Published:Updated:

`கழுதைப்புலிகள் வந்துவிட்டால் அன்றைக்கு பட்டினிதான்!’ சிறுத்தைப்புலிகளின் சர்வைவல் கதை

 கழுதைப்புலி வந்துவிட்டாலே வேட்டையாடிய இரையைப் போட்டுவிட்டு ஓடிவிடுகிற அளவுக்கு சிறுத்தைப்புலி பயந்த சுபாவம் கொண்டது. அணில்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொல்லுகிற அளவுக்குக் கொடூரமானது.

`கழுதைப்புலிகள் வந்துவிட்டால் அன்றைக்கு பட்டினிதான்!’  சிறுத்தைப்புலிகளின் சர்வைவல் கதை
`கழுதைப்புலிகள் வந்துவிட்டால் அன்றைக்கு பட்டினிதான்!’ சிறுத்தைப்புலிகளின் சர்வைவல் கதை

ர்வைவல் விஷயத்தில் சில உயிரினங்கள் பிறந்ததில் இருந்தே ஓட வேண்டும். சர்வைவலுக்காக சில உயிரினங்கள் அவற்றைப் பிறந்ததில் இருந்தே துரத்தியாக வேண்டும். ஓடுவதும் ஒளிவதும்தான் சர்வைவலுக்கான முதல் தகுதி. ரத்தமும் அதன் வாசனையும்தான் சர்வைவலுக்கான அடையாளம்.

சிறுத்தைப்புலிஎன்கிற பெயரைக் கேட்டாலே கம்பீரமாக இருக்கும். சிறுத்தைப்புலிஒரு சைலன்ட் கில்லர். மிகச் சிறந்த வேட்டையாளன். ஆனால், உண்மையில் சிறுத்தைப்புலியின் சர்வைவல் வாழ்க்கை அவ்வளவு கம்பீரமாக இல்லை. கழுதைப்புலி வந்துவிட்டாலே வேட்டையாடிய இரையைப் போட்டுவிட்டு ஓடிவிடுகிற அளவுக்கு சிறுத்தைப்புலிபயந்த சுபாவம் கொண்டது. அது பயம் என்பதை விடவும், பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விலங்களுக்கும் கழுதைப்புலிகளின் மீது அறுவெறுப்பு உணர்வும், ஒரு ஒவ்வாமையும் உண்டு. தனக்கு நிகரில்லாத ஒருவனிடம் சண்டையிட விலங்குகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. உணவுக்காகக் கொல்வதும், சண்டையிடுவதும் வேறு.   அணில்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொல்லுகிற அளவுக்குக் கொடூரமானது. சிறுத்தைப்புலியின் சர்வைவலில் ஈவு இரக்கம் எல்லாம்  இருப்பதில்லை. பிறந்த குட்டியில் இருந்து நன்கு வளர்ந்த சிறுத்தைப்புலிவரை சர்வைவலுக்காக வல்லவனோடும் போட்டி போட வேண்டும், வல்லவனுக்கு வல்லவனோடும் போட்டி போட வேண்டும்.

பிறந்த ஒரு உயிரின் வாசத்தையும், கொல்லப்பட்ட உயிரின் ரத்த வாசனையையும் காடு யாருக்காகவும் மறைத்து வைப்பதே இல்லை. காடு எல்லாவற்றையும் எல்லாருக்கும் காட்டிக் கொடுத்துவிடுகிற விசித்திரமான உலகம். ரத்த வாசனையையும், பிரசவ வாசனையையும் கண்டுபிடித்து அவற்றை இரையாக்கிக்கொள்ள பல உயிரினங்கள் காத்துக்கொண்டே இருக்கும். அவற்றிடமிருந்து பிறந்த குட்டிகளைப் பாதுகாக்கவே சிறுத்தைப்புலிபல போராட்டங்களை நிகழ்த்த வேண்டும். தன்னுடைய அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால் தாய் தன்னுடைய சிறுத்தைப்புலிக் குட்டிகளை இடம் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சிறுத்தைப்புலிக்கு நன்கு மரம் ஏறத் தெரியும். வாழ்நாளில் பல நாள்களைச் சிறுத்தைப்புலிமரத்தில்தான் கழிக்கும். வேட்டையாடிய விலங்குகளை மரத்தில் வைத்து உண்ணுகிற பழக்கம் அதன் மரபிலேயே இருக்கிறது. ஆனால், பிறந்த குட்டிகளை வைத்துக்கொண்டு மரத்தில் சர்வைவல் என்பது நடக்காத காரியம்.

குட்டிகள் அவையாக சர்வைவ் ஆகிற வரை தாய் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமில்லை. சிறுத்தைப்புலியின் மிகச் சிறந்த ஆயுதமும் பாதுகாப்பும் மற்ற விலங்குகளுக்குத் தெரியாமல் மறைந்திருப்பதுதான். ஏனெனில், மற்ற விலங்குகளின் குட்டிகளைப் பாரபட்சம் பார்க்காமல் வேட்டையாடிய சிறுத்தைப்புலியைப் பழிவாங்க மற்ற விலங்குகள் நேரம் பார்த்துக் காத்துக் கொண்டே இருக்கும். இயற்கை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறுத்தைப்புலி, பபூன் குரங்கு குட்டிகளை எளிதாக வேட்டையாடிவிடும். அதன் குட்டிகளை வேட்டையாடி உணவாக்கிக் கொள்ளும். பபூன் குரங்குகள் முடிந்த வரை போராடும். ஆனால், குட்டிகளை பறிகொடுத்துவிடும். பபூன் என்கிற பெயர் படிப்பதற்குக் காமெடியாகத் தெரியலாம். ஆனால், பபூன் காமெடியான விலங்கு அல்ல. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றவும் சிறுத்தைப்புலியோடு போராடும், சிறுத்தைப்புலியைப் பொறுத்த வரை பபூன் ஒரு ஆபத்தான விலங்கு. சிறுத்தைப்புலிக்குக் குட்டி இருப்பது தெரிந்தால் அதைப் பின்தொடர்ந்து  டிபன்ஸை உடைப்பதுதான் பபூனின் வேலையே.

சிங்கம் எப்போதுமே சிறுத்தைப்புலிக்கு எதிரி, கழுதைப்புலிகள் எப்போதும் சிறுத்தைப்புலியை வெறுப்பேற்றுபவை. ஆனால், பபூன் குரங்குகள் சிறுத்தைப்புலிகளின் அழிவுக்குக் காரணமானவை. பபூனுக்குப் பயந்து சிறுத்தைப்புலிஅதனுடைய குட்டிகளை வேறு வேறு புதர்களுக்கு மாற்றிக் கொண்டே இருக்கும். காட்டைப் பொறுத்தவரை எதிரியின் அடுத்த தலைமுறையைக் காலி செய்வதில்தான் எல்லா விலங்குகளும் கவனமுடன் இருக்கின்றன. அந்த அளவுக்கு ஒன்று இன்னொன்றைப் பாடாய் படுத்தியிருக்கிறது. பபூனுக்குப் பயந்து பாதுகாப்பான இன்னொரு இடத்துக்குக் குட்டியோடு செல்கிற சிறுத்தைப்புலிக்கு அடுத்த சோதனை கழுதைப்புலிகள் மூலம் தொடங்கும். ஏனெனில், சிறுத்தைப்புலியால் கழுதைப்புலிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. கழுதைப்புலிகளால் சிறுத்தைப்புலிபாதிப்படைந்திருக்கிறது. குட்டியைப் பாதுகாக்கிற அதே நேரத்தில் தனக்கான இரையையும் தேடியாக வேண்டும்.

இரை தேடுகிற விஷயத்தில் சிறுத்தைப்புலிஎல்லா விலங்குகளுக்கும் ராஜாவாக இருக்கிறது. மறைந்திருந்து இரையைப் பின் தொடர்கிற வித்தைத் தெரிந்த சிறுத்தைப்புலிஎளிதில் தனக்கான இரையைப் பிடித்துவிடும். பிடித்த இரையை உடனடியாக மரத்துக்குக் கொண்டு சென்று பாதுகாத்துவிடும். மறைந்திருப்பதும், மறைத்து வைப்பதும்தான் சிறுத்தைப்புலியின் சர்வைவல் குணம். இரையைப் பிடித்த அடுத்த ஐந்து நொடிகளில் அதைப் பாதுகாப்பாக மறைத்து வைக்க வேண்டும். வேட்டையாடப்பட்ட விலங்கின் ரத்தம், சிறுத்தைப்புலியின் உணவு டேபிளுக்கு மற்ற விலங்குகளை எளிதாகக் கொண்டு வந்துவிடும். அதிலும் கழுதைப்புலிகள் வந்துவிட்டால் ஆசைக்குக்கூட இறையின் ஒரு பகுதியை சிறுத்தைப்புலியால் உணவாக எடுத்துக்கொள்ள இயலாமல் போய்விடும். இலவச உணவு என்றால் கழுதைப்புலிகள் முதல் ஆளாக வந்து நிற்கும். சிறுத்தைப்புலிவேகமாக ஓடும், தன் எடையைவிட அதிக எடை கொண்ட இரையைக்கூட தூக்கிக்கொண்டு கூட மரம் ஏறிவிடும். ஆனால், கழுதைப்புலிகளுடன் நேருக்கு நேர் சண்டைக்கு எப்போதும் நிற்காது. அப்போதைய தியாகம்தான் சிறுத்தைப்புலியைக் காப்பாற்றும்.

தாய் மிகச் சிறந்த வேட்டையாளன், மிகச் சிறந்த ஆசிரியர். சர்வைவலுக்கான அத்தனை வித்தைகளையும் தாய் தன்னுடைய குட்டிகளுக்கு கற்றுக்கொடுக்கும். ஒரு வயது நிறைவடைந்த குட்டி, அணில்களை வேட்டையாடத் தொடங்குகின்றன. அணில்களைப் பொறுத்தவரை அவை மரத்தில் இருக்கிற இன்னொரு கிளை. அணில்களை வேட்டையாடுவது என்பது சவாலான விஷயம். அவற்றைப் பிடிப்பது சிரமம் ஆனால், அணில் வேட்டை என்பது குட்டிகளுக்கு ஒரு பயிற்சி. இரண்டு வயது ஆனவுடன் முறையான பயிற்சி ஆரம்பிக்கும். இம்பாலா வகை மான்கள், மற்றும் மான்கள்தான் அவற்றின் வேட்டையாடும் பயிற்சிக்கு உதவியாக இருக்கின்றன. தாய் வேட்டையாடி உயிரோடு கொண்டு வருகிற மான்களை வைத்துதான் குட்டிகள் ‘தொழில்’ பழகத் தொடங்குகின்றன. மூன்று வயதில் சிறுத்தைப்புலிகள் தனித்து வேட்டையாடக் கிளம்புகின்றன. பாதுகாப்பு, புத்திசாலித்தனம்,வேகம் இவை மூன்றும்தான் சிறுத்தைப்புலிகளின் சர்வைவலுக்குக் காரணமாக இருக்கிறது. 

காட்டின் மொழியைவிட விலங்குகளின் மொழி இன்னொரு விலங்குக்குத் தெரியாது என்பதே ஒவ்வொரு விலங்கின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. பலம் பொருந்திய விலங்கு ஒன்று வேட்டைக்குக் கிளம்பிவிட்டதைப் பார்க்கிற பலவீனமான ஒரு விலங்கு எழுப்புகிற ஓசை சம்பந்தப்பட்ட விலங்கின் இனத்துக்கு அலாரமாக இருக்கிறது. காட்டில் ஒலிக்கின்ற ஒவ்வொரு உயிரினத்தின் சத்தமும் குரலும் அதனதன் சர்வைவலுக்குத் தொடர்புடையது. சில குரல்கள் கழுதைப்புலிகளின் சர்வைவலுக்குச் சாதகமானவை. 

அவை  அடுத்த பகுதியில்.