Published:Updated:

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!'

காட்டுப்பன்றிகளுக்கு எதிரிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. ஏனென்றால், பன்றிகளைச் சுற்றியிருக்கிற எல்லா விலங்குகளும் அவற்றிற்கு எதிரிகள்தான்.

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை

காட்டுப்பன்றிகளுக்கு எதிரிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. ஏனென்றால், பன்றிகளைச் சுற்றியிருக்கிற எல்லா விலங்குகளும் அவற்றிற்கு எதிரிகள்தான்.

Published:Updated:
`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!'

யற்கை எல்லோரையும் சமமாக நடத்துவதாகச் சொல்கிறது. படைக்கப்பட்ட எந்த உயிருக்கும் தனித்தனியான வாழ்விடமெல்லாம் இல்லை. காட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகத்தில் ``உன்னால் முடிந்தால் பிழைத்துக் கொள்” என்று இயற்கை எல்லோரையும் விட்டுவிட்டது. அதிலிருந்து தப்பி தனக்கென ஓர் இருப்பிடத்தை உருவாக்கிக் கொண்டது மனித இனம் மட்டும்தான். உயிரினங்களின் சர்வைவல் கதைகளில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் காட்டுப் பன்றிகள் துயர வரலாறு கொண்டவை. துயரச் சம்பவங்கள் எல்லாமே துரித நேரத்தில் அரங்கேற்றிக் காட்டும் மாய உலகமாக இருக்கிற காட்டில் இவற்றின் சர்வைவல் எப்போதுமே கேள்விக்குறிதான். 

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை

காட்டுப்பன்றிகள் உணவாக எடுத்துக் கொள்வது புற்களையும் புழு பூச்சிகளையும்தான். எதிரிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. ஏனென்றால், பன்றிகளைச் சுற்றியிருக்கிற எல்லா விலங்குகளும் அவற்றிற்கு எதிரிகள்தான். காட்டில் இருக்கிற ஒன்று இன்னொன்றுக்கு இரை என்கிற அடிப்படை, காட்டு பன்றிகளுக்குப் பொருந்துவதில்லை, எல்லோருக்குமான உணவாகவே காட்டுப்பன்றி இருக்கிறது. Born to run என்று சொல்லுவார்கள் அதன்படி பிறந்ததிலிருந்தே ஓட வேண்டிய கட்டாயத்திற்குள் வாழ்கிற உயிரினங்களில் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு சிறிய தந்தங்களைக் கொண்ட காட்டுப் பன்றிகள் மண்ணுக்குள் வளைதோண்டி அதற்குள் வசிப்பவை. இனப்பெருக்கத்தின்போது நான்கிலிருந்து ஆறு குட்டிகள் வரை ஈனும். காட்டுப்பன்றிகளின் குட்டிகள் piglets என்று அழைக்கப்படுகின்றன. பன்றிகளின் பலமும் பலவீனமும் அவை வசிக்கிற வளைகள்தான். பகலில் பல வழிகளைக் கொண்ட வளைகளில் தங்குகிற காட்டுப்பன்றிகள், இரவில் ஒரு வழி மட்டுமே இருக்கிற வளைகளில் தாங்குகின்றன. ஏனெனில் சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலிகள், செந்நாய்கள் போன்றவை இரவில் இரைதேடக் கூடியவை. ஆறு காட்டுப்பன்றிகள் ஒரே வளையில் தங்கி இருப்பதால் அவற்றின் வெப்பமும் அதனுடைய வாசனையும் மற்ற விலங்குகளுக்கு எளிதில் பன்றிகளின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்துவிடும். அதனால் அவை தங்களின் வளையை ஆழமாகத் தோண்டி பாதுகாப்பாக இருக்கும்படி அமைத்துக் கொள்கின்றன. அப்படியே மற்ற விலங்குகள் கண்டறிந்தாலும் அவ்வளவு எளிதில் வளைக்குள் சென்றுவிட முடியாது. சிங்கங்கள் சிறிது நேர முயற்சிக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிவிடுகின்றன. சிங்கங்கள் எப்போதும் எளிதான முறையில் கிடைக்கும் இரையையே விரும்பும். ஆனால் சிறுத்தைகள் முடிந்த அளவிற்குப் போராடி வளைக்குள் சென்று காட்டுப்பன்றியை வெளியே இழுத்து வந்துவிடும். சிறுத்தையின் உடல்வாகு சிறியதாக இருப்பதால் அவை கடின முயற்சிக்குப் பிறகு காட்டுப்பன்றிகளை வேட்டையாடிவிடுகின்றன.

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை

காட்டுப்பன்றிகளின் குடும்பத்தில் தலைவனாக இருக்கக்கூடிய பன்றி எப்போதும் பின்னோக்கியே தன்னுடைய வளைக்குள் செல்லும், எதிரிகள் யாரவது வந்துவிட்டால் தாக்குவதற்கு ஏற்ற வகையில் அமர்ந்திருக்கும். சிறிய தந்தங்கள் இருந்தாலும் அதனால் காட்டுப்பன்றிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை. எதிரி வளைக்குள் வருகிற நேரத்தில் எல்லாப் பன்றிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கி அமர்ந்திருக்கும். ஒவ்வோர் இரவும் அவற்றிற்கு வாழ்வா சாவா போராட்டமாகவே அமைந்திருக்கிறது. வளைக்குள் இருக்கிற ஆபத்துகளைப் போலவே, வளைக்கு வெளியிலும் மிகப்பெரிய ஆபத்துகள் காத்திருக்கும். குட்டிகள் எப்போதும் தாயுடன் இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பதே தாய் பன்றிக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. குட்டிகள் தாயின் தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருக்கின்றன. அவை பால் குடிப்பதும் விளையாடுவதுமாகவே இருக்கின்றன. இங்கிருந்துதான் அவற்றின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஆபத்துகள் தொடங்குகின்றன.

எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஏதோ ஒரு விலங்குக்கு இரையாகிவிடுகின்றன. பிறக்கிற குட்டிகளில் பாதியே உயிர் பிழைக்கின்றன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை தாய் குட்டிகளுக்குப் பால் புகட்டுகிறது. காட்டுப் பன்றிகள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை உணவிற்காகச் செலவிடுகின்றன. வியர்வைச் சுரப்பிகளின் குறைபாடு காரணமாக, உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க, சேற்றில் புரண்டு உடலில் சேற்றைப் பூசிக்கொள்கின்றன. காட்டுப்பன்றிகள் சர்வைவலுக்கு இயற்கை மிகப்பெரிய துணையாக இருக்கிறது. காட்டிற்குள் ஒலிக்கின்ற சத்தங்களைக் கொண்டு இவை முடிவுகள் எடுக்கின்றன. பன்றிகள் இருக்கிற இடத்திற்கு பலமான விலங்குகள் வர நேர்ந்தால் அணில்கள், பறவைகள் தங்களுடைய குரல் மூலமாக மற்ற விலங்குகளை எச்சரிக்கின்றன. சத்தங்களை வைத்து பன்றிகள் வளைகளுக்குள் சென்று, ஒளிந்துகொள்கின்றன.

`காலம் முழுதும் காரணமே இல்லாமல் ஓடணும்!' காட்டுப்பன்றிகளின் சர்வைவல் கதை

பலமிருப்பவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான், பலவீனமானவன் எப்படியேனும் தன்னைக் காத்துக் கொள்வான் என்கிற அடிப்படையில்தான் காட்டுப்பன்றிகள் தங்களுடைய சர்வைவலை இப்போது வரை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. காலம் முழுவதும் யார் யாரோ துரத்திக்கொண்டே இருப்பார்கள், காரணமே இன்றி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கடந்து காட்டுப்பன்றிகளும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.