Published:Updated:

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!
பிரீமியம் ஸ்டோரி
இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

கண்டுபிடிப்புதுரை.நாகராஜன் - படங்கள்: வெ.நரேஷ் குமார்

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

கண்டுபிடிப்புதுரை.நாகராஜன் - படங்கள்: வெ.நரேஷ் குமார்

Published:Updated:
இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!
பிரீமியம் ஸ்டோரி
இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

விவசாயம் பொய்த்துப் போகும் சமயங்களிலெல்லாம் விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். அந்தளவுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகள் வளர்ப்பில் உபயோகப்படும்படியான பல நவீன உபகரணங்களைக் கண்டுபிடித்து வருகிறது சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். இதுவரை கால்நடை வளர்ப்பு சம்பந்தமான 24 கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டும் முக்கியமான இரண்டு பொருள்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது பல்கலைக்கழகம்.

ஏ1 (A1) மற்றும் ஏ2 (A2) ஆகிய பால் வகையினங்களைக் கண்டிபிடிக்கும் சோதனைக்கான அட்டை மற்றும் மாடுகளில் சினைப் பிடிக்காமையைச் சரிசெய்யும் வில்லை ஆகியவைதான் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு பொருள்கள். இதுகுறித்து நம்மிடம் விளக்கமாகப் பேசினார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநரகத்தின் பேராசிரியர் முனைவர் குமாரவேல்.

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

“மாடுகளில் நம் நாட்டு மாடுகள், உயர் ரக வெளிநாட்டு மாடுகள் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் வெளிநாட்டு மாடுகளின் பாலை ஏ1 எனவும், நாட்டு மாடுகளின் பாலை ஏ2 எனவும் வகைப்படுத்தியுள்ளனர். சில நிறுவனங்கள் ஏ2 பால் (நாட்டு மாட்டுப்பால்) என்று சொல்லியே சந்தைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நுகர்வோருக்கு அது உண்மையிலேயே ஏ2 வகைப்பால்தானா என்ற குழப்பம் இருந்து வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் ஏ2 பால்தான் எனக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளன. இச்சிரமத்தைத் தவிர்த்துப் பாலின் வகையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு பிரத்யேக அட்டையை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த அட்டையில் உள்ள ஸ்பாஞ்சில் ஒரு சொட்டுப் பாலை விட்டுக் காற்றில் நன்றாகக் காயவிட்டு 72 மணிநேரத்துக்குள், எங்கள் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுவந்து விட்டால், டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் அந்தப்பாலின் வகையைக் கண்டறிந்து சொல்லிவிடுவோம். இதன் மூலம் சுத்தமான நாட்டு மாட்டுப் பால் எனச் சொல்லிச் சந்தைப்படுத்த முடியும். இதே அட்டையில் காளை மாடுகளின் ரத்தத்தில் ஒரு சொட்டு விட்டு இதே முறையில் பரிசோதித்து... ஏ1 வகை காளைகளா, ஏ2 வகை காளைகளா என்றும் கண்டறிய முடியும். இந்த அட்டையின் விலை 275 ரூபாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

அடுத்ததாக, பல்வேறு காரணங்களால் சினைப்பருவத்துக்கு வராத மாடுகளை விரைவில் சினைப் பருவத்துக்கு வர வைக்கும் வகையில் ‘நானோ புரோஜெஸ்டீரான்’ என்ற பொருளையும் கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் மாடுகளை 6 நாள்களில் சினைப் பருவத்துக்குக் கொண்டு வர முடியும்.

இது ‘சுளுக்குப் பேண்டேஜ்’ போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை மாடுகளின் முன்னங்காலில் குளம்புக்கும், முழங்காலுக்கும் இடையே அமையுமாறு ஒட்டி... கீழே விழாமல் இருக்கப் பிளாஸ்டிக்கால் ஆன டேப் கொண்டு கட்டிவிட வேண்டும். இந்தப் பேண்டேஜில் உள்ள நானோ வேதிப்பொருள்கள் தோலின் வழியாக மாட்டின் கர்ப்பப் பைக்குள் சென்று ஹார்மோன்களைத் தூண்டும்.

இதன் மூலம், மாடு சினைப்பருவத்தை அடையும். இதைக்கட்டிய 7-ம் நாளில் செயற்கைக் கருவூட்டல் செய்யலாம்.

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

முன்பு இந்த ஹார்மோன் சிகிச்சையை மருத்துவர் மூலமாகத்தான் அளிக்க முடியும். அதற்கு 3 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்த நானோ புரோஜெஸ்டீரானின் விலை 450 ரூபாய்தான். இதை விவசாயிகளே எளிதாக மாடுகளின் கால்களில் கட்டிவிட முடியும். கிட்டத்தட்ட 500 மாடுகளில் இதைப் பரிசோதனை செய்த பிறகுதான் வெளியிட்டு இருக்கிறோம்” என்றார்.

இப்பொருள்களை ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கும் கால்நடை மருத்துவப் பயன்பாடு சார் பரிமாற்றத் தளத்தின் திட்ட இயக்குநர் தினகர்ராஜ் மற்றும் திட்ட அலுவலர் மு.ராமன் ஆகியோரிடம் பேசினோம். “நாட்டு மாடுகளின் ஏ2 வகை நாட்டு மாட்டுப்பால் சத்தானது என்றாலும், உயர்ரக வெளிநாட்டு மாடுகளில் ஏ2 புரதம் இல்லையென்றும் சொல்லி விட முடியாது.

சில வெளிநாட்டு ரகங்களிலும் ஏ2 புரதங்கள் இருக்கின்றன. ஆனால், நம் நாட்டு ரக மாடுகளோடு ஒப்பிடும்போது, வெளிநாட்டு மாடுகளின் பாலில் ஏ2 புரதம் 50% அளவு குறைவாகத்தான் இருக்கும்.

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள், தூய வெளிநாட்டு மாடுகள் என மூன்று வகையான மாடுகளைப் பண்ணையாளர்கள் வளர்க்கிறார்கள். இந்த மூன்று வகைகளையும் சரியாக அடையாளம் காண்பதற்காகத்தான் இந்தப் பால் சோதனையிடும் அட்டை. சந்தையில் நாட்டு மாடு என்று சொல்லி கலப்பின மாடுகளை விற்பனை செய்து விடுவார்கள்.

இதுபோன்ற கலப்பினங்களை இந்த அட்டை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம். நாட்டு மாடு வாங்குவோர், இந்த அட்டையைப் பயன்படுத்தி மாட்டின் வகையை உறுதிப்படுத்த முடியும்.

நானோ புரோஜெஸ்டீரானும் விவசாயிகளுக்கு அதிகளவு பயன்தரக்கூடிய பொருள். இதை எருமை மாடுகளுக்கும் பயன்படுத்தலாம். இப்பொருள்களைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை மருந்தகங்களில் விற்பனை செய்ய இருக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு: திட்ட இயக்குநர்,
மத்தியப் பல்கலைக்கழக ஆய்வுக் கூடம்,
கால்நடை மருத்துவப் பயன்பாடு
சார்பரிமாற்ற தளம், இரண்டாவது மாடி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை,
சென்னை - 600 051.
தொலைபேசி எண்கள்:
044 25556276, 25556277.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism