Published:Updated:

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

தமிழக முதல்வருக்கு சுளீர் கேள்வி! காசி. வேம்பையன்

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

தமிழக முதல்வருக்கு சுளீர் கேள்வி! காசி. வேம்பையன்

Published:Updated:

 சென்ற இதழ் தொடர்ச்சி...

 அதிகாரிகள் மற்றும் ஆலைக்காரர்களால் அப்பாவி விவசாயிகள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது பற்றி பார்த்து வருகிறோம். கடந்த இதழில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவீந்திரன் சொன்ன தகவல்களைத் தொடர்ந்து... இந்த இதழில் பல்வேறுவிதமான விஷயங்களைப் புட்டு வைக்கிறார், 'தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க’த்தின் மாவட்ட செயலாளர் 'சுவாமிமலை’ சுந்தரவிமலநாதன்.

''கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக முடிவு எடுக்க... ஆண்டுதோறும் ஆலைகள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கூடி முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தி.மு.க ஆட்சியின்போது, கடைசி இரண்டு ஆண்டுகளில் கருணாநிதி முத்தரப்புக் கூட்டத்தை நடத்தவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை இக்கூட்டத்தை நடத்தாமல், தன்னிச்சையாக அவரே விலையை அறிவித்திருக்கிறார். அதிகாரிகள் எந்த அடிப்படையில் கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக நிர்ணையம் செய்கின்றனர் என்பது, ரகசியமாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

டன்னுக்கு

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

3,050 கொடுக்கும் ஹரியானா!  

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

தமிழ்நாட்டில், வாகன வாடகை உட்பட 2 ஆயிரத்து 650 மட்டுமே ஒரு டன் கரும்புக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்கள் அதிகமாகவே விலை கொடுக்கின்றன. குறைவாகக் கொடுக்கும் தொகையும்கூட விவசாயிகளுக்கு இங்கே சரிவரக் கிடைப்பதில்லை. இதுவரையில், 'கரும்புக்கான விலையை உயர்த்திக்கொடு’ என்று கேட்டது போக... 'அறிவிக்கப்பட்ட விலையை வழங்கு’ என்று போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு விவசாயிகளின் நிலைமை மோசமாக மாறிவிட்டது.

நடவடிக்கை எடுக்காத மாநில அரசு!

கர்நாடகா மாநிலத்தில், 10 ஆயிரம் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். உடனே, அவர்களை அழைத்துப்பேசிய முதல்வர் 'சித்தராமையா’, பணம் வழங்காத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக் கிறார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தொண்டை தண்ணீர் காய்ந்து போகும் அளவுக்குக் கத்தியும்... தமிழக அரசின் காதுகள் மூடப்பட்டே இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் வழக்குத் தொடுக்கும் ஜெயலலிதா அரசு, மாநில அரசு பரிந்துரை விலையை வழங்காத ஆலைகள் மீது ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அரசுக்கு விவசாயிகள் மீது இருக்கும் அக்கறையை விட, ஆலைகள் மீதுதான் அக்கறை அதிகமாக இருக்கிறது. சர்க்கரைத்துறையில் இருக்கும் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆலைகளைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்தே நடக்கின்றன. தனியார் ஆலை முதலாளிகளோ... விவசாயிகளின் வியர்வையைப் பணமாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

அடுத்த ஆண்டுக்கான கொள்ளை லாபத்திலும் துண்டு விழுந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில்... கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலை அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டன ஆலைகள். 'விவசாயிகள் மீது அக்கறை இருக்கிறது’ என்று சொல்லும் முதல்வரின் நடவடிக்கைகள், அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கின்றன.

ஜூலை 14-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கமணி, 'தனியார் ஆலைகள் 527 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை, 15 நாட்களுக்குள் கொடுப்பதாக முதல்வரிடம் உறுதியளித்துள்ளனர்’ என்று அறிவித்தார். அவர் சொன்ன 15 நாள் கெடு, ஜூலை 29-ம் தேதியோடு முடிந்துவிட்டது. இதையடுத்து, ஜூலை 31-ம் தேதி வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கையின்போது, கரும்புக்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'சில ஆலைகள் குறிப்பிட்ட தொகையை வழங்கிவிட்டன. இன்னும் 15 நாட்களில் முழுமையாகக் கொடுத்து விடுவார்கள்’ என்று மீண்டும் வாய்தா வாங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி.

'விவசாயிகளுக்கு ஒரு சிறு பிரச்னை என்றாலும், என்னால் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது. விவசாயிகளின் வீழ்ச்சியில் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது’ என தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக சென்று பேசிய முதல்வர், தமிழகம் முழுவதும் இருக்கும் இரண்டே கால் லட்சம் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற நினைக்கிறாரா... அல்லது 24 ஆலைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் ஏழு, எட்டு முதலாளிகளைக் காப்பாற்ற நினைக்கிறாரா... என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

தொழில் துறை அமைச்சர் தங்கமணி, கரும்புக்கான பாக்கித் தொகை 527 கோடி ரூபாய் என்று ஒரு கணக்கு சொன்னார். ஜூலை 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் 658 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக இன்னொரு கணக்கைச் சொல்கிறார். எது உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்'' என்று விரக்தி பொங்கப் பேசும் விமலநாதன்,

வயிற்றில் அடிக்காதீர்!

''மெட்ராஸ் சர்க்கரைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1949-ன் படி விவசாயிகள் கரும்பைப் பதிவு செய்த 7 நாட்களுக்குள் ஒப்பந்த நகலைக் கொடுக்க வேண்டும். இவற்றை ஆலைகள் பின்பற்றுவதே கிடையாது. மேலும், அரவை செய்யப்பட்ட கரும்புகளுக்கு 7 நாட்களுக்குள் 'ரொக்கக் கிரையப் பட்டியல்’ வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆலைகள் அப்படி செய்யாமல், விருப்பம்போல கொடுக்கின்றனர். தவிர, விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி, அதை தங்கள் ஆலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி பல வகையில் ஆலை முதலாளிகள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறார்கள். அரசுகளும் துணை போய்க்கொண்டே இருக்கின்றன. எங்கள் சோகம் தீரும் நாள்... எந்நாளோ..'' என்று நொந்து கொண்டார்.

-இன்னும் குமுறுவார்கள்

ஆலைகளின் சொத்துக்களை முடக்க வேண்டும்!

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

 தனியார் கரும்பு ஆலைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள், ஆகஸ்ட் 4-ம் தேதியன்று சென்னையில் இரண்டு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினர். புதுச்சேரி, அரியூரில் இருக்கும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையைக் கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்தில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கச் செயல்தலைவர் கே.வி. ராஜ்குமார், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் ஆர்.விருத்தகிரி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஏழெட்டு முதலாளிகள்தான் முக்கியமா?

இதில் பேசிய அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முருகையன், ''பாரி சர்க்கரை ஆலை புதுச்சேரி மாநிலத்தில் இருந்தாலும்... விழுப்புரம், கடலூர் மாவட்டத்திலிருந்துதான் 80% கரும்பு போகிறது. தமிழ்நாட்டில் என்ன விலை அறிவிக்கிறார்களோ அதைத்தான் புதுச்சேரி ஆலைகளும் வழங்கும். கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஒரு டன் கரும்புக்கு 2,650 ரூபாயை விலையாக அறிவித்தார் தமிழக முதல்வர். ஆனால், 2,250 ரூபாயை மட்டுமே வழங்குகின்றனர் புதுச்சேரியில். பாக்கித் தொகை ஏழு மாதமாக வழங்கவில்லை. 9 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம், போராட்டங்களையும் நடத்தினோம். பலன் இல்லாததால், தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே போராட்டம் நடத்துகிறோம்'' என்று சொன்னார்.

சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே தஞ்சாவூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ''உத்தர பிரதேசத் தில் தனியார் ஆலை ஒன்று விவசாயிகளுக்கு 46 கோடி நிலுவைத் தொகை வைத்திருந்தது. இதையடுத்து, வருவாய் வசூல் சட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் மூலம் ஆலையின் 90 கோடி சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளன. இதேபோன்று தமிழக அரசும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

-த. ஜெயகுமார்,
படங்கள்: ஜெ. வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism