Published:Updated:

சாதனை-12 : மரபணு மாற்றுப்பயிர்கள் தேவையா? மாற்றத்தை உருவாக்கிய பசுமை விகடன்!

அனந்து
பிரீமியம் ஸ்டோரி
News
அனந்து

மரபணு மாற்றுப்பயிர்கள் - அனந்து ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு

ண், காற்று, தேனீக்கள், மனித ஆரோக்கியம், விவசாயிகளின் வாழ்வாதாரம், விதை இறையாண்மை என அனைத்திற்கும் கேடு விளைவிக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கொடிய விளைவுகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது பசுமை விகடன். சுற்றுச்சூழலுக்கு இவை ஏற்படுத்தப்போகும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்களின் பேட்டியை வெளியிட்டது பசுமை விகடன்தான். மரபணு மாற்றுப் பயிர்கள் நமக்கு ஏன்? இதைக் கொண்டு வர அரசுகளை ஆட்டிப்படைப்பவை எவை? இவற்றைத் திணிக்க முனையும் அரசியல் எது என்று எல்லாவற்றையும் தோலுரித்தது.

மரபணு மாற்று கத்திரிக்காய், மரபணு மாற்றுக் கடுகு இவற்றையெல்லாம் கொண்டு வர அரசுகள் எத்தனித்தபோது அதைத் தடுக்கப் போராடும் எங்களைப் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இன்று ஆட்சியாளர்களோ, அரசு அதிகாரிகளோ, பல்கலைக்கழகமோ மரபணு மாற்று விதைகளை அச்சப்பட்டுக் கொண்டு வர வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மரபணு மாற்று விதைகள் சம்பந்தமாக டெல்லி, சென்னை என எங்கு எது நடந்தாலும் அந்தச் செய்தியை உடனடியாக மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்வதில் பசுமை விகடன் முன்னிற்கிறது.

சாதனை-12 : மரபணு மாற்றுப்பயிர்கள் தேவையா? மாற்றத்தை உருவாக்கிய பசுமை விகடன்!

விதைத் திருவிழாக்கள், மரபணு மாற்றுப் பயிர்கள், பூச்சிக் கொல்லி விஷம் கலந்த உணவுப் பொருள்கள் குறித்து எழுதியதன் பலனாக இன்று மக்கள் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் வாங்க இயற்கை அங்காடிகளை நோக்கிச் செல்கிறார்கள்.

நமது நாட்டில் நடக்கும் விவசாயத் தற்கொலைகளில் 70% பருத்தி விவசாயிகளே (அவர்கள் பயிரிடுவதில் 95% பி.டி பருத்தியே!). இதிலிருந்து சாமானியனுக்கும் அதன் கொடிய விளைவுகளைத் தெரிந்துகொள்ள உதவியது பசுமை விகடன்.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு மாற்று இயற்கை விவசாயமே. நமது மரபு விதைகளைக் காத்து அவற்றைப் பயிரிட்டாலே பூச்சி மேலாண்மை எளிது. இவ்வளவு ரசாயனங்கள் தேவையில்லை. மேலும் அவை இயற்கையிலேயே வறட்சி, பூச்சி தாக்கத்தைத் தாங்கக்ககூடியவை. அதனுடன் பயிர் பன்மயமும் விதைப் பன்மயமும் இணைந்தால், சிறப்பான ஒரு வழி கிடைப்பது உறுதி. இதைத்தான் 14 ஆண்டுகளாகப் பசுமை விகடன் போதித்து வருகிறது. உதாரணத்திற்குப் பி.டி பருத்திக்குப் பதிலாகக் கருங்கண்ணி போன்ற நமது பாரம்பர்ய விதைகள் இருக்கின்றன என்று அறிமுகப்படுத்தியதே பசுமை விகடன்தான்.