Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

பட்டுப்புழு வளர்ப்பு!

மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி பசுமைக் குடில்களில் காய்கறி சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 27-ம் தேதி நெல் சாகுபடிக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள்; 28-ம் தேதி சமச்சீர் சிறுதானிய உணவு சமைத்தல்; செப்டம்பர் 2-ம் தேதி வேளாண் சார்ந்த இணையதளப் பயன்பாடு; 4-ம் தேதி தயார்நிலை சிறுதானிய உணவு வகைகள்; 10-ம் தேதி லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (ஒத்தக்கடை அருகில்), மதுரை-625104. தொலைபேசி: 0452-2422955

தண்டோரா

 பசுந்தீவனம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி பண்ணை வருமானத்தைப் பெருக்க விவசாய நிலங்களில் மரங்கள் சாகுபடித் தொழில் நுட்பங்கள்; செப்டம்பர் 4-ம் தேதி காளான் வளர்ப்பு; 10 மற்றும் 11-ம் தேதி விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு; 12-ம் தேதி பசுந்தீவன விதை உற்பத்தி முறைகள்; 18-ம் தேதி தேனீ வளர்ப்பு; 19-ம் தேதி ஊறுகாய் வகைகள் தயாரித்தல்; 25-ம் தேதி முயல் வளர்ப்பு; 29-ம் தேதி ஹைட்ரோபோனிக் முறை யில் பசுந்தீவன உற்பத்தி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
(எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அருகில்)
காட்டுப்பாக்கம்-603203
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044-27452371

மாடித் தோட்டம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி காளான் வளர்ப்பு; 28-ம் தேதி மாடித் தோட்டம் அமைத்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,  
272, பெருமாள் நகர்,
புதுவல்லியம்பாளையம் ரோடு,
கலிங்கியம் (அஞ்சல்), கோபிச்செட்டிபாளையம்.
தொலைபேசி: 04285-241626

தண்டோரா

 நாட்டுக் கோழி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகக் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636001. தொலைபேசி: 0427-2410408

 வெள்ளாடு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 28-ம் தேதி தேனீ வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
செல்போன்: 94885-75716, 99416-47893

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்