
பெரம்பலூர்: முயல் வேட்டை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முயல் வேட்டைக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முயல் வேட்டை திருவிழா பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ்வருடப்பிறப்பு அன்று முயல் வேட்டை சென்ற லாடபுரம் கிராமத்தினருக்கும், பாளையம் கிராமத்தினருக்கும் இடையே தகறாறு ஏற்ப்பட்டது. அது கோஷ்டி பூசல், வீடுகளுக்கு தீ வைப்பு என பெரிய கலவரமாக வெடித்தது. இந்நிலையில் முயல் வேட்டை திருவிழாவிற்கு மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் வடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஊர்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு பாரம்பரிய முயல் வேட்டை திருவிழா என்ற பெயரில், இயற்கை சூழலில் வாழ்ந்து வரும் முயல்களை வேட்டையாடுவது தொடர்கிறது. இது குற்றமாகும்.
##~~## |