Published:Updated:

ஏன் இந்த முட்டுக்கட்டை ?

ஏன் இந்த முட்டுக்கட்டை ?

ஏன் இந்த முட்டுக்கட்டை ?

ஏன் இந்த முட்டுக்கட்டை ?

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

சிறுதானியங்களின் மகத்துவம், பெருவாரியாகப் பேசப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. ஆம், மூலை முடுக்குகளில் எல்லாம்கூட, சிறுதானியங்களின் பெருமையும், அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளின் சிறப்பும் அக்கறையோடு பகிரப்படுகிறது. அரசாங்கமே, ஆங்காங்கே சிறுதானிய உணவுத் திருவிழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம்... 'சிறுதானிய உணவுகளில்தான் சத்துக்கள் அதிகம், இவை வறட்சியைத் தாங்கி வளரும், விவசாயிகளுக்குக் கடன் தொல்லையைக் கொண்டு வராது' என்று பல ஆண்டுகளாகவே இயற்கை ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் குரல் கொடுத்து வருவதுதான். பசுமை விகடன் இதழிலும் ஆரம்பம் முதலே, சிறுதானியங்களைப் பற்றிய கட்டுரைகள் தொடர்கின்றன. 'சிறுதானியங்கள்தான் எதிர்கால உணவு' (திutuக்ஷீமீ திஷீஷீபீ) என உலக அளவிலான விஞ்ஞானிகள் உறுதியோடு பேசிவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன் இந்த முட்டுக்கட்டை ?

இத்தகைய முயற்சிகள் மூலம், சிறுதானிய விவசாயம் புத்துயிர் பெற்றிருப்பதோடு, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பருவமழை பொய்த்தபோதும், விவசாயிகளுக்கு நல்ல மகசூலைக் கொடுத்திருப்பதால், பயிரிடும் பரப்பு அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்டு வந்த சிறுதானிய உற்பத்திக்கான சிறப்புத் திட்டம், தமிழகத்தில் மெள்ள கண்டுகொள்ளப்படாமல் விடும் அபாயம் ஏற்பட்டிருப்பது கவலைகொள்ளச் செய்கிறது!

'படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயிலா?’ என்பது போல... ஒரு பக்கம் சிறுதானியத்துக்காக விழாக்களை நடத்திக் கொண்டே, மறுபக்கம் அதன் சாகுபடி பெருகுவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த அளவுக்கு சரி?

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism