Published:Updated:

உயிர் உரங்களுக்கு மரியாதை!

த. ஜெயகுமார்

உயிர் உரங்களுக்கு மரியாதை!

த. ஜெயகுமார்

Published:Updated:

சட்டமன்றம்

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஜூலை 31-ம் தேதி,  2014-2015-ம் ஆண்டுக்கான வேளாண் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இதில், துறையின் அமைச்சர் அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகளில் சில...

ரசாயன உரத் தேவையைக் குறைக்கும் உயிர் உரங்கள், ஆண்டுதோறும் 525 டன் நீலப்பச்சைப்பாசி,  500 டன் அசோலா உற்பத்தி செய்து விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டம் இந்த ஆண்டிலும் தொடரும்.  அரசு உயிர் உர உற்பத்தி மையங்களில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்றவை 2,500 டன் அளவுக்கு உற்பத்தி செய்து, பொட்டலம் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரும்புத் தோகையை உரமாக்கும் திட்டத்துக்கு 2.42 கோடி ரூபாய் (10 ஆயிரம் ஹெக்டேர்).

புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படும் அரிசிக்கான தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

உயிர் உரங்களுக்கு மரியாதை!

விசைத்தெளிப்பான்கள், களையெடுக்கும் கருவிகள், சுழற்கலப்பைகள், கதிரடிக்கும் கருவி மற்றும் நெல் நாற்று நடும் கருவி விநியோகம், சமுதாய நாற்றங்கால் அமைத்தல், நெல் நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுப்பதற்காக 27.34 கோடி ரூபாய்.

மாடித் தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்வதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 'நீங்களே செய்து பாருங்கள்’ என்கிற திட்டத்துக்கு 50% மானியத்தில் இடுபொருட்கள்.

பெருநகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்கறி உற்பத்திக்கு 46 கோடி ரூபாய்.

இந்த ஆண்டு, கரீஃப் பருவத்தில் வாழை, வெங்காயம், அன்னாசி, உருளைக்கிழங்கு, மிளகாய், மஞ்சள் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு.

உயிர் உரங்களுக்கு மரியாதை!

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, சான்றளிப்புடன் கூடிய பயிற்சி, ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு (5 ஆயிரம் ஹெக்டேர்).

இந்த ஆண்டில் 1,140.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் சிப்பம் கட்டும் அறைகள் அமைத்தல், சிறிய குளிர்சாதன மையங்கள், குளிரூட்டும் அறைகள், நடமாடும் குளிரூட்டும் மையம், குளிர்சாதன சேமிப்பு அறைகள், பதப்படுத்தும் தொழிற்சாலை, பழுக்க வைக்கும் அறைகள், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அறைகள் ஆகிய திட்ட முறைச் செயல்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

திண்டுக்கல்லின் ரெட்டியார்சத்திரத்தில்

உயிர் உரங்களுக்கு மரியாதை!

10.18 கோடியில் காய்கறி மகத்துவ மையம்; கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில்

உயிர் உரங்களுக்கு மரியாதை!

8.8 கோடியில் கொய்மலர் மகத்துவ மையம் இந்த ஆண்டில் முடிக்கப்படும்.

வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மையம் மூலம்... முக்கியப் பயிர்களில், 175 ரகங்களில்

20 ஆயிரம் குவின்டால் விதைகள் மற்றும் 30 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism