நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடா இப்போது தமிழ்நாட்டில்..! என்னவிதமான உதவிகளை எதிர்பார்க்கலாம்?

வேளாண் ஏற்றுமதி
பிரீமியம் ஸ்டோரி
News
வேளாண் ஏற்றுமதி

A G R I E X P O R T

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது வேளாண் விளைபொருள் களின் ஏற்றுமதி சிறப்பாக இருந்தது. இதனால், தொழில்முனைவோர்களும் ஏற்றுமதியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அபிடாவின் (APEDA-Agricultural and Processed Food Products Export Authority) மண்டல அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது அபிடாவின் தலைவராக இருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அங்கமுத்து ஐ.ஏ.எஸ் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் அபிடா, வேளாண் ஏற்றுமதிக்கான அனைத்து விஷயங் களையும் கவனித்துவரும் மத்திய அரசின் அமைப்பாகும். இந்த அமைப்பு மூலமாகப் பல்வேறு சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அவருடன் பேசினோம்.

அங்கமுத்து
அங்கமுத்து

“வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு தரும் புள்ளி விவரங்கள்படி, உலக வேளாண் ஏற்றுமதி நாடுகளில் 2019-ம் ஆண்டு இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி குறையவில்லை. 2019-20-ம் நிதியாண்டு காலத்தில் 71,500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆனது. இதுவே, 2020-21-ம் நிதியாண்டு காலத்தில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 89,501 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. அதாவது, 18,000 கோடி ரூபாய் அதிகம்.

கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி 172% உயர்ந்திருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன.

அபிடா நிறுவனம், வேளாண் விளைபொருள்கள்/ மதிப்பு கூட்டப் பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க நிதியுதவியை வழங்கு கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கான திட்டம், தர மேம்பாட்டுக்கான திட்டம், சந்தை ஊக்குவிப்புக்கான திட்டம், இயற்கை வழி வேளாண் தயாரிப்புகளை மேம்படுத்து வதற்கான திட்டம் போன்ற திட்டங் களின்படி நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதை எங்கள் இணையதளத்தின் மூலமாகவும் (apeda.gov.in) அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.

வேளாண் ஏற்றுமதி
வேளாண் ஏற்றுமதி

பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து வகையான அரிசி வகைகள், நிலக்கடலை, திராட்சை, மாம்பழக் கூழ், கோவைக்காய், நீர்சத்து நீக்கப்பட்ட வெங்காயம் (Dehydrated Onion), மாதுளை, மாம்பழங்கள் மற்றும் எருமை இறைச்சி ஆகியவை அதிக சந்தை வாய்ப்புள்ளவற்றில் முதல் 10 இடங்களில் இருக்கின்றன.

இதற்கடுத்த நிலையில் வாழை, உருளைக்கிழங்கு, வெல்லம், உடனடி உணவு வகைகள், எளிதில் உறையக் கூடிய உணவு வகைகள் (quick freezing food products), தானிய தயாரிப்புகள், பால் பொருள்கள், முருங்கை, சிறுதானியங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியப் பொருள்கள், மக்கானா, உருளைக் கிழங்கு பவுடர் மற்றும் ஃபிளேக்ஸ், பிஸ்கெட்ஸ், ஒயின், வளர்ப்பு பறவையின (கோழி) பொருள்கள், இயற்கை வேளாண் விளை பொருள்கள் ஆகியவை சிறந்த சந்தைத் திறனைக் கொண்டிருக் கின்றன. இவற்றின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அபிடா எடுத்து வருகிறது.

வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை அதிகம் விரும்பி உண்கின்றனர். சத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட, தூய்மையான பொருளாக இருந்தால் அதற்கான விற்பனை மதிப்பு அதிகம். அதிக வருவாய் பெறும் மக்கள் வசிக்கும் நாடுகளில் உடனடி உணவுகளான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவை முக்கியச் சந்தையாக உருவெடுத்து நிற்கின்றன.

அபிடாவில் உறுப்பினர் ஆக நிறைய பேர் விரும்புகின்றனர். அவர்கள் அபிடாவால் பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளுள் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு அதிகமானவற்றை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நபரும் ஏற்றுமதியாளராகப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), அபிடாவின் பட்டியலிடப்பட்ட பொருள்களின் ஏற்றுமதியாளருக்கு வழங்கப் படுகிறது.

இந்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதிக் கொள்கை, வேளாண் ஏற்றுமதியின் மதிப்பை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதிப் பொருள்களின் தொகுப்பை இன்னும் பன்மயப் படுத்துவது, அதிக மதிப்புள்ள பொருள் களின் ஏற்றுமதியை உயர்த்துவது போன்ற குறிப்பிட்ட குறிக்கோள்களை கொண்டிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப் பாக்குவதே அதன் நோக்கமாகும்.

மாநில அரசு முகமைகள், ஏற்றுமதி யாளர்கள், உணவு பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மற்றும் ஏற்றுமதியின் வழங்கல் சங்கிலித்தொடரில் தொடர்புடைய பிற அமைப்புகளின் வழியாக விவசாயிகளுக்கும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் அடிக்கடி பயிற்சிகள்/ விழிப்பூட்டல் திட்டங்கள்/ அவுட்ரீச் (வெளிக்கள) திட்டங்கள் ஆகியவற்றை அபிடா ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.

மின்னஞ்சல்கள் வழியாகவும், வலைதளத்தில் தகவலைப் பதிவேற்றம் செய்வதன் வழியாகவும் தொடர்புடைய நபர்களுக்கு இந்தத் திட்டங்கள் பற்றித் தகவல் அளிக்கப்படுகிறது. நிதிசார் உதவியை வழங்குவது, தேசிய மற்றும் சர்வதேச அளவி லான நிகழ்வுகளில் பங்கேற்றல், புதிய சந்தைகளில் நுழைய வகை செய்வது, வெளிக்கள (அவுட்ரீச்) செயல் திட்டங்கள், வாங்குனர் – விற்பனையாளர் சந்திப்பு களையும் (BSMs)மற்றும் மறுகொள் முதலாளர் விற்பனையாளர் சந்திப்புகளை (RBSMs) ஏற்பாடு செய்வது, வேளாண் ஏற்றுமதிகளுக்காகப் பொது உள்கட்ட மைப்புகளை உருவாக்குவது எனச் செயல்பட்டு வருகிறது அபிடா.

இந்தியா, ஒரு விவசாயப் பொருளாதார நாடாகும். இதன் சாத்தியத் திறனைக் கருத்தில் கொள்ளும்போது வேளாண் ஏற்றுமதியில் புதிய தொழில்முனைவோர்களைக் கொண்டு வருவதற்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. தமிழ்நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சென்னை கிண்டியில் அபிடாவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாட்டைச் சேர்ந் தோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஏற்றுமதி செய்ய நினைக்கும் விவசாயிகள் அபிடாவைத் தொடர்புகொள்ளலாமே!

பிட்ஸ்

ந்த நிதி ஆண்டில் இதுவரை 1.95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாகக் கட்டப்பட்ட வருமான வரியைத் திரும்பத் தந்திருக்கிறது நமது வருமான வரித்துறை. இதில் 1.26 லட்சம் கோடி ரூபாய் 2.17 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது!