Published:Updated:

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்!

நா. விஜயரேவதி, ரா. கீர்த்திகா படங்கள்: கா. முரளி

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்!

நா. விஜயரேவதி, ரா. கீர்த்திகா படங்கள்: கா. முரளி

Published:Updated:

பயிற்சி

பசுமை விகடன் மற்றும் திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை இணைந்து,  'உயிரித் தொழில்நுட்பமும் இயற்கை வேளாண்மையும்’ என்கிற தலைப்பில், ஒருநாள் பயிற்சிப் பட்டறையைச் சிறப்பாக நடத்தின. ஆகஸ்ட் 2-ம் தேதியன்று, கல்லூரி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் முன்பதிவு செய்திருந்த சுமார் 250 விவசாயிகள் கலந்துகொண்டனர்! நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ. குமரனின் முழுஒத்துழைப்புடன், உயிரித்தொழில்நுட்பவியல் துறை தலைவர் இரா. பிரவின்குமார் செய்திருந்தார்.

நிகழ்வில் பேசிய கல்லூரி முதல்வர் வீ. ராமநாதன், ''லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதைச் சமாளிப்பதற்கு பல்வேறுவிதமான யோசனைகள் சொல்லப்பட்டன. அதில் ஒன்று, 'திங்கள்கிழமை இரவு எல்லோரும் பட்டினியாக இருக்க வேண்டும்’ என்பது. இப்படி பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட பிறகு 'பசுமை புரட்சி’யைக் கொண்டு வந்தனர். இது, உணவுப் பஞ்சத்தைப் போக்கினாலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் விஷங்கள் நம் உணவில் இல்லாமல் இருக்க, விவசாய முறைகள் உயிர்த்தெழ வேண்டும். இதற்கு உயிரித் தொழில்நுட்பத்துடன் இணைந்த இயற்கை வேளாண்மையைக் கடைபிடிக்க வேண்டும்'' என்று கோடிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்!

பேராசிரியர் நிர்மலாகுமாரி (உயிரியியல் தொழில்நுட்பத்தில் சிறுதானிய சாகுபடி), ஜோஸ்பின் ஆரோக்கியமேரி (வருமானம் கொட்டும் தேனீ வளர்ப்பு), அசோலா பாலகிருஷ்ணன் (பால் வளம் கூட்டும் அசோலா வளர்ப்பு), சக்கரவர்த்தி (காசுகொட்டும் காளான் வளர்ப்பு), ஏகாம்பரம் (இயற்கை இடுபொருள் தயாரிப்பு) ஆகியோர் பயிற்சி கொடுத்தனர்.

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்!

செங்கத்திலிருந்து வந்திருந்த அன்பழகன், ''ஏற்கெனவே 'பசுமை விகடன்’ இதழில் வந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, ஒரு ஏக்கர் நிலத்தில் 'ஆற்காடு கிச்சலி’ சாகுபடி செய்தேன். இயற்கை முறையில் 2 கிலோ விதையில் ஒற்றை நாற்று நடவு செய்து 40 மூட்டை அறுவடை செய்திருக்கிறேன். இப்போது, திருவண்ணாமலை மண்ணுக்கு, ஐந்து துறைகளைச் சேர்ந்த ஐந்து மாணிக்கங்களை அழைத்து வந்து, பல்வேறுவிதமான தொழில்நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை'' என்று நெகிழ்ந்தார்.

உண்ணாமலைப்பாளையத்திலிருந்து வந்திருந்த எழிலரசி, ''சிறுதானியங்களோட சிறப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். இதையெல்லாம் எங்க விவசாயக் கூட்டுப் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போறேன்'' என்று குஷியோடு சொன்னார்.

பயிற்சியில் விளக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism