பிரீமியம் ஸ்டோரி

இலவசப் பயிற்சிகள்

 பண்ணைக் கருவிகள்!

தண்டோரா
##~##

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 7-8 தேதிகளில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு; 14-15 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு; 20-21 தேதிகளில் பழப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு; 22-23 தேதிகளில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி; 26-27 தேதிகளில் நெல் மற்றும் நிலக்கடலை சாகுபடியில் பண்ணைக் கருவிகள் பயன்பாடு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603 203. தொலைபேசி: 044-27452371.

லாபகரமான பால்!

தண்டோரா

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி கறவை மாடுகளில் லாபகரமான பால் உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.  முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்- 636004. தொலைபேசி: 0427-2440408.

கொடுவா மீன்!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு; 30-ம் தேதி கொடுவா மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345, 266244.

நன்னீர் இறால்!

தண்டோரா

புதுக்கோட்டை, கால்நடை மண்டல ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 29-30 தேதிகளில் நன்னீர் இறால் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், தொழிற்பேட்டை அஞ்சல், புதுக்கோட்டை-622 004.

தொலைபேசி: 04322-271443.

வேலிக் கருவை!

தூத்துக்குடி மாவட்டம், வாகை குளம், வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி 'வேலிக் கருவையில் இருந்து மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, அலைபேசி: 99429-78526.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு