகுதியான ராமநாதபுரம், வறண்ட பகுதியாக மாறியது. சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரு போகம் நடந்து வந்த விவசாயம், ஒரு போகமாக குறைந்துபோனதுடன் குடிநீர்த் தேவைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அணைப் பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா சம்மதிக்காததால், தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த மே 7-ம் தேதி... 'அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அத்துடன் அணையின் நீர்மடத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தி, அணைப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்பில் தலா ஒரு பிரதிநிதி கொண்ட மூவர் குழுவை அமைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது, தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. என்றாலும், 'கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் செய்து விடுமோ...’ என்ற அச்சமும் இருந்து வந்தது.

இந்நிலையில், கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறைச் செயலர் குரியன், தமிழ் நாடு சார்பாக பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார், மத்திய அரசின் சார்பில் மத்திய நீர்ப்பாசன முதன்மைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட, இக்குழு ஜூலை 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடி விவாதித்தது. பிறகு, ஜூலை 17-ம் தேதி முல்லை-பெரியாறு அணையைப் பார்வையிட்ட குழு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு வசதியாக 13 மதகுகளையும் கீழே இறக்கியது. இதையடுத்து, அணையில் 142 அடி உயரத்துக்கு நீர் தேக்கப்படுவது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதைப் பற்றி பேசிய முல்லை-பெரியாறு மீட்புக்குழுத் தலைவர் ரஞ்சித்குமார், ''இதைவிட மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது. '2006-ம் ஆண்டு தீர்ப்பைப் போலவே, இந்தத் தீர்ப்பையும் மதிக்காமல் கேரளா தகிடுதத்தம் செய்துவிடுமோ...’ என அஞ்சிக் கொண்டிருந்த எங்களுக்கு மதகுகள் இறக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் மட்டும் போதாது. அணையில் நாம் இழந்த அனைத்து உரிமைகளைத் திரும்பப் பெறும் முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.

நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தாலும், பெரிதாகப் பயன் இருக்காது. தமிழகத்தை நோக்கி தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள டனல் மூலம் 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும். இங்கு மற்றொரு டனல் அமைத்து, 5 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றினால்தான் முழுமையான பலனை தமிழக விவசாயிகள், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அனுபவிக்க முடியும். அப்போதுதான், கர்னல் பென்னிகுவிக்கின் கனவு நிறைவேறும்'' என்று சொன்னார் எதிர்பார்ப்புடன்!

காத்திருப்போம்... கனவு நிறைவேற!