Published:Updated:

மேட் இன் குப்பை!

மேட் இன் குப்பை!

மேட் இன் குப்பை!

மேட் இன் குப்பை!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'உலக நாடுகளே... இந்தியாவுக்கு வந்து, பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். பிறநாடுகளில் விற்றுக் கொள்ளுங்கள். உலகம் முழுவதும் உலா வரும் பொருட்கள், 'மேட் இன் இந்தியா’ என்ற அடையாளத்துடன் உலா வர வேண்டும்!’

-நாட்டின் 68-வது சுதந்திர தினத்தன்று இப்படி எழுச்சி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கூடவே, ''நம் தேசத்தை நாம் சுத்தமாக வைக்கவேண்டும். தேசத்தை அழகாகக் கட்டமைக்க, கிராமங்களை முதலில் சீரமைக்க வேண்டும்'' என்றும் கூறியிருப்பதுதான்... சிரிப்பையும் வேதனையையும் ஒருசேர கிளப்புகிறது.

மேட் இன் குப்பை!

தொழிற்சாலைகளும், கிராமப்புற முன்னேற்றமும் வேலைவாய்ப்புக்கான வழிகளே. ஆனால், ஏற்கெனவே, இங்கே கடைவிரித்திருக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள்... நாட்டின் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் கெடுதலைத்தானே தொடர்கின்றன. 'வேலைவாய்ப்பு, வளர்ச்சி’ என்றெல்லாம் வார்த்தைஜாலம் காட்டி... கங்கை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நதிகள் மற்றும் நதிக்கரைகளை நாசம் செய்கின்றன. நீர்நிலைகளை எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாற்றி, மிச்சமிருக்கும் நிலத்தடி நீரையும் தாறுமாறாக உறிஞ்சுகின்றன.

இத்தகையச் சூழலிலும், புதிதுபுதிதாக தொழிற்சாலைகளை உருவாக்கி, 'மேட் இன் இந்தியா' என்று போட்டுக்கொண்டால்... நாளைக்கு இந்தியாவைப் பார்த்து, 'மேட் இன் குப்பை' என்று சொல்லி உலகம் சிரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

எனவே, 'பொல்யூஷன் ஃப்ரீ இந்தியா' என்பதை நோக்கி கவனத்தைத் திருப்புவதுதான் முதல் வேலையாக இருக்கவேண்டும்!

ஆசிரியர்