Published:Updated:

ஏன் முடியாது, நம்மால்?

ஏன் முடியாது, நம்மால்?

ஏன் முடியாது, நம்மால்?

ஏன் முடியாது, நம்மால்?

Published:Updated:

னைவருக்கும் பசுமை வணக்கம்!

''விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான சந்தைப்படுத்துதல் அவசியம். நமக்காகத்தான் விவசாயிகள் உழைக்கின்றனர். ஆனால், அவர்கள் வளர்ச்சி பெறவில்லை. பிறகு, அவர்கள் எங்கே செல்வார்கள்? எனவே, அவர்களுக்குக் கூடுதலாக பலன் கிடைக்க வேண்டும்''

-கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் 110 ஏக்கர் உணவுப் பூங்காவை, சமீபத்தில் திறந்துவைத்தபோது இப்படி அக்கறை காட்டிய பிரதமர் நரேந்திர மோடி,

''பெப்ஸி மற்றும் கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள், சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பெப்ஸி மற்றும் கோக் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருட்களில் ஐந்து சதவிகிதம் இயற்கைப் பழச்சாறுகளைக் கலப்பதற்கு ஒப்புக்கொண்டால், நமது விவசாயிகள் அதிக பணத்தைச் சம்பாதிக்க முடியும்'' என்று ஒரு யோசனையையும் முன்வைத்திருக்கிறார்.

ஏன் முடியாது, நம்மால்?

பிரதமரின் அக்கறை... பாராட்டுதலுக்குரியது. அதேசமயம், அவருடைய யோசனை, ஆழ்ந்த யோசனைக்குரியதே!

எதற்காக, மீண்டும் மீண்டும் விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்க வேண்டும்? ஏன், அரசாங்கமே பழச்சாறு தயாரிப்பை நேரடியாக நடத்தி, நேரடியாகவே சந்தைப் படுத்தலாமே!

இமாச்சலப் பிரதேச மாநில அரசு, பழச்சாறு நிறுவனங்களை இந்தியா முழுக்கவே நடத்திக் கொண்டிருக்கிறது, பல ஆண்டுகளாக! இப்படியிருக்க... ஏன் இந்த விஷயத்துக்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் நாம் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசாங்கமே மதுவை விற்றுக்கொண்டிருக்கிறது, ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமான லாபத்துடன். குடிகெடுக்கும் மதுவையே ஓர் அரசாங்கம் சிறப்பாக விற்பனை செய்யும்போது, பல கோடி குடிகளை வாழவைக்கும் பழச்சாறு விற்பனையை அரசாங்கத்தால் நடத்த முடியாதா என்ன?

-ஆசிரியர்