பயிற்சி

பசுமை விகடன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் கைகோத்து... நம்மாழ்வாரின் 'இனியெல்லாம் இயற்கையே...’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் தர்மபுரி மாவட்டம், வாழைத்தோட்டம் கிராமத்தில் உள்ள கோவிந்தராஜ் பண்ணையில் பயிற்சிப் பட்டறையை நடத்தினர். இதில் 35 பேர் பங்கேற்றனர். கீரப்பட்டியைச் சேர்ந்த கணபதி, பொம்மிடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி அருண் உள்ளிட்ட பலரும் இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

''எனக்கு ஆறரை ஏக்கர் நிலமிருக்கு. இதுல, பாக்கு, வாழை, நெல், மஞ்சள்னு பயிர் பண்ணிருக்கேன். 'பசுமை விகடன்’ நடத்தின ஜீரோ பட்ஜெட் உள்ளிட்ட இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துக்கிட்டதால... அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யானு தயாரிச்சு, இயற்கை விவசாயம் செஞ்சுக் கிட்டு இருக்கேன். ரசாயனத்துல கிடைச்ச அளவுக்குக் குறைவில்லாம இயற்கை விவசாயத்துல மகசூல் கிடைக்குது. அதே நேரத்துல செலவும் கம்மியா இருக்கு. இயற்கை விவசாயத்துல மகசூல் குறையும்னு சொல்றதெல்லம் பொய்'' என்று ஊக்கமூட்டும் வகையில் பேசி, நிகழ்வைத் துவங்கி வைத்தார் பண்ணையின் உரிமையாளர் கோவிந்தராஜ்.

தாதராவலசை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் துரைசாமி, ''15 ஏக்கர்ல தென்னை, பாக்கு, மஞ்சள்னு போட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகுதான், தென்னையில மகசூல் கூடுச்சு. செலவும் குறைஞ்சுது. நான் இயற்கை விவசாயத் துக்கு மாறினதுக்கு காரணம் பசுமை விகடனும் இதுபோன்ற பயிற்சிகளும் தான்'' என்று நம்பிக்கையூட்டினார்.

'ஏன் வேண்டும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் அறச்சலூர் செல்வம்; கால்நடை மருத்துவம் பற்றி மரபுசார் மூலிகை மருத்துவப் பேராசிரியர் டாக்டர். புண்ணியமூர்த்தி; சிறுதானியங்கள் பற்றி, திருவண்ணாமலை சிறுதானிய மகத்துவ மையப் பேராசிரியர் டாக்டர். நிர்மலகுமாரி; தேனீ வளர்ப்புப் பற்றி ஈரோடு தண்டாயுதபாணி; பூச்சி மேலாண்மை பற்றி பூச்சியியல் நிபுணர் நீ. செல்வம்; இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புப் பற்றி இயற்கை விவசாயி ஏகாம்பரம் ஆகியோர் கருத்துக்களைப் பகிர்ந்ததுடன், தேவையான பயிற்சிகளையும் வழங்கினர்.

பயிற்சிபெற்ற விவசாயிகள் புத்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் புறப்பட்டனர்.