Published:Updated:

தள்ளுபடியல்ல... முதலீடு!

தள்ளுபடியல்ல... முதலீடு!

தள்ளுபடியல்ல... முதலீடு!

தள்ளுபடியல்ல... முதலீடு!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்றதுமே... கடன்களை தள்ளுபடி செய்து, விவசாயிகளை மனங்குளிர வைத்துள்ளன.

இந்நிலையில், ''விவசாயக் கடன் தள்ளுபடி தேவையில்லாதது. 50 சதவிகித அளவுக்கு விவசாய உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் சூழலில்தான் தள்ளுபடி பற்றி யோசிக்க வேண்டும்'' என்று இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனைக்கும், 'இதில் அரசியல் ஏதுமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துப் போனதால், ஆந்திராவின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறேன்' என்று தெளிவாகவே கூறியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

தள்ளுபடியல்ல... முதலீடு!

ஆந்திரா மட்டுமல்ல, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல பகுதி விவசாயிகளும் கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்டச் சூழலில், கடன் தள்ளுபடியை விமர்சிப்பது... அர்த்தமற்றது.

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது, தனிப்பட்ட நபர்களுக்குக் காட்டும் சலுகையல்ல... நாட்டுக்காக செலவிடப்படும் முதலீடு! ஆம், இந்த நாட்டின் 120 கோடி மனித உயிர்களின் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் உயர்பொறுப்பை ஏற்றிருக்கும் உழவர்களுக்குச் செய்யும் மரியாதை!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism