பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, திருச்சி, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய வாழை சந்தைகளில் திருச்சி மாவட்டம் பல்வேறு பகுதிகளுக்கு வாழைப்பழத்தை அனுப்பும் முக்கிய மையமாகத் திகழ்கிறது. திருச்சி சந்தைக்கு வாழை வரத்து லால்குடி, புதுக்கோட்டை, முசிறி மற்றும் தேனி ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது. தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்குப் புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வரத்தொடங்கியுள்ளது. வர்த்தக மூலங்களின்படி, பண்டிகை காலங்கள் காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவை அதிகரிக்கக்கூடும்.

வாழையின் விலை இனி எப்படி இருக்கும்?

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 12 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வு முடிவின் அடிப்படையில் பிப்ரவரி முதல் மார்ச் 2021 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு 25 ரூபாய், கற்பூரவள்ளி 35 ரூபாய் மற்றும் நேந்திரன் வாழை கிலோவிற்கு 40 ரூபாய் வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,

1.உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி: 0422 2431405.

2.பேராசிரியர் மற்றும் தலைவர்

பழப்பயிர்கள் துறை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் - 641003. தொலைபேசி: 0422 6611269

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு