Published:Updated:

சாதனை-11 : இயற்கை விவசாயிகளின் கைகளில் இ.எம்! - 20 ரூபாயில் இயற்கைப் பரிசு!

முனைவர் அ.உதயகுமார், ஸ்டீபன் ஜெபக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
முனைவர் அ.உதயகுமார், ஸ்டீபன் ஜெபக்குமார்

இ.எம் - முனைவர் அ.உதயகுமார், இணை முதல்வர், தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி.

மிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இயற்கை விவசாயிகள் சர்வ சாதாரணமாகப் புழங்கக்கூடிய ஒரு இடுபொருளாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இ.எம் என அழைக்கப்படும் திறன்மிகு நுண்ணுயிரி திரவம். எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M). பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி, நோய் தடுப்பு மருந்தாகவும், தாவர மற்றும் கால்நடை கழிவுகளை விரைவாக மட்க செய்து, மண்ணுக்கு உரமாக மாற்றவும், இதனை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பசுமை விகடன் மூலமாக, இதைத் தமிழ்நாட்டு விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு செல்ல, நான் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்திருக்கிறேன் என நினைக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சத்தீஸ்கரிலும் பசுமை விகடன், இதற்கு மேடை அமைத்துக் கொடுத்தது. அங்கும் அறிமுகம் செய்தேன். விவசாயிகள் அதிக விலை கொடுத்து இதைக் கடைகளில் வாங்க வேண்டியதில்லை. அரிசிச் சோறு, வெல்லம் பயன்படுத்தி மிக எளிதாகத் தயார் செய்யலாம்.

சாதனை-11 : இயற்கை விவசாயிகளின் கைகளில் இ.எம்! - 20 ரூபாயில் இயற்கைப் பரிசு!

தமிழ்நாட்டில் தற்போது இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யாவுக்கு நிகராக, திறன்மிகு நுண்ணுயிரி திரவமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், பசுமை விகடனின் வருகைக்கு முன்பு, விவசாயிகளுக்கு மிகவும் அந்நியப்பட்ட, விவசாயத்திற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு ஹைடெக் பொருளாகத்தான் பார்க்கப்பட்டது.

வேஸ்ட் டீகம்போஸர் - ஸ்டீபன் ஜெபக்குமார், முன்னோடி விவசாயி

சாதனை-11 : இயற்கை விவசாயிகளின் கைகளில் இ.எம்! - 20 ரூபாயில் இயற்கைப் பரிசு!

ஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக் கரைசல், இ.எம்... வரிசையில் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேஸ்ட் டீகம்போஸர் என்ற அற்புதம். நுண்ணுயிர்கள் அடங்கிய மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவை 20 ரூபாயில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. முதலில் அறிமுகமானபோது எல்லா விவசாயிகளையும்போலப் பசுமை விகடன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நானும் வாங்கிப் பயன்படுத்தினேன். பயிர்களில் நல்ல மகசூல் தெரியவும் தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தி வந்தேன். பூச்சிகளை வராமல் காப்பது, மகசூலைப் பெருக்கியது, நிலத்தை வளமாக்கியது என்று இதன் பலன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 200 லிட்டர் தண்ணீர், 2 கிலோ வெல்லம், ஒரு வேஸ்ட் டீகம்போஸர்(30 கிராம்) பாட்டில் போதும் வாழ்நாள் முழுவதும் கரைசலைத் தயார் செய்துகொண்டே இருக்கலாம். அரசாங்கம் செய்ய வேண்டிய பணியைப் பசுமை விகடன் செய்திருக்கிறது.