பார்வை

சென்ற இதழ் தொடர்ச்சி...

அதிகாரிகள் மற்றும் ஆலைக்காரர்களால் அப்பாவி விவசாயிகள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது பற்றி பார்த்து வருகிறோம். கடந்த இதழில், நெல்லிக்குப்பம் கோதண்டராமன் சொன்ன தகவல்களைத் தொடர்ந்து... இந்த இதழில், மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை அடுக்குகிறார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவீந்திரன்.

''தனியார் சர்க்கரை ஆலைகள், மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையைக் கொடுப்பதேயில்லை. அந்தத் தொகை மட்டுமே கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு சர்க்கரைத் துறை ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் 'ரெவின்யூ ரெகவரி ஆக்ட்’ மூலம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவர்கள் ஆலைகளுக்கு சாதகமானவர்களாக இருப்பதால், நடவடிக்கை எடுப்பதில்லை. ஆலை முதலாளிகளுடன் அரசு இணக்கமாக இருப்பதால்தான், மாநில அரசின் பரிந்துரை விலையைக் கொடுக்க மறுக்கின்றனர்.

தனியார் ஆலைகள், 'லாபமில்லை’ என்று சொல்வதெல்லாம் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் கதை’தான். கடந்த அரவைப் பருவத்தில் (2012-2013) பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகளே லாபத்தில் இயங்கி இருக்கின்றன. உதாரணத்துக்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 214 கோடியே 17 லட்சம் ரூபாய் லாபம் காட்டி இருக்கிறது. இவர்கள், ஒரு டன் கரும்புக்கு மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து,

2 ஆயிரத்து 650 ரூபாயை (வாகன வாடகை உட்பட) பைசா பாக்கி இல்லாமல், பட்டுவாடா செய்துவிட்டனர். ஆனால், தனியார் ஆலைகள் மட்டும் லாபமே இல்லை என்று வேஷம் கட்டுகின்றன.

11 ஆயிரம் கோடி மத்திய அரசுக் கடன்!

அகில இந்திய அளவில் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள், விவசாயிகளைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் கடன் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய நிதி அமைச்சராக இருந்த

ப. சிதம்பரம் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை ஆலைகளுக்கு வட்டியில்லா கடனாக அறிவித்தார். ஆனால், அவர்கள் செலுத்திய உற்பத்தி வரி அடிப்படையில் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. தற்போது மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் அறிவித்துள்ளார். ஆக, மொத்தம் இதுவரை 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டபோது, விவசாயிகளுக்கு ஆலைகள் கொடுக்கவேண்டிய பாக்கித்தொகை 10 ஆயிரத்து 400 கோடியாக இருந்தது. தற்போது, 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் அறிவித்திருக்கும்போது, பாக்கித்தொகை 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக மாறி இருக்கிறது. இப்படி மக்கள் உழைப்பின் வியர்வையில் கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு விவசாயிகளின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன, தனியார் ஆலைகள்.

விவசாயிகளின் பணத்தில் மஞ்சள் குளிக்கும் முதலாளிகள்!

தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள், தங்கள் பணத்தை வெவ்வேறு தொழிலுக்கு மாற்றிக்கொள்கிறார்கள். சர்க்கரை உற்பத்தி மூலப்பொருளான கரும்புக்குக் கொடுக்க வேண்டிய தொகையை வழங்காமல், அந்தத் தொகையை சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

14 நாட்களுக்குள் எந்த ஆலையும் பணத்தைப் பட்டுவாடா செய்வதில்லை. தமிழ்நாட்டில், சில தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும்தான் பாக்கி இல்லாமல் பணம் கொடுக்கின்றன.

பொதுவிநியோகத்துக்காக ஆலைகளிடமிருந்து, அரசாங்கம் சர்க்கரை கொள்முதல் செய்வது (லெவி) வழக்கம். இதற்காக குறைந்த விலைக்கே ஆலைகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் முன்பு இருந்தது. ஆனால், ரெங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்திய பிறகு, மார்க்கெட் விலைக்கே அரசாங்கம் வாங்குகிறது. இதன் மூலம் கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு லாபமடைந்திருக்கின்றன தனியார் ஆலைகள்.

கிளிப்பிள்ளையாக மாறிய பஸ்வான்!

இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 'மாநில அரசுகள், கரும்புக்கு தங்களின் பரிந்துரை விலையை விரும்பியபடி அறிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு சொல்லும் விலையே போதும்’ என முதலாளிகள் சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளை போல சொல்கிறார். மாநில அரசு விலை என்பது கண்டிப்பாக வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் உற்பத்திச் செலவு மாறுபடுகிறபோது அவற்றை இந்த மாநில அரசின் பரிந்துரை விலைதான் ஈடுகட்டுகிறது. இதை வேண்டாம் என்பதற்கான காரணம், ஆலை முதலாளிகள் எம்.பி-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதுதான்'' என்று சாடிய ரவீந்திரன், நிறைவாக,

கூட்டுறவு ஆலைகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!

''லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் தவறான கணக்குகளைக் காட்டி, நஷ்டத்தில் இயங்குவதாகவே சொல்கிறார்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மொத்தம் 1,425 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதில் அசல், 700 கோடி ரூபாய்தான். ஒழுங்காகத் திருப்பி செலுத் தாமல், வட்டி, வட்டிக்கு வட்டி என கடன் உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகையையும் உற்பத்திச் செலவுக் கணக்கில் காட்டி, நஷ்டக்கணக்கைக் காட்டுகின்றன, கூட்டுறவு ஆலைகள். கூட்டுறவு ஆலைகளின் லாபம் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றுசேர வேண்டுமானால், மாநில அரசு இந்தக் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும். அல்லது இந்தக் கடனை அடைத்துவிட்டு, தொகையை மாநில அரசின் பங்காக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும், 'மத்திய அரசின் கரும்பு மேம்பாட்டு நிதி’யைப் பெற்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் கூட்டுறவு சர்க்கரை ஆலை கள் அதிகமான அளவில் அரவை செய்ய முடியும். அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டிவிட்டு, தனியார் பள்ளிகளை அதிகப்படுத்து வதைப் போல கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை ஒழித்துவிட்டு, தனியார் சர்க்கரை ஆலைகளை நாடு முழுவதும் பரவசெய்யும் வேலையைத்தான் ரங்க ராஜன் கமிட்டி பரிந்துரை செய்கிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

-இன்னும் குமுறுவார்கள்.

15 நாட்களுக்குள் நிலுவைத் தொகை?

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காத பிரச்னை பற்றி... சட்டமன்றத்தில் 14-ம் தேதி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கமணி, 'சர்க்கரை ஆலைகள், கரும்பு நிலுவைத் தொகையாக 527 கோடி ரூபாயை வழங்க வேண்டும். இதுகுறித்து, முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மத்திய அரசு அளிக்கும் கடன் தொகையைப் பெற்று, விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதாக, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த, 15 நாட்களுக்குள் இத்தொகையை வழங்குமாறு சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். அரசின் உத்தரவை அடுத்து, நிலுவைத் தொகை வழங்கும் ஏற்பாட்டை சில தனியார் சர்க்கரை ஆலைகள் துவங்கினாலும், பல ஆலை நிர்வாகங்கள், ஒன்றிணைந்து ரகசியமாக ஆலோசித்து வருகின்றன.

இதைப் பற்றி இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகளின் செயலாளர் ஆர். விருத்தகிரியிடம் கேட்டபோது, ''சமீபத்தில் சென்னையில் நாங்கள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தை அடுத்து, இந்த பிரச்னையை தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்டோரிடம் மனுவாகக் கொடுத்தோம். அவர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய பிறகே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், பத்து நாட்களுக்கு மேலாகியும் ஒருவருக்கும் பணம் வழங்கப்பட வில்லை. ஆலைகளும் அமைச்சரின் பேச்சை கண்டுகொள்ளவில்லை. கரும்புக்கட்டுப்பாடுச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆலைகளின் குடோன்களுக்கு சீல் வைத்தால்தான் பணம் கொடுப்பார்கள்'' என ஆவேசமாகச் சொன்னார்.