Published:Updated:

இப்படியும் பண்ணலாம் விவசாயம்… அசத்தும் தமிழக விவசாயிகள்!

தமிழக விவசாயிகள்!

VIKATAN20 <- இந்த சீக்ரெட் referral கோடை பயன்படுத்தி APPAPPO ஆண்ட்ராய்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக ரூ.20 மதிப்புள்ள ரீடிங் கிரெடிட்ஸ் இலவசம்!

இப்படியும் பண்ணலாம் விவசாயம்… அசத்தும் தமிழக விவசாயிகள்!

VIKATAN20 <- இந்த சீக்ரெட் referral கோடை பயன்படுத்தி APPAPPO ஆண்ட்ராய்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக ரூ.20 மதிப்புள்ள ரீடிங் கிரெடிட்ஸ் இலவசம்!

Published:Updated:
தமிழக விவசாயிகள்!

மிழ் மக்களுக்கு எப்போதுமே புதிய விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதில் மிக அதிக ஆர்வம் இருக்கும். அப்பப்போ ஆப்பில் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகளில் விவசாயம் தொடர்பான இந்த ஐந்து கட்டுரைகளும் இடம்பிடித்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை அதிகம் படித்து பகிர்ந்தது இளைய தலைமுறையினரே என்பதுதான் இங்கு இன்ட்ரஸ்ட்டிங்! தென்னைநார்க் கட்டி! - பணம் தரும் நுட்பம்!

ஜெகதீசன்
ஜெகதீசன்

கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அடுத்துள்ள வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசனை உங்களுக்கு தெரியுமா? வித்தியாசமாக பிசினஸ் ஐடியா பிடித்து, அசத்தலான லாபம் பார்த்தவர். அப்பப்போவில் இவரைப் பற்றிய கட்டுரை ஓராண்டுக்கு முன்பே பதிந்துவிட்டாலும், இன்றும் ரீடிங்/ஷேரிங்கிலும் இருக்கிறது.  தினமும் 10 டன் அளவுக்குக் காயர் பித் தயாரிக்கிறார். அதில் இருந்து மட்டும் தினமும் இவர் பார்க்கும் லாபம் மட்டும் 8,000 ரூபாய். இவருடைய சக்ஸஸ் ஃபார்முலாவை அப்பப்போவில் படியுங்கள்!

  பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!

தனசுந்தர் கார்த்திக்
தனசுந்தர் கார்த்திக்

யற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறியவர்களும், இயற்கை விவசாயத்தில் இறங்கிய இளைஞர்களும் ஏராளமானோர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசுந்தர் கார்த்திக். இணையத்திலேயே இயற்கை விவசாயம் கற்க ஆரம்பித்து நம்மாழ்வாரைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயத்துக்கு உண்டான பயிற்சியை முறையாகக் கற்றுக்கொண்டவர். மழை நீரை மண்ணில் சேகரமாக்க உதவும் கோடை உழவு பத்தி அழகா அப்பப்போல சொல்லியிருக்கார். படிச்சுப் பாருங்க!   குறைவான செலவு... நிறைவான லாபம்! - நம்மாழ்வார் வழியில் செழிக்கும் பண்ணை!

மாலினி
மாலினி

நாமளே விளைய வெச்சு சாப்பிடுறப்ப கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை”ன்னு சொல்றாங்க திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாலினி. நம்மாழ்வார் வழியில் இவரது எட்டு ஏக்கர் பண்ணை செழிக்கிறது. ‘தற்சார்பான விவசாயம், தற்சார்பான வாழ்க்கை’க்கு இவங்க சொல்ற டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு பயன்படும்!

  தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை!

மாசிலாமணி
மாசிலாமணி

சாதாரண பனை மரம் தெரியும்… யாழ்ப்பாணப் பனை தெரியுமா? மரங்களின் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடிச்சிருக்கும். நடுவுல மெலிஞ்சுருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோட ஓலைகள் பூ விரிஞ்ச மாதிரி பார்க்க அழகா இருக்கும்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இந்த வகை பனை மரங்களை அதிகம் பார்க்கலாம்! இப்பகுதியைச் சேர்ந்த  பனை விவசாயி விஜயராமனும், யாழ்ப்பாணப் பனை விதைகளை அதிகளவில் நடவு செய்திருக்கும் ‘எழில்சோலை’ மாசிலாமணியும் இந்தப் பனை மரங்களைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறார்கள்… அப்பப்போல படிச்சுப் பாருங்க!

  ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை!

கே.சம்பத்குமார்
கே.சம்பத்குமார்

  ஜீரோ பட்ஜெட் விவசாயிகளுக்கான முக்கிய இடுபொருள் ஜீவாமிர்தம்தான். சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனம் செய்யும் விவசாயிகள் ஜீவாமிர்தத்தை வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும். வடிகட்டுவதற்குப் பல முறைகள் இருந்தாலும்... வட இந்திய விவசாயிகள் பயன்படுத்தும் ஓர் எளிய முறையைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தி நல்ல பலன் பார்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி முனைவர் கே.சம்பத்குமார். “நம்ம நிலத்துல என்னென்ன சாத்தியமோ அதையெல்லாம் செயல்படுத்தி, வருமானத்தை உண்டாக்கிட்டா, விவசாயத்துல கண்டிப்பா லாபம்தான்” என்கிறார் சொல்லும் சம்பத்குமார். அப்பப்போ அப்ளிகேஷனில் வாசகர்களால் அதிகம் பகிரப்பட்ட கட்டுரைகளில் இவருடையதும் ஒன்று!

விகடன் வாசகர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!

VIKATAN20 <- இந்த சீக்ரெட் referral கோடை பயன்படுத்தி APPAPPO ஆண்ட்ராய்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக ரூ.20 மதிப்புள்ள ரீடிங் கிரெடிட்ஸ் இலவசம்!

APPAPPO ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்! -> http://bit.ly/2R6vOUi