Published:Updated:

செப்டிக் டேங்கில் சிக்கி ஆண் யானை இறந்த விவகாரம் - தனியார் ரிசார்ட் மேலாளர் கைது!

கே.அருண்
செப்டிக் டேங்கில் சிக்கி ஆண் யானை இறந்த விவகாரம் - தனியார் ரிசார்ட் மேலாளர் கைது!
செப்டிக் டேங்கில் சிக்கி ஆண் யானை இறந்த விவகாரம் - தனியார் ரிசார்ட் மேலாளர் கைது!

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ‘வையில்டு இன்’ தனியார் ரிசார்டின் செப்டிக் டேங்கில் சிக்கி ஆண் யானை பலியான சம்பவத்தில், ரிசார்ட் மேலாளர் மஞ்சுநாத் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வன கோட்டத்திற்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் உள்ள
‘வையில்டு இன்’ தனியார் ரிசார்ட்டின் செப்டிக் டேங்கில் கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சிக்கி பலியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வு செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் கூடலூரை சேர்ந்த மஞ்சுநாத், 35. ரிசார்ட் மேலாளர் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் கைது செய்தனர். மேலும், பெருந்தல்மண்ணாவை சேர்ந்த உம்மர் (45), மலப்புரத்தை சேர்ந்த சிவமோகன், முகமது பசீர் மற்றும்  அப்துல் பசீர் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக ‘வையில்டு இன்’  ரிசார்ட் இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, ரிசார்ட் மூடப்பட்டது.

மேலும், வனத்துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து பொக்காபுரம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த யானையில் உடற்கூராய்வு அறிக்கையில், இடது பின்னங்கால் பலமிழந்து இருந்த நிலையில் செப்டிக் டேங்க்கில் வலது பின்னங்கால் சிக்கி கொண்டதால், அதில் இருந்து வெளியேற முடியாமல் உயிரிழக்க நேரிட்டதும் தெரியவந்தது.