Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

 - ஆசிரியர்

தண்டோரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுமைக் குழு

 காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 16-ம் தேதி தேனீ வளர்ப்பு; 17-ம் தேதி காளான் வளர்ப்பு; 20-ம் தேதி மாடித்தோட்டம் அமைத்தல்; 28-ம் தேதி பண்ணையில் மீன் வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டுதல்; 31-ம் தேதி இயற்கைப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,  
272, பெருமாள் நகர், புதுவல்லியம்பாளையம் ரோடு,
கலிங்கியம் (அஞ்சல்), கோபிச்செட்டிபாளையம்.
தொலைபேசி: 04285-241626

தண்டோரா

 வெள்ளாடு!

பெரம்பலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 17-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பும், நோய் மேலாண்மையும்; 30-ம் தேதி ஜப்பானியக் காடை வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
பெரம்பலூர்.
தொலைபேசி: 04328-224599

 தேனீ வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 15-ம் தேதி தேனீ வளர்ப்பு; 24-ம் தேதி பால் பொருட்கள் தயாரித்தல்; 31-ம் தேதி மண்புழு உரம் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி-630206
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04577-264288

 காடை!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 29-ம் தேதி 'காடை வளர்ப்பும் சந்தைப்படுத்தலும்’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.
தொலைபேசி: 0427-2410408

 நீடித்த கரும்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 30-ம் தேதி, நீடித்த, நிலையான கரும்பு சாகுபடிப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்)
காட்டுப்பாக்கம்-603203
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044-27452371

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புக் கொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.