Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

300 தேனீப் பெட்டிகள்... மாதம் ரூ. 43,000பண்ணைத்தொழில்

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

300 தேனீப் பெட்டிகள்... மாதம் ரூ. 43,000பண்ணைத்தொழில்

Published:Updated:
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப்பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத் தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில், தேனீக்களை வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி வரும் அருள் சகாய ராணி பற்றிப் பார்ப்போம்.


திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் சகாய ராணி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ரெட்டியப்பட்டி, பித்தளைப்பட்டி, சூசையார்புரம் ஆகிய பகுதிகளில், தனியார் தோட்டங்களில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்துத் தேன் உற்பத்தி செய்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

ஒரு காலை வேளையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் அருள் சகாய ராணியைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்துலதான் பிறந்தேன். சின்ன வயசுல இருந்தே விவசாய வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். என் கணவர் குடும்பத்துக்கும் விவசாயம்தான் தொழில்.  பொன்னிமாந்துறை கிராமத்துலதான் எங்களுக்கு வயல் இருக்கு.

சீசனைப் பொறுத்தும், தண்ணி கிடைக்கிறதைப் பொறுத்தும் அதுக்கேத்த பயிர்களைச் சாகுபடி செஞ்சுட்டுருக்கோம். திண்டுக்கல் நேருஜி நகர்ல டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.-ங்கிற (DMSSS- Dindigul Multipurpose Social Service Society- திண்டுக்கல் பல்நோக்குச் சமூகச் சேவை சங்கம்) தொண்டு நிறுவனம் இருக்கு. அந்த நிறுவனம் மூலமா எங்க கிராமத்துல சுய உதவிக்குழுக்களை ஆரம்பிச்சுருக்காங்க. நானும் அப்படி ஒரு சுய உதவிக்குழுவுல இணைஞ்சேன். எங்க குழுவுக்குப் பெயர், ‘விண்மீன் பெண்கள் சுய உதவிக்குழு’. அதுக்கு நான்தான் தலைவியா இருக்கேன். டி.எம்.எஸ்.எஸ்.எஸ் மூலமா எங்களுக்குக் கடன் வசதி ஏற்பாடு பண்ணித் தர்றாங்க. சிறு தொழில் செய்றதுக்கான பயிற்சி எல்லாம் கொடுத்துட்டுருக்காங்க. அதுல ஒரு பகுதியா தேனீ வளர்ப்புக்கான பயிற்சியை ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

அந்தப்பயிற்சியில நான் கலந்துக்கிட்டுப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேடம்தான் எங்களுக்குத் தேனீ வளர்ப்புப் பயிற்சி கொடுத்தாங்க.பயிற்சி முடிஞ்சதும் எங்க குழுவுல இருக்கிற 10 பேருக்கும் ஆளுக்கு 2 பெட்டிங்கிற கணக்குல 20 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் கொடுத்தாங்க.

எங்க வயல்ல தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைக்கிற மாதிரியான சூழல் கிடையாது. இந்தப் பெட்டிகளை நிழல்லதான் வைக்கணும். எங்க வயல்ல மரங்கள் இல்லைங்கிறதால, எனக்குத் தெரிஞ்சவங்களோட மாந்தோப்புல வெச்சோம்” என்ற அருள் சகாயராணி, தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அவற்றைக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்தார்.“பயிற்சியில ஜோஸ்பின் மேடம் சொல்லிக்கொடுத்த மாதிரி, தேனீ வளர்ப்புப் பெட்டிகளைப் பராமரிச்சுட்டுருந்தோம்.

கொஞ்ச நாள் கழிச்சு பெட்டியில இருந்து தேனைச் சேகரிச்சோம். அப்போ ஒவ்வொரு பெட்டியிலயும் அரைக்கிலோ, முக்கால் கிலோ அளவுல தேன் கிடைச்சது. தேனீக்களும் ஆரோக்கியமா இருந்தது. அதுக்கப்புறம், பெட்டிகளைப் பெருக்கலாம்னு முடிவு பண்ணினோம். கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்டிகளைப் பெருக்கி ஒரே வருஷத்துல 100 பெட்டிகளாக்குனோம். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

அப்புறம் ஒரே இடத்துல அவ்வளவு பெட்டிகளையும் வைக்க முடியாதுங்கிறதால, தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கனு பேசி, அவங்க தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்க ஆரம்பிச்சோம்.

இப்போ மொத்தம் 300 தேனீ வளர்ப்புப் பெட்டிகளை 4 இடங்கள்ல உள்ள தோட்டங்கள்ல வெச்சுருக்கோம்.தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைக்கிறதுக்கு வாடகையெல்லாம் கிடையாது. தென்னை, மா, சப்போட்டா மரங்களுக்கு இடையிலதான் பெட்டிகளை வெச்சுருக்கோம்.

தேனீக்களால அவங்க தோப்புகள்ல அயல் மகரந்தச்சேர்க்கை நல்லா நடந்து மகசூல் அதிகரிக்குது. அதனால, அவங்க சந்தோஷமா தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைக்கிறதுக்கு அனுமதி கொடுக்குறாங்க. அதில்லாம ஒவ்வொரு முறை தேன் எடுக்குறப்பவும் அந்தத் தோட்டத்துக்காரங்க வீட்டுத் தேவைக்குக் கொஞ்சம் தேன் கொடுத்துடுவோம்” என்ற அருள் சகாய ராணி, விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

“மொத்தம் வெச்சுருக்குற 300 பெட்டிகள்ல சில பெட்டிகள் சேதமடைஞ்சுடுச்சு. சில பெட்டிகள்ல தேனீக்கள் ஓடிடுச்சு. அந்தப் பெட்டிகள்ல புதுசா தேனீக்களை வளர்க்க ஏற்பாடு பண்ணிட்டுருக்கோம். பெட்டிகளைத் திறந்து அடைகள்ல இருக்குற துளைகள் முழுக்கத் தேன் இருந்தா, அதைச் சேகரிப்போம். கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது நாள்களுக்கு ஒருமுறை தேன் சேகரிக்கிறோம். அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோவுக்குக் குறையாம தேன் கிடைக்குது. சில சமயங்கள்ல மாசத்துக்கு 200 கிலோவுக்கு மேலகூடக் கிடைக்கும். நல்லா மழை பெய்ஞ்சு செடிகள், மரங்கள்ல பூக்கள் நிறைய இருந்தா சீக்கிரமே அடைகள் நிறைஞ்சுடும். தேனும் நிறையக் கிடைக்கும். இப்போ இந்தப்பக்கமெல்லாம் கடுமையான வறட்சி. தோட்டங்களுக்குச் சரியா தண்ணி பாய்ச்ச முடியுறதில்லை. இந்த மாதிரி வறட்சி காலங்கள்ல தேன் கிடைக்கிற அளவு குறையும். எப்படிப் பார்த்தாலும், மாசத்துக்கு 150 கிலோவுக்குக் குறையாம தேன் கிடைச்சுட்டுருக்கு.

நாங்க தேனை எடுத்து, அப்படியே டி.எம்.எஸ்.எஸ்.எஸ். அமைப்புக்குக் கொடுத்துடுவோம். அவங்க அங்க தேனைக் காய்ச்சி, பதப்படுத்தி நீண்ட நாள்கள் தாங்குற மாதிரி பக்குவப்படுத்தி விற்பனை செய்றாங்க.

நாங்க ஒரு கிலோ பதப்படுத்தாத தேனை 300 ரூபாய்னு டி.எம்.எஸ்.எஸ்.எஸ். அமைப்புக்குக் கொடுக்குறோம். அந்த வகையில 150 கிலோ தேன் மூலமா மாசம் 45,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. தேனீ வளர்ப்புப் பெட்டி வாங்குறதுக்கான ஆரம்பக்கட்ட முதலீடு மட்டும்தான் இதுல செலவு. பல்லிகள், எறும்புகள் ஏறாம இருக்கக் கிரீஸ், வேப்பெண்ணெய் மாதிரியான பொருள்களை வாங்கி, அப்பப்போ தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வெச்சுருக்குற ஸ்டாண்ட்ல தடவிவிடணும்.

இதுக்கு மாசம், 500 ரூபாய் அளவுல செலவாகும். போக்குவரத்துச் செலவு 1,500 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் மொத்தச் செலவு 2,000 ரூபாயைத் தாண்டாது. மத்தபடி வேற செலவே கிடையாது. அந்த வகையில செலவெல்லாம் போக மாசம் 43,000 ரூபாய் லாபம் கிடைச்சுட்டுருக்கு” என்ற அருள் சகாயராணி நிறைவாக,

“தேன் எடுத்து, நாங்களே பதப்படுத்தி விற்பனை செஞ்சா ஒரு கிலோ தேனை 400 ரூபாய்ல இருந்து 800 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். ஆனா, எங்களுக்குப் பயிற்சி கொடுத்ததோடு பெட்டிகளை வாங்கிக் கொடுத்தும் அதைப் பெருக்கிறதுக்கு உதவி செஞ்சதும்  டி.எம்.எஸ்.எஸ்.எஸ் அமைப்புதான். அதில்லாம தேன் பதப்படுத்துற வேலைகளுக்கும் எங்களை மாதிரிப் பயிற்சி எடுத்தவங்களைத்தான் பயன்படுத்துறாங்க.

அதுக்காகத் தனியா சம்பளமும் கொடுத்துடுறாங்க. அதனாலதான் நாங்க டி.எம்.எஸ்.எஸ்.எஸ். அமைப்புக்கே எங்களோட தேனைக் கொடுத்துட்டுருக்கோம். சுத்தமான தரமான தேனுக்கு நிறையத் தேவை இருக்கு. பழ மரங்கள் இருக்குற தோப்புகள்ல, தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைக்கிறப்போ மகசூல் அதிகரிக்கிறதோடு, கூடுதல் வருமானமும் கட்டாயம் கிடைக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு, அருள் சகாய ராணி, செல்போன்: 86755 68899

ஜி.பிரபு - படங்கள்:வீ.சிவக்குமார்

தேனீக்களின் வாழ்க்கை!

ரா
ணித் தேனீதான், ஒரு தேன்கூட்டினையே நிர்வகிக்கும் தலைவி. இது ஆண் தேனீக்களைவிட உருவத்திலும் பெரிதாக இருக்கும். ராணித்தேனீக்குக் கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவது, கூட்டைக்கண்காணிப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை மட்டும்தான் வேலைகள். வேலைக்காரத் தேனீக்கள் மற்றும் ஆண் தேனீக்கள் ராணி இடும் கட்டளைகளுக்கு ஏற்பத்தான் செயல்படுகின்றன. ராணித்தேனீயின் ஆயுள்காலம் 3 ஆண்டுகள். மற்ற தேனீக்களின் ஆயுள்காலம் 60 நாள்கள்தான். ராணித்தேனீ ராயல் ஜெல்லி என்ற உணவை எடுத்துக் கொள்வதுதான், அதன் ஆயுள் நீட்டிப்புக்குக் காரணம். ராயல் ஜெல்லி 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வயதுடைய தேனீக்களின் உடலில் சுரக்கும் புரோட்டீன் நிறைந்த திரவம். இதைச் சாப்பிடுவதால்தான் ராணித்தேனீ அதிக வலிமை பெற்று, ஆண் தேனீயுடன் கூடி, கிட்டத்தட்ட ஒரு லட்சம் முட்டைகள்வரை இடுகிறது. ராணியுடன் இனச்சேர்க்கை செய்யும் ஆண் தேனீ இனச்சேர்க்கை முடிந்தவுடன் இறந்துவிடும். 

கூட்டில் உள்ள ராணீதேனியைத் தவிர மீதி அனைத்துத் தேனீக்களுமே வேலைக்காரத்தேனீக்கள்தாம். அவற்றின் வயதுக்கேற்ப அவை செய்யும் வேலைகள் மாறுபடும். 1 நாள் முதல் 3 நாள்கள் வயதுடைய தேனீக்கள், தேன்கூட்டைச் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்கின்றன. 4 நாள்கள் முதல் 6 நாள்கள் வயதுள்ள தேனீக்கள் தேன் துகள்களைக் கூட்டில் அடுக்கும் வேலைகளைச் செய்கின்றன. 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வயதுடைய தேனீக்கள் ராணித்தேனீக்கான ராயல்ஜெல்லியை உருவாக்கி, அதை ராணித்தேனீக்கு ஊட்டிவிடும் பணியைச் செய்கின்றன. 14 நாள்கள் முதல் 21 நாள்கள் வயதுடைய தேனீக்கள்தாம், தேன்கூட்டைக் கட்டுகின்றன. 21 நாள்கள் முதல் 23 நாள்கள் வயதுடைய தேனீக்கள் மருத்துவத் தேனீக்கள், சிப்பாய் தேனீக்கள் மற்றும் பிணம் தூக்கி தேனீக்கள் என மூன்று குழுக்களாகப் பிரிந்து பணிகளைச் செய்கின்றன.

மருத்துவத் தேனீக்கள், காயமடைந்த தேனீக்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன. சிப்பாய் தேனீக்கள் கூட்டைப் பாதுகாக்கின்றன. தேன்கூட்டைச் சீண்டுபவர்களைப் பறந்து சென்று கொட்டுபவை சிப்பாய் தேனீக்கள்தாம். கூடுகளில் இறந்த தேனீக்களைக் கூட்டுக்கு வெளியில் கொண்டு வந்து போடும் பணியைப் பிணம் தூக்கும் தேனீக்கள் செய்கின்றன.

23 நாள்கள் முதல் 25 நாள்கள் வயதுடைய தேனீக்கள், தங்களுக்கான உணவு எங்கிருக்கிறது என்று பார்த்து வந்து சொல்லும் தகவல் தொடர்புத் தேனீக்கள். 25 நாள்கள் முதல் 60 நாள்கள் வயதுடைய தேனீக்கள்தாம், வயல்வெளித் தேனீக்கள்.

இவை பறந்து சென்று தேனைச் சேகரித்து வருகின்றன. ஒரு தேனீ தனது வாழ்நாளில் 1 டீஸ்பூன் அளவு தேனை மட்டும்தான் சேகரிக்கும். ஒரு தேனீ கிட்டத்தட்ட 50,000 மலர்களில் அமர்ந்து தேனைச் சேகரிக்கிறது. வயலில் உள்ள அத்தனை மலர்களிலும் மகரந்தச்சேர்க்கை நடக்கத் தேனீக்கள்தாம் முக்கியக் காரணமாக இருக்கின்றன.

தெம்பு தரும் தேனீ வளர்ப்பு!

தே
னீ வளர்ப்பு குறித்து அருள் சகாய ராணிக்குப் பயிற்சி அளித்த ஜோஸ்பினிடம் பேசினோம். “தோட்டக்கலைத்துறை, தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மூலமாவும், தனிப்பட்ட முறையிலயும் தேனீ வளர்ப்புக்கான பயிற்சி கொடுத்துட்டுருக்கேன். என்னோட பண்ணையில கிட்டத்தட்டப் பத்து வருஷமா பயிற்சி கொடுத்துட்டுருக்கேன். என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டவங்கதான் அருள் சகாய ராணி. அவங்க ரொம்ப ஆர்வமா நல்ல முறையில தேனீக்களைப் பராமரிச்சுட்டுருக்காங்க. அப்பப்போ ஏதாவது சந்தேகம்னா என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குறாங்க. அவங்க வெச்சுருக்குற 300 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு 150 கிலோ தேன் எடுக்க முடியும்கிறது சரியான கணக்கு. ஆனா, அவங்களுக்கு அதிகத் தேவை இருக்கு. அவங்களோட தேவையைப் பொறுத்து நானும் ‘ரா ஹனி’யை (பதப்படுத்தாத தேன்) அவங்களுக்குச் சப்ளை பண்ணிட்டுருக்கேன்” என்ற ஜோஸ்பின், தேனீ வளர்ப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்!

“தேனீ வளர்ப்புல இறங்குறதுக்கு முன்னாடி முறையான பயிற்சி அவசியம். தேனீக்களைப் பத்தின புரிதலும் சரியான பராமரிப்பும் இருந்தாத்தான், நல்ல முறையில தேன் எடுக்க முடியும். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைக்கப்போற தோட்டத்தின் சுற்று வட்டாரத்துல தேனீக்களுக்குத் தேவையான உணவு இருக்குறதை உறுதிப்படுத்திக்கணும். தேனீப் பெட்டிகளை நிழலான இடங்கள்லதான் வைக்கணும். ஒவ்வொரு வருஷமும் தேன் அடை, ராணித்தேனீ எல்லாத்தையும் மாத்தணும். செப்டம்பர் மாசத்துல இருந்து நவம்பர் மாசம் வரை மழைக்காலமா இருக்கும்.

அந்தக் காலங்கள்ல தேனீக்களால உணவு தேட முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல நாமதான் அதுக்கு உணவு கொடுக்கணும். உணவுக்காகப் பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை. கொஞ்சம் சர்க்கரையைத் தண்ணீரில் கரைச்சு, ஒரு கொட்டாங்குச்சியில் ஊத்தி பெட்டியில் வெச்சுட்டாப் போதும். இந்த மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களுக்குத்தான் பயிற்சி அவசியம். ஆரம்பத்துல 5 பெட்டிகள்ல இருந்து 10 பெட்டிகள்வரை வெச்சு... அதுல எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு அதுக்கப்புறம்தான் பெட்டிகளை அதிகப்படுத்தணும்.

தேனீப்பெட்டிகளைப் புன்னை மரத்துலயும், பெட்டியின் உள்ள இருக்குற சட்டங்களைத் தேக்கு மரத்துலயும் செய்யணும். நாமே பெட்டிகளைத் தயார் செஞ்சுக்கிட்டா செலவு குறையும். ஒரு பெட்டி தயாரிக்க, 500 ரூபாய்ல இருந்து 1,200 ரூபாய் வரை செலவாகும். பெட்டியை 5 வருஷம்வரை வெச்சுருக்க முடியும். தரையிலிருந்து இரண்டு அடி உயரம் இருக்குற மாதிரி ஸ்டேண்ட் செஞ்சு வெச்சு, அது மேலதான் தேனீ வளர்ப்புப் பெட்டியை வைக்கணும். பெட்டியை ஸ்டேண்டோட சேர்த்து நல்லா கட்டிடணும். ஸ்டேண்டோட கால்களைச் சுத்தி தண்ணீர் இருக்குற மாதிரி ஏற்பாடு செய்யலாம். வேப்பெண்னெய் அல்லது கிரீஸை ஸ்டாண்டோட கால்கள்ல தடவிவிடலாம். இப்படிச் செய்யும்போது, எறும்பு, பல்லி மாதிரியான எதிரிகள் பெட்டிக்குள்ள போறதைத் தடுத்துடலாம்.

ஒவ்வொரு பெட்டிக்கும் ஆறு அடிக்கு மேல இடைவெளி இருக்கணும். ஒரே இடத்துல 20 பெட்டிகள்வரை வைக்கலாம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளைப் புதர் நிறைஞ்ச இடங்கள்ல வைக்கக் கூடாது. ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கிற நிலங்கள், பக்கத்துல இருந்தா தேனீக்களை நல்ல முறையில வளர்க்க முடியாது. பெட்டிகளை இரவு நேரத்துலதான் இடமாற்றம் செய்யணும். அடிக்கடி இடமாற்றம் செய்யவும் கூடாது.

எள், வாழை, கடுக்காய், புங்கன், புளி, வேம்பு, மா, நாவல், எட்டி, தான்றி, நீர் மருது, ரப்பர், இலவு, அகத்தி, இலுப்பை, இலந்தை, சோயா, குதிரைமசால், காபி, தும்பை, வெங்காயம், காரட், கொத்தமல்லி, சூரியகாந்தி, உளுந்து, துவரை, முருங்கை, புகையிலை மாதிரியான தாவரங்கள் இருக்குற இடங்கள்ல தேனீக்களுக்கு அதிகளவுல தேன் கிடைக்கும்.

பெட்டிகள்ல மேல ஓர் அறை, கீழ ஓர் அறைனு இரண்டு அறைகள் இருக்கும். மேல் அறையிலதான் தேன் சேகரமாகும். கீழ் அறையில குஞ்சுகள், தேனீக்கள் இருக்கும். பெட்டி தயார் செஞ்ச உடனே தேனீக்கள் குடும்பமாக இருக்குற தேனடைகளை வாங்கி, ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கணும். இந்த அடையை ‘ராடு’னு சொல்வாங்க. நம்மகிட்ட இருக்குற தேனீ வளர்ப்புப் பெட்டிகள்ல இருந்தும் ராடுகளை உருவாக்கலாம்.

பெட்டியில் இருக்குற ராணித்தேனீ, தனக்கு வயசாயிடுச்சுன்னா, வேற ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அதை ராணித்தேனீயா உருவாக்கும். வயதான ராணித்தேனீ இறந்துட்டா இளம் ராணித்தேனீ பதவிக்கு வந்துடும். எதிர்பாராதவிதமா, ராணித்தேனீ இறந்துட்டா பணித்தேனீக்களே இன்னொரு ராணித்தேனீயை உருவாக்கிடும். நாம வளர்க்குற பெட்டிகள்ல இருக்குற ராணித்தேனீயை வருஷத்துக்கு ஒரு தடவை மாத்துறது நல்லது. அப்போதான் தேனீக்கள் நிறையப் பெருகும்.

அடையில் அறுங்கோண வடிவத்திலான சின்னத் துளைகள் இருக்கும். இந்தத் துளைகள்லதான் தேனீக்கள் தேனைச் சேகரிச்சு வைக்கும். தேனை உள்ளே வெச்சு அதோட வாசல் பகுதியை மெழுகை வெச்சுத் தேனீக்கள் அடைச்சுடும். இந்தத் துளைகள் முழுசும் அடைபட்டிருந்தா, அதுல இருந்து தேன் எடுக்கலாம். அடைகள் மெழுகால அடைபட்டிருந்தாத்தான் அது பக்குவப்படுத்தப்பட்ட தேன். அடைபட்ட துளைகள்ல இருக்குற தேன் கொஞ்சம் கெட்டித்தன்மையா இருக்கும். அடைபடாத துளைகள்ல இருக்குற தேன் நீர்த்து இருக்கும். அதனால, அடைகள் முழுசும் அடைபட்டிருந்தாத்தான் அதுல இருந்து தேனை எடுக்கணும். தேனைப் பிழிய ஒரு பிரத்யேகமான டிரம் இருக்கு. தேன் அடையில் துளைகளை அடைச்சுருக்குற மெழுகுப்பகுதியை கத்தி மூலமாகச் சுரண்டிட்டு தேன் அடையை இந்த டிரம்முக்குள்ள வெச்சு மெதுவாகச் சுத்துனா தேன் வடிஞ்சுடும். தேன் அடையைக் கையால பிழிஞ்சு எடுத்துட்டா, தேனீக்கள் திரும்ப அடையை உருவாக்க வேண்டியிருக்கும். அதுக்குக் காலத் தாமதம் ஆகும். ஆனா, டிரம்முக்குள்ள வெச்சு சுத்தி தேன் எடுக்குறப்போ அடைக்குப் பாதிப்பு ஏற்படாது. அதனால, தேனீக்கள் திரும்பவும் சீக்கிரமே தேனைச் சேகரிச்சு அடைகளை நிரப்பிடும்.

டிரம்ல சேகரிச்ச தேனை ஒரு பாத்திரத்துல ஊத்தி அந்தப் பாத்திரத்தைத் தண்ணீர் நிரப்புன இன்னொரு பாத்திரத்துக்குள்ள வெச்சு அடுப்புல ஏத்தி சூடுபடுத்தணும். நேரடியா தேன் இருக்குற பாத்திரத்தை அடுப்புல வெக்கக் கூடாது. சூடுபடுத்தின தேனை வடிகட்டிக் கண்ணாடி பாட்டில்கள் அல்லது உயர்தரப் பிளாஸ்டிக் பாட்டில்கள்ல சேகரிச்சு வைக்கலாம்” என்று தெளிவாக சொல்லி முடித்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism