Published:Updated:

கொள்ளிடம் ஆற்றில் கதவணை...

முதல்வரின் முத்தான அறிவிப்பு... கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை...

முதல்வரின் முத்தான அறிவிப்பு... கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

''மழைக்காலத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பெருக்கெடுக்கும் தண்ணீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சிறுசிறு கதவணைகள் கட்டி நீரைச் சேமித்தால், பற்றாக்குறை காலங்களில் பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்'' என டெல்டா விவசாயிகள் நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகிறார்கள். மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலுமே இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக 'பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தோம்.

கொள்ளிடம் ஆற்றில் கதவணை...
கொள்ளிடம் ஆற்றில் கதவணை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி, சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ''காவிரியின் பிரதான வெள்ளநீர்ப் போக்கியான கொள்ளிடம் ஆற்றில் கீழணை தவிர, எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆதனூர்-குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே 400 கோடி ரூபாய் செலவில், 0.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கதவணை கட்டப்படும்'' என அறிவித்திருக்கிறார். இது, டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றி நம்மிடம் மகிழ்ச்சியுடன் பேசினார், கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி. 'விவசாயிகள்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை...

கோரிக்கைக்காக மட்டும் இந்த அறிவிப்பு வரல. இதுக்கு 'பசுமை விகடனோ’ட பங்களிப்பும் நிறைய இருக்கு. கதவணைகளோட அவசியத்தையும், அதனால், ஏற்படும் பயன்களையும் ஆணித்தரமா, அழுத்தமா தொடர்ந்து பதிவு செஞ்சது, பசுமை விகடன். அதனால, பசுமை விகடனுக்கு எங்களோட நன்றிகள். தமிழக முதல்வருக்கும் பசுமை விகடன் மூலமாவே நன்றியை யும் பாராட்டுக்களையும் தெரிவிச்சுக்குறோம்.

இந்தக் கதவணை கட்டுனா கிட்டத்தட்ட 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு

கொள்ளிடம் ஆற்றில் கதவணை...

பாசனம் கிடைக்கும். சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், மயிலாடு துறை, சீர்காழினு ஏகப்பட்ட ஊர்கள்ல லட்சக்கணக்கான மக்களுக்கு தாராளமா குடிநீர் கிடைக்க வாய்ப்பிருக்கு. நிலத்தடி நீர் மட்டம் உயரும்கிறதால... கடல்நீர், நிலத்துக் குள்ள ஊடுருவாது'' என்று சொன்னார்.

இத்திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை மேற்பார்வைப் பொறியாளர் நடராஜன். அவர் நம்மிடம், ''இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். ஆனா, இது மட்டும் போதாது. கீழணைக்கு மேலே 7 கதவணைகள் கட்டினால்தான் கிட்டத்தட்ட வருஷத்துக்கு 52 டி.எம்.சி. அளவு தண்ணீரை சேமிக்க முடியும். அதுக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்'' என்று சொன்னார்.

பசுமை விகடனின் பங்களிப்பு!

*10.9.2007-ம் தேதியிட்ட இதழில் 'கடலுக்குத் தாரை வார்க்கப்படும் 100 டி.எம்சி. தண்ணீர். சேமிக்க வழி இல்லையா... மனம் இல்லையா?’ என்ற தலைப்பில் விரிவான செய்தி.

*கதவணையை வலியுறுத்தி 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 12, 13 ஆகிய நாட்களில் கல்லணையில் இருந்து சிதம்பரம் வரை விவசாயிகள் நடத்திய கோரிக்கைப் பேரணி பற்றி 10.9.2012-ம் தேதியிட்ட இதழில், 'டெல்டாவை வாழ வைக்கும் கதவணைத் திட்டம்... கண்டுகொள்ளாத அரசு... கவலையில் விவசாயிகள்’ என்ற தலைப்பில் செய்தி.

*கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது... 'கல்லணை சரி... கதவணை?’ என்ற தலைப்பில் 10.2.2013-ம் தேதியிட்ட இதழில், கதவணைகளின் தேவை குறித்து விரிவான செய்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism