Published:Updated:

`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை
`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில், தாம் விரும்பி உண்ணும் புற்களைத் தேடி செங்குத்தான பாறைகள் நிறைந்த ஆபத்தான பகுதியில் காட்டு யானைகள் உலவிவருகின்றன.

`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

 56% வனப்பகுதிகளைக் கொண்ட நீலகிரி மாவட்டம், அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது.மக்கள்தொகைப் பெருக்கம், காடு அழிப்பு, கட்டடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், கடைசிப் புகலிடமும் அசுர வேகத்தில் துண்டாடப்படுகிறது.பல சவால்களை எதிர்கொள்ளும் காட்டு உயிரினங்கள், வாழ்விடங்களைத் தொலைத்து தவித்து வருகின்றன.இன்றைய சூழலில், நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டுமாடு, கரடி இந்த மூன்றும் உணவு தேடி விளை நிலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் முற்றுகையிடுகின்றன. இதனால் அடிக்கடி மனித, வனவிலங்கு மோதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

ஆக்கிரமிப்புகளிலும், இடர்பாடுகளிலும் சிக்கித்தவிக்கும் வன விலங்குகள், அந்தந்த சூழலுக்கு ஏற்ப வாழ தங்களை தகவமைத்துக்கொண்டுள்ளன. உதாரணமாக, காட்டுமாடுகள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் பழக்கம் உடையன. ஆனால், இந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால், தற்போது நள்ளிரவு நேரத்தில் மேய்ச்சலில் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. அதேபோல கோத்தகிரி, கெத்தை போன்ற பகுதிகளில் உள்ள யானைகள், தாம் விரும்பி உண்ணும் லெமன் கிராஸ் எனும் எலுமிச்சைப் புற்களைத் தேடி கால்கள் கூசும் செங்குத்தான மலை உச்சிகளில் உள்ள பாறைகளில் அலைகின்றன. வழக்கமாக, அப்பர் ஹில் எனப்படும் மலையின் மேல் பகுதிக்கு யானைகள் அதிக அளவில் வருவதில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்குதான் உணவு தேடி சில யானைக் கூட்டம் வருவதாக கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை
`பசிக்காக செங்குத்துப் பாறைகளில் பயணம்!’ - நீலகிரியில் யானைகளின் அவலநிலை

 யானைகளைப் படம் பிடித்த மத்தியப்பிரதேச கான்ஹா புலிகள் காப்பக ஹெட் நேட்சுரலிஸ்ட் ஜெஷ்வின் கிங்லி கூறுகையில் ”ஒரு காலத்தில் அதிகம் காணப்பட்ட இந்தவகைப் புற்கள் தற்போது பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. யானைகள் விரும்பி உண்ணும் [லெமன் கிராஸ் ] எலுமிச்சை வகைப் புற்கள் பாறைகள் நிறைந்த மலை உச்சிப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.குறிப்பாக கோத்தகிரி, குன்னூர், கெத்தை, நடுவட்டம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.இதுபோன்ற ஆபத்தான இடங்களில்கூட உணவு தேடும் பழக்கத்தை ஏற்படுத்தித் தகவமைத்துக் கொண்டன இந்த யானைகள்” என்றார்.

இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகையில்,”கடந்த சில ஆண்டுகளில், யானைகளின் உணவு தேடும் முறை மாறிவருகிறது .இதுபோன்ற இடங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதால், சில சமயங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.வனப்பகுதிகளில் களைத் தாவரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன.யானைகளின் எண்ணிக்கையும் மெள்ளக் கூடிவருகிறது. ஆனால், அவற்றுக்குத் தேவையான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் நிலங்களிலும்  சிகை, உண்ணி போன்ற களைத் தாவரங்களை அகற்றி, புற்களை நடவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்’ என்கின்றனர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு