Published:Updated:

'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்..!'

காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்

'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்..!'

காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்

Published:Updated:

கூட்டம்

அவள் விகடன், பசுமை விகடன், ராணிப்பேட்டை, 'பெல்’ இயற்கையின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஆற்காடு, முகுந்தராயபுரம் லயன்ஸ் கிளப் ஆகியவை இணைந்து... 'வீட்டிலும் செய்யலாம்... விவசாயம்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் 24-ம் தேதி, வேலூர் மாவட்டம், திருவலம் கிராமத்தில் ஒருநாள் கருத்தரங்கத்தை நடத்தின. சி.பி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை 'பெல்’ இயற்கை நண்பர்கள் அமைப்பின் கங்காதரன் தொகுத்து வழங்க... லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த எஸ். ரெங்கராஜன், 'பெல் சப்ளையர்ஸ் அசோசியேஷன்' தலைவர் கே.எம். பாலு, மகாத்மா காந்தி முதியோர் இல்ல அறக்கட்டளைத் தலைவர் ஜெ. லட்சுமணன் உள்ளிட்டோர் மேடையில் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்..!'

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த காட்பாடி, காவல்துறை ஆய்வாளர் திருநாவுக்கரசு, ''காவல்துறையில் இருப்பவர்களை கோயில் திருவிழா மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் அழைப்பார்கள். இதுமாதிரியான விவசாய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், 'விவசாயம் பார்க்க முடியவில்லையே’ என்கிற ஏக்கம் இருக்கிறது. இப்படி ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரபிரசாதம்தான். இத்தனை பேர் இங்கே வந்திருப்பதைப் பார்க்கும்போது, இதுநாள் வரையில் 'பசுமை விகடன்' இதழைப் படிக்காததற்காக நான் வருத்தப் படுகிறேன்'' என்று சொன்னார்.

'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்..!'

நிகழ்ச்சியில் 'வீட்டுத் தோட்ட வடிவமைப்பு மற்றும் காய்கறிகள் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பற்றி 'ஹோம் எக்ஸ்னோரா’ அமைப்பின் தலைவர் 'பம்மல்’ இந்திரகுமார், அழகாக பதியம் போட்டார். 'தேனீக்களை வீட்டிலும் வளர்க்கலாம்’ என்று பேசிய வசந்த குமார், 'தேனீ வளர்க்கும் நுட்பங்களை அனைவருக்குள்ளும் புகுத்தினார். 'இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு’ பற்றிப் பேசிய முன்னோடி இயற்கை விவசாயி ராமகிருஷ்ணன், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், பூச்சிவிரட்டிகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு முறைகள் ஒவ்வொன்றையும் ஆழமாக எடுத் துரைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism