Published:Updated:

விதைக்குள் விஷமா?

விதைக்குள் விஷமா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

விதைக்குள் விஷமா?

அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 15 விதமான உணவுப் பயிர்களில், மரபணு மாற்றுப் பரிசோதனை நடத்துவதற்கு அனுமதியை அள்ளி வழங்கியிருக்கிறது, மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு!

'120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டுக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர் என்பது அவசியம். இதன் மூலமே உணவு உற்பத்தியை உறுதிப்படுத்த முடியும். பூச்சிகளுக்கு எதிரான புரதத் தன்மைக் கொண்ட நுண்ணுயிரியின் மரபணுவை, பயிரின் விதைக்குள்ளேயே புகுத்துவதுதான் மரபணுமாற்றுத் தொழில்நுட்பம். இதன் மூலமாக பூச்சிக்கொல்லி எதுவும் இல்லாமலே பயிரை வளர்த்தெடுக்கலாம்' என்பதுதான் விஞ்ஞானிகள் முன்வைக்கும் வாதம்.

'இங்கே தற்போது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை முறையாக சேமித்துப் பயன்படுத்தினாலே போதும்... 360 கோடி மக்களுக்குக்கூட உணவிட முடியும். இதைவிடுத்து, வணிக நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு வெண்சாமரம் வீசுவது, விதைகளின் மீது விவசாயிகளுக்கு இருக்கும் உரிமையை முற்றாக அழித்துவிடும். விஷம் என்பதைத்தான் புரதம் என்று மாற்றிச் சொல்கிறார்கள். விதைக்குள்ளேயே விஷத்தைப் புகுத்துவது... மனிதகுலத்துக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் எதிரான செயல். இது எதிர்காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் சொல்லவே முடியாது' என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் எதிர்வாதம்.

'மக்களுக்காகவே நான்' என்றபடி ஆட்சியைப் பிடித்திருக்கும் நரேந்திர மோடி, இயற்கை ஆர்வலர்களின் எதிர்வாதங்களை ஏறெடுத்தும் பார்த்ததாகத் தெரியவில்லையே!

ஆசிரியர்

விதைக்குள் விஷமா?
அடுத்த கட்டுரைக்கு