Published:Updated:

விருதுநகர் அருகே கிணற்றுக்குள் விழுந்த மானை வனத்துறையினர் போராடி மீட்டனர்!

விருதுநகர் அருகே கிணற்றுக்குள் விழுந்த மானை வனத்துறையினர் போராடி மீட்டனர்!
விருதுநகர் அருகே கிணற்றுக்குள் விழுந்த மானை வனத்துறையினர் போராடி மீட்டனர்!

திருவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பூரிபாறைக்குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண்  புள்ளி மானை தீயணைப்பு  துறையினர் உயிருடன் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ளது. மலைப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. மலைப்பகுதியில் வாழும் உயிரினங்கள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்புகளுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் கூமாபட்டி அருகே பூரிபாறைக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் விழுந்த மான் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட தோப்பின் உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கயிற்றை கட்டி மானை மீட்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் மான் மீட்கப்பட்டது. மானின் உடலில் ஒரு சில இடங்களில் காயம் இருந்ததால் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

காயம் இருந்ததால் யாரேனும் மானை வேட்டையாட முயன்றார்களா? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.